தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் காலியாகக்கிடக்கும் ஊழியர்களின் இடங்களை நிரப்ப கடந்த 2011–ம்ஆண்டு ஜூலை மாதம் 30–ந்தேதி குரூப்–2 எழுத்துதேர்வு நடத்தப்பட்டது. இதில் நேர்முகத்தேர்வு உள்ள பணிகளும் உண்டு. நேர்முகத்தேர்வு இல்லாமல் தேர்வு செய்யப்படும் பணிகளும் உண்டு. நேர்முகத்தேர்வு பணிக்கு 3 கட்டங்களாக கலந்தாய்வு நடத்தப்பட்டு பணிஅமர்த்தப்பட்டனர்.
அதுபோல நேர்முகத்தேர்வு அல்லாத பணிகளுக்கு 4 முறை கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி அமர்த்தப்பட்டனர். எனவே மீதம் உள்ள பணியிடங்களை நிரப்ப நேர்முகத்தேர்வு உள்ள பணிஇடங்களுக்கு 4–வது கட்ட கலந்தாய்வும் நேர்முகத்தேர்வு அல்லாத பணியிடங்களுக்கு 5–வது கட்ட கலந்தாய்வும் பிப்ரவரி 5 மற்றும் 6 தேதிகளில் சென்னை பாரிமுனையில் உள்ள தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.
கலந்தாய்வுக்கு வரவேண்டியவர்களின் பட்டியல், வரவேண்டிய நாள் விவரம் அனைத்தும் தமிழ்நாடு குரூப்–2அரசுப்பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய செயலாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக