சனி, 1 பிப்ரவரி, 2014

விடுமுறை காலங்களில் பள்ளி, கல்லூரிகளில் செம்மொழி பயிற்சி

காரைக்குடி அழகப்பா பல்கலை கழகத்தில், மத்தியசெம்மொழி தமிழாய்வு நிறுவனம் சார்பில், தமிழ்த்துறையில், "செவ்வியல் இலக்கியங்களில்தமிழர் வழிபாட்டு மரபுகள்' என்ற தலைப்பில்,பயிலரங்கம் நடந்தது. இதன்நிறைவு விழா நேற்று நடந்தது. இதில், செம்மொழி தமிழாய்வு நிறுவன பதிவாளர்முத்து வேலு கூறியதாவது :
செம்மொழியான, தமிழ் அறிஞர்கள் மத்தியில் மட்டுமே உள்ளது.இளங்கலை, முதுகலை பட்டதாரி மாணவர்களிடம் போய் சேரவில்லை. இதற்காகத்தான் பயிலரங்குகளை நடத்தி வருகிறோம்.தமிழ் இலக்கியங்கள், சாதாரண மக்களுக்கும் சென்றடையும் வகையில்,
இலக்கிய காட்சிகள் குறும்படமாக தயாரிக்கப்பட்டு, கிராம மக்களிடம் திரையிட்டு காட்டப்பட்டு வருகிறது.பத்துப்பாட்டு, எட்டுத்தொகை உள்ளிட்ட இலக்கியங்கள், சி.டி.,யில், பாடல்களாகவும் வெளி வந்துள்ளது. திருக்குறளை மொபைல் போனில் கேட்கும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது இன்னும்ஒரு மாதத்தில் நடைமுறைக்கு வரும். தமிழின் 41 இலக்கியங்கள் இந்திய மொழிகளில்மொழி பெயர்க்கப்பட்டு வருகிறது. திருக்குறளை 22 இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கும்பணி நடந்து வருகிறது. சங்க இலக்கியங்களை இணைய வழியில் பார்வையிடலாம். முதற்கட்டமாக, திருவாரூர் மத்திய பல்கலை கழகத்தில், "எம்.ஏ., செம்மொழி தமிழ்' பாடப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. மற்ற பல்கலைகழகங்களில், இப்பிரிவு தொடங்க கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. பல ஐரோப்பியபல்கலை கழகங்களில், பல நூற்றாண்டுக்கு முன்பே தமிழ் இருந்துள்ளது. பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட
கால சூழ்நிலையில், அது மறைந்துள்ளது. மீண்டும், உலக பல்கலை கழகங்களில், தமிழை பாடமாக்கும்முயற்சி மேற்கொண்டு வருகிறோம். முதற் கட்டமாக ஆக்ஸ்போர்டு பல்கலை கழகத்தில், தமிழ்பாடத்தை இணைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். விடுமுறை காலங்களில், மாவட்டத்துக்கு தலா 10 பள்ளிகள், கல்லூரிகளில், இலக்கிய பயிற்சி பட்டறை நடத்த உத்தேசித்துள்ளோம், என்றார்.


Sent from my iPad

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக