வெள்ளி, 31 ஜனவரி, 2014

"அம்மா' திட்டத்தின் மூலம் 33 லட்சம் மனுக்கள்பெறப்பட்டு நடவடிக்கை

கிராமங்களுக்கே நேரடியாகச் சென்று பொதுமக்களிடம் மனுக்களைப் பெறும்"அம்மா' திட்டத்தின் மூலம் 33 லட்சம் மனுக்கள்பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேரவையில் ஆளுநர் கே.ரோசய்யா ஆற்றிய உரை: கிராமங்களில் உள்ள ஏழை மக்களுக்கு உறுதியளிக்கப்பட்ட அதிகபட்ச சேவைகளை வழங்குவதைக் குறிக்கோளாகக் கொண்ட புதுமையான அம்மா திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அரசு அலுவலர்கள்
வெள்ளிக்கிழமைதோறும் கிராமங்களுக்குச் சென்று பொதுமக்களின் குறைகளை குறுகிய காலத்தில் நிவர்த்தி செய்வதற்காக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் அரசு இயந்திரத்தை மக்களின் வீடுதேடி சென்றடையச் செய்துள்ளது. முதல் கட்டத்தில், அம்மா திட்டம் மாநிலத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்தப்பட்டு,பல்வேறு சான்றிதழ்கள், சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியங்கள், பட்டா மாறுதல்மற்றும் பிற கோரிக்கைகள் உள்ளிட்ட 33 லட்சம் மனுக்கள்
பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்போது, இரண்டாவது கட்டமாக தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் இந்தத் திட்டம் மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.

புதிய வட்டங்கள்:புதிதாக 25 வருவாய் வட்டங்கள்:மக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்குவதற்காக 2013-14-ஆம் ஆண்டில் 25புதிய வருவாய் வட்டங்களை அரசு ஏற்படுத்தியுள்ளது என்றார் ஆளுநர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக