தருமபுரி, கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதுநிலை தமிழாசிரியர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வில் 90பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கடந்த ஆண்டு முதுநிலை தமிழாசிரியர்பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு நடைபெற்றது.
தருமபுரி
இந்தத் தேர்வில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 61 பேர் தேர்ச்சி பெற்றனர்.இவர்களுக்கு சான்றிதழ் சர்பார்ப்புப் பணி அண்மையில் நிறைவு பெற்றது. இதைத் தொடர்ந்து, இவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குவதற்கானஆன்லைன் கலந்தாய்வு வெள்ளிக்கிழமை தருமபுரி முதன்மைக் கல்வி அலுவலர்அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 61 பேருக்கு பணி நியமனஆணையை முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி வழங்கினார். இதில் 7 பேருக்கு தருமபுரி மாவட்டத்திலேயே பணி கிடைத்தது. மற்றவர்கள்வெளி மாவட்டங்களில் பணியமர்த்தப்பட்டனர்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ஆன்-லைன் கலந்தாய்வில்
மொத்தம் 19 பேருக்கு முதுநிலை தமிழாசிரியர் பணிக்கான
ஆணையை முதன்மைக் கல்வி அலுவலர் மு. ராமசாமி வழங்கினார். இதில் 18
பேர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக