சனி, 25 ஜனவரி, 2014

தருமபுரி மாவட்டத்தில் "வங்கியின் தோழன்' பணிக்கு தகுதியான பெண்கள் வருகிற 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.


தருமபுரி மாவட்டத்தில் "வங்கியின் தோழன்' பணிக்கு தகுதியான பெண்கள் வருகிற 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன்வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடனை திறம்படநடைமுறைப்படுத்த தருமபுரி ஒன்றியத்தில் இலக்கியம்பட்டி, அளேதருமபுரி,நாயக்கனஅள்ளி, வி.முத்தம்பட்டி மற்றும் காரிமங்கலத்தில் பிக்கனஅள்ளி,பெரியாம்பட்டி, பைசுஅள்ளி உள்ளிட்ட இடங்களில்தொகுதிக்கு தலா நான்கு வங்கியின் தோழன் நியமிக்கப்பட உள்ளனர்.

இந்தப் பணிக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர் தொடர்புடைய தொகுதியை சார்ந்தவராகவும், சுயஉதவிக் குழு உறுப்பினராகவோ அல்லது ஊராட்சி அளவிலானகூட்டமைப்பு உறுப்பினராக இருக்க வேண்டும். 35 வயதுக்கு மிகாமல் இருப்பதுடன், பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவு உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கைப்பேசி வைத்திருப்பதுடன், அதன் வழியாக குறுஞ்செய்தி அனுப்பத் தெரிந்திருக்க வேண்டும். இந்தப் பணியில் நியமிக்கப்படுபவர் வங்கிக்கும், சுய உதவிக் குழுக்களுக்கும் பாலமாக இருந்து கடன் பெற்றுத் தருவதோடு,
கடனை வசூலித்து வங்கியில் திருப்பி செலுத்தும் பணியையும் செய்ய வேண்டும். தகுதியானவர்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலரிடம்
விண்ணப்பத்தைப் பெற்று வருகிற 30ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என
அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக