தமிழ்நாடு கணித முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலப்பொதுக் குழுக் கூட்டம் ராசிபுரம் ஞானமணி கல்லூரி வளாகத்தில்ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவர் வி.விஜயகுமார் தலைமை வகித்தார்.
பொதுச் செயலாளர் வி.எஸ்.ராஜா வரவேற்றார். விருதுநகர் மாவட்டம் பள்ளித்
தலைமை ஆசிரியர் வருதராஜ் பாண்டியன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், கணித, வணிக கணிதப் புத்தகங்கள் தயாரிக்கும் போது பாட நேரத்தைக் கருத்தில் கொண்டு தயாரிக்க வேண்டும். மாணவர் நலன் கருதி,தேவையான கணக்குகளை மட்டும் கொடுத்து, அதற்கு மேலான கணக்குகளை சிபிஎஸ்இ., ப்ளஸ் 1, ப்ளஸ் 2 பாடத் திட்டத்தில் உள்ளது போல ஒரு துணை நூல் உருவாக்கி அதில் இடம் பெறச் செய்ய வேண்டும். பிற மாநிலங்களில் உள்ளது போல, அனைத்து வகுப்புகளிலும் பாடத்
திட்டத்தில் உள் மதிப்பெண் முறையை உருவாக்கி, 25 சத மதிப்பெண் வழங்கிடவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், ஞானமணி கல்வி நிறுவனங்களின் தலைவர் டி.அரங்கண்ணல்,மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வை.குமார், மாநிலப் பொருளாளர் டி.எஸ்.ராஜசேகரன், மாநில நிர்வாகிகள் பழனி, சேகர் மற்றும் கணிதமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாவட்ட, மாநில நிர்வாகிகள்,உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக