சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சதாசிவத்தை, வழக்கறிஞர் சங்கத் தலைவர், பால்கனகராஜ், செயலர், அறிவழகன், தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத் தலைவர், பிரபாகரன், துணைத் தலைவர் அந்தோணி செல்வராஜ், மூத்த வழக்கறிஞர் காந்தி, பெண் வழக்கறிஞர் சங்கத் தலைவர், பிரசன்னா,
செயலர் நளினி, வழக்கறிஞர்கள் முரளி, விஜயேந்திரன், டைகர் பொன்னுசாமி உள்ளிட்டோர் நேற்று சந்தித்தனர். சந்திப்பின் போது, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், இப்ராகிம் கலிபுல்லா, நாகப்பன் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பு குறித்து, பால்கனகராஜ் கூறியதாவது: தலைமை நீதிபதியை சந்தித்து, எங்கள் கோரிக்கையை தெரிவித்தோம். உணர்வுகளையும் வெளிப்படுத்தினோம். தலைமை நீதிபதி அளித்த
உறுதிமொழி, நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. அவரது, உறுதிமொழியை ஏற்று,
போராட்டத்தை கைவிடுகிறோம். உறுதிமொழி : சாதகமான முடிவு வரும் என, எதிர்பார்க்கிறோம். முன்னதாக, மத்திய சட்ட அமைச்சர்
கபில்சிபலையும் சந்தித்து, மனு அளித்தோம். இவ்வாறு, பால்கனகராஜ் கூறினார். போராட்டம் வாபஸ்
பெறுவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று, கோர்ட் நடவடிக்கைகளில், வழக்கறிஞர்கள்
கலந்து கொள்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக