வெள்ளி, 9 மே, 2014

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் :மன உளைச்சலா...'104'க்கு அழையுங்கள்...

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் :மன உளைச்சலா...'104'க்கு அழையுங்கள்...
தேர்வு முடிவால், மன உளைச்சலுக்கு ஆளாகும் மாணவர்கள், பெற்றோர், '104' மருத்துவ உதவி சேவைத் திட்டத்தை தொடர்பு கொண்டால், தேவையானஆலோசனைகள் பெற,
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காவிட்டாலோ, தேர்ச்சி பெறாவிட்டாலோ, மாணவர்கள், மன உளைச்சலுக்கு ஆளாகி, தவறான முடிவு எடுத்து விடுகின்றனர். போதிய விழிப்புணர்வு இல்லாததும், சரியான வழிகாட்டல் இல்லாததுமே இதற்கு காரணம்.சேவைத் திட்ட செயல் இயக்குனர், பிரபுதாஸ் கூறியதாவது:மதிப்பெண் குறைவால், மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படவாய்ப்புண்டு. பெற்றோர், அத்தகைய
மாணவர்களை திட்டாமல் தேற்ற வேண்டும். 'அதிக மதிப்பெண் பெற, இன்னும் வாய்ப்பு கிடைக்கும்' என, எடுத்துச் சொல்ல வேண்டும்.முடியாவிட்டால்,

'104'க்கு அழையுங்கள்.
வாழ்க்கையில் ஜெயிக்க உள்ள ஏராளமான வாய்ப்புகள் குறித்தும், மாணவர்களுக்கு தேவையான, 'கவுன்சிலிங்' தரப்படும். மன நல ஆலோசகர் குழு, 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக