செவ்வாய், 28 ஜனவரி, 2014

மீண்டும் வேலை கேட்டு மக்கள் நல பணியாளர்கள் தொடர்ந்த வழக்கு தள்ளிவைப்பு


 மக்கள் நல பணியாளர்கள், கடந்த 2011–ம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து, தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு மக்கள் நல பணியாளர் முன்னேற்ற சங்கத்தின் அப்போதைய பொதுச்செயலாளர் பழனி வழக்கு தொடர்ந்தார்.
 இந்த வழக்கு நீதிபதிகள் சத்தீஸ் குமார் அக்னிகோத்ரி, கே.கே.சசிதரன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு மக்கள் நல பணியாளர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் மதிவாணன், தற்போதை பொதுச்செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், ‘எங்கள் சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளரின் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது. எங்களுக்கு 2011–ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இன்று வரை சம்பளம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
 இந்த மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, வழக்கு விசாரணையை வருகிற பிப்ரவரி 10–ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக