மத்திய அரசு தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வலியுறுத்தியது.
அந்த சங்கம் சார்பில் எழுத்தாளர் அருணாசல சாமிக்கண்ணு எழுதிய
"ஆரோக்கியம் தரும் யோகாசனங்கள்}181' என்ற நூல் வெளியீடு விழா ஓய்வுப் பெற்ற வட்டாட்சியர் கி.ராமானுஜம் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
அரசு அலுவலர்கள் தமிழில் கையொப்பம் இடுவதைக் கட்டாயமாக்க
வேண்டும். தனியார் கல்வி நிறுவனங்களில் தமிழ்ப் பாடத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் தாய் மொழிக் கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும். மத்திய
அரசு தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.
ஆரோக்கியம் தரும் யோகாசனங்கள் 181 என்ற நூலை மருத்துவர் க.ஞானசேகரன் வெளியிட, அதை அரசு சித்த மருத்துவர் ந.தில்லையரசன் பெற்றுக் கொண்டார். விழாவில், முனைவர்கள் கு.கணேசன், பெரு.சுரேஷ், கவிஞர்கள் ரவீந்திரபாரதி, நவகவி, பிரேம்குமார், ஆசிரியர் சின்னக்கண்ணன், கவிமுகிலன், ஆதிமூலம், ஸ்ரீமதிவாணன், கவிமலரவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக