வெள்ளி, 9 மே, 2014

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்இன்று வெளியாகின்றன. இன்று காலை, 10:00 மணிக்கு...

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்இன்று வெளியாகின்றன. இன்று காலை, 10:00
மணிக்கு, தேர்வுத் துறை இணையதளங்கள் மற்றும்பள்ளிகளில் வெளியிடப்படும், பிளஸ் 2
தேர்வு முடிவை எதிர்பார்த்து, 8 லட்சம் மாணவ,மாணவியர், ஆவலுடன் உள்ளனர்.

மார்ச், 3ம் தேதி முதல், 25ம் தேதி வரை, பிளஸ் 2பொதுத்தேர்வு நடந்தது. தமிழகம் மற்றும்
புதுச்சேரி சேர்த்து, 2,242 மையங்களில் நடந்ததேர்வுகளில், 8.26 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இவர்களில், 3.8 லட்சம் பேர்,மாணவர்கள்; 4.45 லட்சம் பேர், மாணவியர்.பி.இ., சேர்க்கை மற்றும் கலை, அறிவியல் கல்லுாரிகளில்சேர்வதற்கான விண்ணப்பம், மாநிலம் முழுவதும்பரபரப்பாக விற்பனை ஆகி வரும் நிலையில்,இன்று காலை, 10:00 மணிக்கு, தேர்வுத்துறை இணையதளங்கள் மற்றும் பள்ளிகளில்வெளியிடப்படும்

பிளஸ் 2 தேர்வு முடிவை எதிர்பார்த்து, 8 லட்சம் மாணவர்களும், ஆவலுடன் உள்ளனர்.மாநிலம்முழுவதும், அனைத்து வகை பள்ளிகளிலும்,மதிப்பெண்களுடன் கூடிய
தேர்வு முடிவு பட்டியல், காலை, 10:00மணிக்கு வெளியிடப்படுகிறது. இந்த பட்டியல், நேற்றே, அனைத்து மாவட்டங்களுக்கும்அனுப்பப்பட்டன. தேர்வுத் துறையின், ' www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.in' ஆகிய, நான்கு இணையதளங்களில், சரியாக, காலை, 10:00 மணிக்கு, தேர்வு முடிவை வெளியிட, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன்,ஏற்பாடு செய்துள்ளார்

.தேர்வு முடிவை, மாணவர்கள், எவ்வித தடங்கலும் இல்லாமல் அறிந்து கொள்வதற்கு வசதியாக, 'இன்று, மாநிலத்தின் எந்த பகுதியிலும், மின் தடை செய்யக்கூடாது' என, மாவட்ட
மேற்பார்வை பொறியாளர்களுக்கு, மின் வாரிய உயர் அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.பெரும்பாலான மாணவர்கள், இணையதளம்வழியாக, தேர்வு முடிவை பார்ப்பதால், மின் வாரியம், இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக