வெள்ளி, 24 ஜனவரி, 2014

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படிக்கும் 1150 ஏழை மாணவர்களுக்கு கல்வி. கட்டணச் சலுகை முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவு


 தமிழக அரசு வெளியிட் டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- மாநிலத்தில் உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி வளர்ச்சி அடைந்தால் மட்டுமே, புதிய புதிய கண்டு பிடிப்புகள், ஆராய்ச்சிகள் போன்றவை வளர்ச்சிப் பெறும். அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கு ஆதாரமாக அமைவது உயர் கல்வியேயாகும்.இத்தகைய உயர்கல்வியின் வளர்ச்சிக்கும், தொழிற் கல்வியின் வளர்ச்சிக்கும் முதல்-அமைச்சர் ஜெய லலிதாவின் தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரில் தனியா ரால் நடத்தப்பட்டு வந்த அண்ணாமலைப் பல் கலைக்கழகத்தினை, பல் கலைக்கழகம் தொடங்கப் பட்டதன் நோக்கம் நிறை வேறும் வகையில் செயல் படவும், முறையாக நிர்வாகம் செய்யப்படுவதற்காகவும், பல்கலைக்கழகத்தின் நிதி நிர்வாகத்தினை சீரமைப் பதற்காகவும், பல்கலைக் கழகத்தின் நிர்வாகத்தினை அரசே தன்னகத்தே எடுத்துக் கொண்டது. இதன் காரணமாக, நடப்புக் கல்வியாண்டில், அண்ணாமலைப் பல் கலைக் கழகத்தில் மருத்து வம், பல் மருத்துவம், பொறியியல், வேளாண்மை மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு முற்றிலும் வெளிப்படையான முறை யில், கல்வித் தகுதி மற்றும் தமிழக அரசின் இட ஒதுக் கீட்டு விதிகளின்படி, மாநில அரசின் கட்டுப்பாட் டிலுள்ள மற்ற பல்கலைக் கழகங்களைப் போல  மாண வர்கள் சேர்க்கை நடை பெற்றது.
இந்த ஆண்டு, மாணவர் சேர்க்கையில், பொருளா தாரத்தில் பின்தங்கிய, குறிப்பாக நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களின் குடும் பங்களிலிருந்து 1,150 மாணவ-மாணவிகள் அண் ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பல்வேறு படிப்பு களில் முதல் தலைமுறை பட்டதாரிகள் என்ற வகையில் சேர்ந்துள்ளனர். இந்தப் பல்கலைக்கழகத் தில், இது வரை மற்ற அரசுப் பல்கலைக்கழகங்களில் பின்பற்றுவது போல் முதல் தலைமுறை பட்டதாரி மாணவ- மாணவியருக்கான கல்வி கட்டணச் சலுகை அளிக்கப்படவில்லை.
 முதல் - அமைச்சர் ஜெயலலிதா மற்ற அரசு பல் கலைக்கழகங்களில் பின் பற்றுவது போல், இந்த பல் கலைக்கழகத்திலும், பொரு ளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களிலிருந்து பயி லும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவ-மாண வியருக்கு கல்வி கட்டணச் சலுகையை வழங்க உத்தர விட்டுள்ளார். இதற்கென 1 கோடியே 66 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள் ளார். இதன் மூலம் இந்த ஆண்டு 1,150 மாணவ மாணவியர் பயன் பெறு வார்கள். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக