புதுக்கோட்டை மாவட்ட அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தில் தாற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் செ. மனோகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுக்கோட்டை மாவட்ட அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின்கீழ், முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர்அலுவலகத்தில் தாற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில், காலியாக உள்ள 2அசிஸ்டண்ட கம் டாலி மேலாளர், 2 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
முதல் பணிக்கு பட்டப் படிப்பு, டாலி இ.ஆர்.பி, தமிழ், ஆங்கிலம்தட்டெழுத்து சான்றிதழ் மற்றும் முன் அனுபவம் தேவை.
2-வது பணிக்கு பட்டப்படிப்பு மற்றும் தமிழ், ஆங்கிலம் தட்டெழுத்து சான்றிதழ், முன் அனுபவம்தேவை.
இது தொடர்பான விவரங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும்முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத் தகவல் பலகைகளில் ஒட்டப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் அருகேயுள்ளஅனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட அலுவலகத்தில் விண்ணப்பத்தைப்பெற்று நிறைவு செய்து வரும் 24-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக