திங்கள், 12 டிசம்பர், 2016

யவனர் பற்றிய தமிழ் இலக்கியக் குறிப்புகள்:

யவனர் பற்றிய தமிழ் இலக்கியக் குறிப்புகள்:

1.இமிழ் கடல் வேலித் தமிழகம் விளங்கத்
தன்கோல் நிறீஇத் தகைசால் சிறப்பொடு
பேரிசை மரபின் ஆரியர் வணக்கி
நயனில் வன்சொல் யவனர்ப் பிணித்து
நெய்தலைப் பெய்து கைபிற்கொளீஇ
(பதிற்றுப் பத்து பதிகம், இரண்டாம் பத்து, குமட்டூர்க் கண்ணனார்)

2.வன்சொல் யவனர் வள நாடு ஆண்டு
பொன்படு நெடுவரை புகுந்தோன் ஆயினும்
(நடுநற்காதையில் மாடலன் சொன்னது, சிலப்பதிகாரம்)

3.கள்ளி அம் பேரியாற்று வெண்ணுரை கலங்க
யவனர் தந்த வினைமான் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
(அகநானூறு, 149: எருக்காட்டுத் தாயங்கண்ணனார்)

4.யவனர் நன்கலம் தந்த தண்கழ் தேறல்
பொன்செய் புனைகலத்து ஏந்தி நாளும்
ஒண்தொடி மகளிர் மடுப்ப மகிழ் சிறந்து
(யவனர் கொணர்ந்த மதுபானம் பற்றி மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது; புற நானூறு பாடல் 56)

5.கேள்வி அந்தணர் அருங்கடன் இறுத்த
வேள்வித் தூணத்து அசைஇ யவனர்
ஓதிம விளக்கின் உயர்மிசைக் கொண்ட
வைகுறுமீனின் பையத் தோன்றும்
(கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடிய பெரும் பாணாற்றுப் படை, வரி 316—319)

6.மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து
வலிபுணர் யாக்கை வன்கண் யவனர்
புலித்தொடர் விட்ட புணை மான் நல் இல்
திருமணி விளக்கம் காட்டி
(நப்பூதனார் பாடிய முல்லைப் பாட்டு, வரி 61-64)

சாதனையால் கிண்டலுக்குப் பதிலடி!


பலர் கிண்டலடித்தபோது, அதையே சவாலாக எடுத்துக்கொண்டு ஐ.சி.எல்.எஸ். எனும் இந்தியப் பெருநிறுவனச் சட்டப்பணி (Indian Corporate Law Service) பெற்றுள்ளார் சி.எம்.கார்ல் மார்க்ஸ். 2009 பேட்ச் அதிகாரியான இவர் தற்போது ஜார்கண்ட் மாநிலப் பதிவாளராகப் பணியாற்றுகிறார். இதற்கு முன் சென்னையின் நிறுவனங்கள் பதிவு அலுவலகத்தின் உதவிப் பதிவாளராகவும் பிறகு துணைப் பதிவாளராகவும் பணி செய்தார். அப்போது புதுச்சேரி மாநிலப் பொறுப்பு பதிவாளராகப் பணியாற்றும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது.

மதுரையைச் சேர்ந்த மார்க்ஸ் தமிழ் வழிக் கல்வியில் பள்ளிப் படிப்பைப் படித்தார். இவருடைய தந்தை சி.மதிசேகரன், தேசிய நெடுஞ்சாலைத் துறையில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். மேற்படிப்பில் ஜவுளிப் பிரிவில் பிடெக் தேர்ந்தெடுத்தார் மார்க்ஸ். இதன் இறுதி ஆண்டில் துறையின் தலைவர் ஒரு முறை வகுப்பில் மாணவர்களிடம் "அடுத்து என்ன படிக்க விரும்புகிறீர்கள்?" எனக் கேட்டார். அப்போது பலரும் கேட், எம்.டெக்., எம்.எஸ்., எம்.பி.ஏ. என்றபோது, மார்க்ஸ் மட்டும் ஐ.ஏ.எஸ். எனக் கூறியுள்ளார்.

இதைக் கண்டு துறைத் தலைவர் உட்பட அனைவரும் சிரித்துள்ளனர். தன்னைக் கிண்டலடித்தவர்களிடம் தன்னை நிரூபித்துக்காட்ட வேண்டும் என்பதைச் சவாலாக எடுத்துக்கொண்ட மார்க்ஸ், யூ.பி.எஸ்.சி. தேர்வை வெல்வதையே தன் லட்சியமாகக் கொண்டிருக்கிறார். இதற்காக 2003-ம் ஆண்டு முதல் எடுத்த ஆறு முயற்சிகளின் இறுதியில் ஐ.சி.எல்.எஸ். பெற்றிருக்கிறார்.

"எனக்கும் சில ஆசைகள் உண்டு என்பதை ஏற்காமல் என்னைச் சுற்றி இருந்தவர்கள் கிண்டலடித்தார்கள். இது உன்னால் முடியுமா என யாராவது கிண்டலடித்தால் அதைக் கண்டிப்பாகச் செய்து காட்டும் குணம் எனக்குச் சிறு வயது முதல் உண்டு. இதைப் பல விஷயங்களில் செய்து காட்டிய நான் யு.பி.எஸ்.சி.யிலும் வெற்றி பெற்றேன். எனது விருப்பத்தின்படி ஐ.சி.எல்.எஸ். அறிமுகப்படுத்தி அதன் முதல் பேட்ச் வெற்றியாளராகத் தேர்வு பெற்றேன். 2002-ல் பிடெக் முடித்தவுடன் யூ.பி.எஸ்.சி.க்கு எப்படித் தயாராவது என்பது பற்றிய எந்த அறிவும் இல்லாமல் முதல் முயற்சி செய்தேன்.

அடுத்த முயற்சியின்போது, யூ.பி.எஸ்.சி. எழுதி நேர்முகத் தேர்வுக்காகக் காத்திருந்த அன்பழகன் என் உறவினர் மூலம் அறிமுகமானார். தற்போது சத்தீஸ்கர் மாநிலப் பிரிவின் 2003 பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவரது வழிகாட்டுதல் என் வெற்றிக்கு உதவியது. எனது விருப்பப் பாடமாகத் தமிழ் இலக்கியத்தையும் புவியியலையும் எடுத்திருந்தேன். சென்னை அண்ணாநகரில் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியில் புவியியலுக்கு மட்டும் பயிற்சி பெற்றேன். இதன் நிர்வாக இயக்குநர் சங்கர் அளித்த ஆக்கமும், ஊக்கமும் எனது வெற்றிக்கு அடித்தளமிட்டன" என்கிறார் கார்ல் மார்க்ஸ்.

வெற்றிக்காக எடுத்த முயற்சிகள்

கார்ல் மார்க்ஸுக்கு முதல் முயற்சியில் முதல் நிலையும் அடுத்த மூன்று முயற்சிகளில் இரண்டாம் நிலைத் தேர்வும் வெல்ல முடியவில்லை. இதன் பிறகு, தமிழக அரசின் தேர்வு வாரியத்தின் குரூப் 1 எழுதியமையால் ஒரு வருடம் இடைவெளி விட்டிருக்கிறார். குரூப்-1-ல் தேற முடியாவிட்டாலும் வங்கித் தேர்வில் உதவியாளர் பணி கிடைத்துள்ளது. இதைச் செய்தவாறே, ஆறாவதாக யூ.பி.எஸ்.சி.க்கு 2009-ல் எடுத்த முயற்சி ஐ.சி.எல்.எஸ். பெற்றுத் தந்துள்ளது. இதற்கான பயிற்சி முடித்துப் பணி செய்தவாறே ஏழாவதாக ஒரு முயற்சி செய்துள்ளார்.

இந்தக் கடைசி முயற்சியின்போது 2011-ல் மார்க்ஸுக்குத் திருமணம் முடிந்துவிட்டது. மணமுடித்த பின் படிக்க முடியாது என்று சொன்ன தன் மனைவியிடம் சவால்விட்டு, மீதமிருந்த கடைசி முயற்சியை எடுத்து வென்றிருக்கிறார். இதில் ஐ.ஏ.ஏ.எஸ். (Indian Auditing and Accounts Service) கிடைத்துள்ளது. ஆனால், ஐ.சி.எல்.எஸ்.ஸில் இருவருடம் முடிந்துவிட்டதால் அதை மறுத்துத் தன் பணியில் தொடர்ந்திருக்கிறார்.

தோல்விக்கான காரணங்கள்

"ஒவ்வொரு முறையும் எனக்கு ஒரு பாடத்தில் அதிக மதிப்பெண் கிடைத்தால் மற்றொன்றில் குறைந்துவிடும். நான் ஒரே பாடத்தை அதிகமான ஆர்வத்துடன் படித்தது ஒரு குறை. நேர்முகத்தேர்வு ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்காகத் தேர்வாளர்களுடன் அநாவசியமாக விவாதிக்க வேண்டிய சூழலுக்கு உள்ளானது பெரிய தவறாகப் போனது. மற்றொன்றில் எனது அனுபவத்தில் இல்லாத கேள்விகளாக இருந்தமையால் பதில் அளிக்க முடியாமல் போனது. ஆங்கிலத்தில் பேசும் திறன் சற்றுக் குறைவாக இருந்ததும் காரணம்தான். இத்தனைக்கும் தொடக்கத்தில் பதிலளிக்கத் திணறிய எனக்குத் தேர்வாளர்களில் சிலர், நான் கூற விரும்புவதைப் புரிந்து கோடிகாட்டவும் செய்தார்கள்" எனத் தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார் மார்க்ஸ்.

ஐ.சி.எல்.எஸ். பணியின் செயல்பாடு

யூ.பி.எஸ்.சி.யின் 24 பதவிகளில் ஒன்றாகக் கடந்த 2009 முதல் ஐ.சி.எல்.எஸ். புதிதாக இணைக்கப்பட்டது. மத்தியப் பெருநிறுவனங்கள் அமைச்சகத்தின் (Ministry of Corporate Affairs) கீழ் நிறுவனங்கள் பதிவு அலுவலகம் (Registrer of Companies) செயல்படுகிறது. இவர்களின் அலுவலகத்தில் பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் கணக்கு வழக்குகள் சமர்ப்பிக்கப்படும். இதைக் கண்காணிப்பதும், சரிபார்ப்பதும் ஐ.சி.எல்.எஸ். அதிகாரிகளின் பணியாகும்.

இதன் மீதான பொருளாதாரக் குற்றங்களை விசாரிப்பதும் இந்த அதிகாரிகள்தான். பெருநிறுவனங்கள் நஷ்டமடைந்து மூடப்படும்போது உயர் நீதிமன்ற உத்தரவின்படி அவற்றின் கணக்கு வழக்குகளைச் சரிபார்த்துக் கடன் தந்தவர்களுக்குச் சரிவிகிதமாகப் பிரித்தளிக்கும் பணியும் இவர்களுடையதே. மிகவும் நுணுக்கமான இந்தப் பணியில் செபி, சி.பி.ஐ., போலீஸ், ரிசர்வ் வங்கி ஆகிய அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டி இருக்கும். இந்த அதிகாரிகள் சம்மந்தப்பட்ட மாநில உயர் நீதிமன்றங்களின் நேரடி நிர்வாகத்தின் கீழ் பணியாற்றுவார்கள். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.ஸில் இருக்கும் அளவுக்குப் பணிச்சுமையும் அரசியல் தலையீடும் இல்லாதது ஐ.சி.எல்.எஸ். இதில், சுமார் 10 வருட அனுபவத்துக்குப் பின் ஒரு மாநிலத்தின் தலைமைப் பதவியைப் பெற்றுவிட முடியும்.

 - மார்க்ஸ்

புதியவர்களுக்கான யோசனை

"யூ.பி.எஸ்.சி. வெல்வது மிகவும் எளிது. இதற்காக முடிந்தால் கடினமாக உழைத்துப் படியுங்கள். இல்லை எனில், பாடங்களைத் திரும்பத் திரும்ப எழுதிப் பார்த்தாலே மூளையில் பதிந்துவிடும். இது என் சொந்த அனுபவம். நாம் யூ.பி.எஸ்.சி.யை வெல்ல லட்சியம் கொள்வது அவசியம். நேர்முகத் தேர்வில் வெற்றி பெற நாம் வாழும் சூழல், பணியாற்றும் சூழல் குறித்த முழுமையான அறிதல் அவசியம். ஏனெனில், நம்மைச் சுற்றி இருக்கும் சூழல் தொடர்பானதாகவே நேர்முகத் தேர்வின் கேள்விகள் அதிகம் கேட்கப்படுகின்றன." என யோசனை கூறுகிறார்.


ஐ.பி.எஸ். ஆன பேருந்து ஓட்டுநர்!


சென்னையின் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் பேருந்தை ஓட்டிய கா.சிவசுப்ரமணி, ஐ.பி.எஸ். ஆகியுள்ளார். இவருக்கு, 2010-ம் வருட பேட்ச்சில், ஒடிசா மாநிலப் பிரிவில் ரூர்கேலாவின் பயிற்சி ஏ.எஸ்.பி., மல்காங்கிரியில் சப்டிவிஷன் ஆபிஸர் மற்றும் ஏ.எஸ்.பியாக இருந்து தற்போது ராயகடா மாவட்ட எஸ்.எஸ்.பியாகப் பணியாற்றுகிறார்.

ஓட்டுநரான கல்லூரியில்…

விழுப்புரம் மாவட்டம் நேமூர் கிராமத்தில் பிறந்து தமிழ்வழிக் கல்வியில் படித்தவர் சிவசுப்ரமணி. மேற்படிப்பு கடலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பொருத்துனர் பிரிவில் பயின்றார். ஆரம்பத்தில் குறுகிய காலத்துக்கு ஒரு இடத்தில் வேலை செய்துவிட்டு பிறகு நண்பர்களுடன் சேர்ந்து ஊரப்பாக்கத்தில் லாரி மற்றும் பேருந்து பணிமனை தொடங்கினார். அப்போது சென்னை எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரியின் 30 பேருந்துகளைப் பராமரிக்கும் பணி கிடைத்தது. அப்படியே பேருந்தின் ஓட்டுநராகவும் வேலை செய்தார். அப்போது, அவரது ஒன்றுவிட்ட சகோதரர் ரமேஷ், யூ.பி.எஸ்.சி.-ல் சென்ட்ரல் செக்ரடரியட் சர்வீஸ் பெற்ற செய்தி, 'யூ.பி.எஸ்.சி. பாஸ் செய்த விவசாயி மகன்' என்ற தலைப்பில் 1999-ல் வெளியானது. இதைப்படித்த சிவசுப்ரமணிக்கு தானும் அரசு அதிகாரியாக வேண்டும் என முதன்முறையாகத் தோன்றியது.

கல்லூரிப் பேருந்தை ஓட்டிய நேரம் போக மற்ற நேரங்களில் கல்லூரி நூலகத்தில் அனுமதி வெற்று யூ.பி.எஸ்.சி. சம்பந்தமான புத்தகங்களைத் தேடி படிக்க ஆரம்பித்தார். ஆனால் பட்டப் படிப்பு இல்லாமல் யூ.பி.எஸ்.சி. எழுத முடியாது என்பதால் சொந்த கிராமத்துக்கே திரும்பினார். விவசாயம் செய்தபடியே பிளஸ் டூ மற்றும் பி.ஏ. வரலாறு ஆகியவற்றை அஞ்சலில் படித்துத் தேர்ச்சிபெற்றார். அதை அடுத்து, அரசு பணி மற்றும் வங்கிகளுக்கான தகுதித்தேர்வுகளையும் எழுதினார். இவற்றில் வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் சிறப்பான பயிற்சி கிடைத்தது. ஆறு முறை யூ.பி.எஸ்.சி. முயன்றவருக்கு இறுதியில் ஐ.பி.எஸ். கிடைத்தது.

பயிற்சி நிலையம் கட்டாயம் இல்லை

"முதல் இரண்டு முயற்சிகளில் முதல்நிலை தேர்வில் வென்றாலும் இரண்டாம்நிலை தேர்வில் வரலாறு பாடத்தில் சறுக்கினேன். மூன்றாவது முறை தமிழ் இலக்கியத்துடன் விருப்பப் பாடமாகப் புவியியலையும் எடுத்தபோது, இரண்டாம் நிலையில் வெற்றி கண்டேன். ஆனால் நேர்முகத் தேர்வில் வெற்றியை வெறும் 8 மதிப்பெண்களில் தவற விட்டேன். அப்போது மனம் உடைந்த எனக்கு சகோதரர் இரமேஷ் ஊக்கம் அளித்தார். அதே உத்வேகத்தில் முயற்சி செய்து ஆறாவது முறையில் ஐ.பி.எஸ். ஆனேன்" என்கிறார் சிவசுப்ரமணி.

யூ.பி.எஸ்.சி.க்கு முயற்சி செய்தபோது விருத்தாச்சலம், திருச்சி ஆகிய ஊர்களில் ரயில்வேயில் வேலை செய்தார் சிவசுப்ரமணி. அப்போது யூ.பி.எஸ்.சி.க்கு தமிழக அரசின் வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநரான சுரேஷ்குமாரின் 'தன்னார்வ பயிலும் வட்டம்' பெரிதும் உதவியது.

'தனியார் பயிற்சி நிலையங்களில் படித்தால் யூ.பி.எஸ்.சி. தேர்வுகளில் தேர்ச்சிபெற முடியும் என்றில்லை. இந்த தேர்வுக்குத் தயாராகும் நண்பர்களிடமும் சீனியர்களிடமும் சந்தேகங்களைக் கேட்டுதான் நான் தயாரானேன். பள்ளியில் தமிழ்வழிக் கல்வி படித்தாலும், முயற்சி செய்து ஆங்கில நூல்களையே படிப்பது நல்லது. தமிழில் படித்து அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது என்பது கடினமானது. இதில், நேரமும் வீணாகும். நேர்முகத் தேர்வை சந்திக்க மாதிரிப் பயிற்சிகள் அவசியம்' என்கிறார் சிவசுப்ரமணி.

பணி அனுபவம்

மாவோயிஸ்ட் நடமாட்டம் அதிகம் உள்ள மாநிலமாக ஒடிசா இருப்பதால் அங்கு பொறுப்பேற்கப் பொதுவாக அதிகாரிகள் தயங்குகிறார்கள். ஆனால் சிவசுப்ரமணி ஒடிசாவில் நியமிக்கப்பட்டபோது மகிழ்ந்தார். அவருடைய கறாரான நடவடிக்கையால் ஒடிசா காவல்துறையினர் 'கமாண்டர்' எனும் பட்டப்பெயரில் அழைக்கின்றனர். 'ஐ.பி.எஸ். பெறுவது வெற்றிக்கான அடிப்படையே தவிர முழுமையான வெற்றி அல்ல. இதில் சிறப்பாக செயலாற்றி மக்களுக்கு நற்பணிகள் செய்வதில்தான் உண்மையான வெற்றி உள்ளது' என்கிறார் சிவசுப்ரமணி.

நான் படித்தவை

# 'நீங்களும் ஐஏஎஸ் ஆகலாம்' - இறையன்பு, ஐ.ஏ.எஸ்.

# முதல்நிலைக்காக:

6 முதல் பிளஸ் டூ வரையிலான என்.சி.இ.ஆர்.டி பாட நூல்கள்.

# பொது அறிவு:

The Hindu, Wizard and Civi#Service Chronicle.

# Tata Mcgraw Hil#and Unique guides.

இரண்டாம் நிலையில்

வரலாற்றுப் புத்தகங்கள்

# 'The Wonder that was India', A.L. Bhasham

# 'Advanced Study in the History of the Medieva#India', Vo#I, II and III, J.L. Mehta

# 'Modern India 1885-1947', Sumit Sarkar

# India's Struggle for Independence', Bipin Chandra

புவியியல் புத்தகங்கள்

# Physica Geography, Savindra singh

# Environmenta#Geography, Savindra Singh

# Human and Economic Geography, Goh ChengLeong and Gillian Clare Morgan

தமிழ் நூல்கள்

சங்க இலக்கியம், திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கிய நூல்கள், நாவல்கள், சிறுகதைகள், புதுக்கவிதைகள்.



சனி, 10 டிசம்பர், 2016

இன்குலாபின் புகழ்பெற்ற பாடல் :மனுசங்கடா நாங்க மனுசங்கடா

இன்குலாபின் புகழ்பெற்ற பாடல் :

மனுசங்கடா நாங்க மனுசங்கடா
உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு உயரமுள்ள
மனுசங்கடா நாங்க மனுசங்கடா

எங்களோட மானம் என்ன தெருவில கிடக்கா — உங்க
இழுப்புக்கெல்லாம் பணியுறதே எங்களின் கணக்கா
உங்களோட முதுகுக்கெல்லாம் இரும்புல தோலா
நாங்க ஊடு புகுந்தா உங்க மானம் கிழிஞ்சு போகாதா

உங்க தலைவன் பொறந்த நாளு போஸ்டர் ஒட்டவும்
உங்க ஊர்வலத்த்தில தர்ம அடிய வாங்கி கட்டவும் — அட
எங்க முதுகு நீங்க ஏறும் ஏணியாகவும் — நாங்க
இருந்தபடியே இருக்கணுமா காலம் பூராவும்

குளப்பாடி கிணத்து தண்ணி புள்ளய சுட்டது
தண்ணியும் தீயாச் சுட்டது — இந்த
ஆண்டைகளின் சட்டம் எந்த மிராசைத் தொட்டது

சதையும் எலும்பும் நீங்க வச்ச தீயில் வேகுது — உங்க
சர்க்காரும் கோர்ட்டும் அதுல எண்ணய ஊத்துது
எதைஎதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க — நாங்க
எரியும்போது எவன் மசுர புடுங்க போனீங்க — டேய்

மனுசங்கடா நாங்க மனுசங்கடா
உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு உயரமுள்ள
மனுசங்கடா நாங்க மனுசங்கடா

'மக்கள் பாவலர்' என அழைக்கப்படும் கவிஞர் இன்குலாப்

தமிழ் கவிஞர், பேராசிரியர், சொற் பொழிவாளர், நாடக ஆசிரியர் என பன்முகம் கொண்ட இன்குலாப், பொதுவுடைமைச் சிந்தனையால் கவரப்பட்டவர். இவருடைய 'நாங்க மனுஷங்கடா', கண்மணி ராஜம், மீட்சி, சூரியனைச் சுமப்பவர்கள் போன்ற படைப்புகள் காலத்தால் அழியாதவையாகும். இலக்கிய பணிகளுக்காக சிற்பி இலக்கிய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.


இளவேனில் என்பவர் நடத்திய கார்க்கி இதழில் கவிஞர் இன்குலாப்பின் தொடக்கக் கால கவிதைகள் வெளிவந்தன. தராசு, நக்கீரன், இனி, நாற்காலி, உண்மை, உங்கள் விசிட்டர் எனப் பல இதழ்களில் ஏராளமான கட்டுரைகளையும் கவிதைகளையும் அவ்வப்போது எழுதினார். சூரியனைச் சுமப்பவர்கள் என்னும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். 'மார்க்சு முதல் மாசேதுங் வரை' என்னும் மொழியாக்க நூலை எஸ். வி. ராஜதுரையும் இன்குலாப்பும் இணைந்து எழுதினார்கள். மனுசங்கடா, நாங்க மனுசங்கடா என்னும் இவர் எழுதிய பாட்டு எண்ணற்ற மேடைகளில் தலித்து மக்களால் பாடப் படுகிறது. கல்லூரிக் காலத்தில் குரல்கள், துடி, மீட்சி என் மூன்று நாடகங்கள் எழுதினார். பிற்காலத்தில் அவ்வை, மணிமேகலை ஆகியன நாடகங்கள் இவரால் எழுதப்பட்டன. 2007 ஆம் ஆண்டு வரை இன்குலாப் எழுதிய கவிதைகள் அனைத்தும் ஒவ்வொரு புல்லையும் என்னும் பெயரில் ஒரு பெரிய நூலாக வெளிவந்தது.

கலகப்பாடலை உழைக்கும் மக்களுக்கு தந்தவர் மக்கள் கவிஞர் இன்குலாப்.

இன்குலாப் இன்குலாப் என்றால் புரட்சி என்று பொருள். புரட்சிகர சிந்தனையை வாழ்க்கையாகவே வரித்துக்கொண்ட இவர், பெயரையே இன்குலாப் எனப் புனைந்து கொண்டார். இயற்பெயர் சாகுல் அமீது. ராமநாதபுரம், கீழக்கரையில் இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர். பிறந்த குடும்பத்தி லிருந்தே பாட்டுக்கட்டும் திறனையும், எதிர்ப்புக் குரலையும் ஈர்த்துக் கொண்ட இவரின் முதல் கவிதை முயற்சி 12 வயதில் நிகழ்ந்தது.
தர்க்காவில் 'பேய் ஓட்டுகிறேன்' என்று பெண்களைக் குச்சியால் அடித்துத் துன்புறுத்தியதைக் கண்டு பொறுக்க முடியாத கணத்தில் முதல் கவிதை கனன்று வெளிப்பட்டது. அது முதல் இன்றுவரை தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்.
சாதி, மதம், இனம், மொழி, வர்க்கம் என சகல தளங்களிலும் நிகழும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக இவரது குரல் உரத்து ஒலிக்கிறது.
இவரது கவிதைகள் 'ஒவ்வொரு புல்லாய்' எனும் தொகுதியாகவும், கட்டுரைகள் 'ஆனால்' எனும் நூலாகவும், நாடகங்கள் 'குறிஞ்சிப்பாட்டு', 'குரல்கள்' எனும் தொகுதி களாகவும், கதைகளும் குறுநாவலும் 'பாலையில் ஒரு சுனை' எனும் நூலாகவும் வெளிவந்துள்ளன. 'பொன்னிக்குருவி' 'புலி நகச் சுவடுகள்' எனும் கவிதை நூல்களும், 'மணிமேகலை' நாடக நூலும் தயாராகி வருகின்றன.

மனுசங்கடா.. நாங்க மனுசங்கடா

 மனுசங்கடா.. நாங்க மனுசங்கடா பாடல் ஒலிக்காத போராட்டக் களங்களும், கருத்தரங்களும் இல்லை என்று சொல்லிவிடலாம். அப்படி, ஒடுக்கப்பட்ட, தலித் மக்களின் போராட்டங்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்த குரல்  அமைதியானது. .

பிறப்பால் இஸ்லாமியராக பிறந்தாலும், தனது மத அடையாளங்களை துறந்து மக்களுக்கான போராட்டங்களில் தன்னை இணைத்துக் கொண்டவர் இன்குலாப். சாகுல் அமீது என்ற தனது இயற்பெயரை இன்குலாப் என்று விடுதலையின் சின்னமாக மாற்றிக் கொண்டவர்.

Poet Inquilab dies

கீழக்கரை ஊரில் பிறந்த இன்குலாப், சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவுக் கல்லூரியிலும், பின்னர், மதுரைத் தியாகராயர் கல்லூரியிலும் தமிழ் படித்தவர். சென்னையில் புதுக் கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்தவர். அவருடைய இலக்கிய பணிகளுக்காக சிற்பி இலக்கிய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.



 

செவ்வாய், 6 டிசம்பர், 2016

சிவஞான முனிவர்

"சைவமும் தமிழும் தழைத்தினிது ஓங்க அருள்மழை பொழிந்த கார்முகில், புறச்சமய இருள் போக்கிச் சைவ சமயத்தை விளங்கவைத்த செங்கதிர்" என்று பலவாறு சிவஞான முனிவரைச் சைவசமயச் சான்றோர்கள்
புகழ்வர். இவரைப் புலவர் பெருமக்கள் சிவஞானயோகி, சிவஞானசுவாமி,
மாதவச் செல்வர், முனிவர் என்றெல்லாம் புகழ்ந்து கொண்டாடுவர். தமிழ் இலக்கண நூல்களுக்கும் சைவ சமய சாத்திரங்களுக்கும் திறமானஉரைகண்ட இவரைத் தமிழறிஞர் கா. சுப்பிரமணிய பிள்ளை பின்வருமாறுபாராட்டுகின்றார்: "தெளிவும் திட்பமும் உடைய செய்யுள் இயற்றுவதிலும், சிறந்த
உரைநடை ஆள்வதிலும் இவர் இணையற்றவர். பிற்காலத்துப் பெரும் புலவர் யாவரும் இவர் உரைநடையைப் பெரும்பாலும் தழுவியே செவ்வியசெந்தமிழ் வாசகநூல்கள் வகுத்தனர். செந்தமிழிலே உரைநடைகைவந்தவர்களுள் தலை சிறந்தவர் இவரே. ஆதலின் இவரை உரைமன்னர் என்னலாம்"*

சிவஞான முனிவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் தென்பாண்டி நாட்டில் விக்கிரசிங்கபுரம் என்னும் ஊரில் சைவ வேளாளர்குடியில் பிறந்தார். தந்தையார்பெயர் ஆனந்தக் கூத்தர். தாயார் பெயர்
மயிலம்மை. இளமையில் இவருக்குப் பெற்றோர் இட்டபெயர் முக்காளலிங்கர்
என்பதாகும். சுசீந்திரம் ஈசான மடத்தில் வேலப்ப தேசிகரிடம் சமய அறிவும் தமிழ்ப் புலமையும் பெற்றார். தீக்கைப் பெயராகச் 'சிவஞானம்' என்ற பெயர் இவருக்கு இடப்பெற்றது.

திங்கள், 5 டிசம்பர், 2016

முதல்வர் விரைவில் உடல் நலம்பெற நான் பிராத்திக்கிறேன்'' என்று ரிச்சர்டு பேல்


தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது என்றும் உலகின் தலைசிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் லண்டன் மருத்துவ நிபுணர் ரிச்சர்டு பேல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''முதல்வருக்கு நேற்று திடீர் மாரடைப்பு ஏற்பட்ட செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். நான் அவரது உடல் நிலை குறித்து மிகவும் கூர்ந்து கவனித்து வந்திருக்கிறேன். அவர் உடல் நலம் தேறிவருகிறார் என்பது குறித்து அனைவரையும் போல் நானும் உற்சாகமடைந்தேன். துரதிர்ஷ்டவசமாக, அவர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டும், அடிப்படையில் அவரது ஆரோக்கியம் மேலும் பிரச்சினைக்குள்ளாகும் இடர்ப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கவே செய்தது. 

தற்போது நிலைமை மோசமாக உள்ளது. எனினும் இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்திலிருந்து அவரை மீட்க அனைத்துவிதமான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.

முதல்வரது உடல் நிலையை பல்துறை உயர் நிபுணர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தற்போது 'எக்மோ' உயிர் காக்கும் கருவியின் உதவியுடன் இருக்கிறார். இதுதான் இருப்பதிலேயே சிறந்த உயிர்காப்பு உதவி சாதனமாகும். 

உலகின் மிகவும் சிறந்த மருத்துவ மையங்கள் கையாளும் அணுகுமுறையாகும் இது. இந்த முறை சென்னை அப்போலோ மருத்துவமனையில் உள்ளது என்பதே இந்த மருத்துவமனையின் நிபுணத்துவத்தை வெளிப்படுத்துகிறது.

முதல்வர் விரைவில் உடல் நலம்பெற நான் பிராத்திக்கிறேன்'' என்று ரிச்சர்டு பேல் தெரிவித்துள்ளார்.


பெருங்கதை

பெருங்கதை
வேறு எந்தத் தமிழ்க் காப்பியத்திற்கும் இல்லாத தனிச் சிறப்புப் பெருங்கதைக்கு உண்டு என்று அறிஞர் கருதுவர். இது பலவகைக் கருவிகள், பழக்க வழக்கங்கள், கட்டட அமைப்புகள், விளையாட்டுகள் பற்றிய சமுதாயச் செய்திகளை எல்லாம் நுட்பமாகப் பேசும் ஒரு காப்பியம்.


பெருங்கதை பற்றிப் பழைய உரையாசிரியர்கள் பலர் புகழ்ந்து பாராட்டியுள்ளனர். சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் இக்காப்பியத்தைப் பாராட்டி உள்ளார். "கபாடபுரத்தில் இருந்த இடைச் சங்கத்தில் இயற்றப்பட்டவை கலியும் குருகும் வெண்டாளியும் முதலிய செய்யுள் இலக்கியங்கள்; இந்த இலக்கியங்களை எல்லாம் ஆராய்ந்து செய்ததே உதயணன் கதை" என்று அவர் கூறியுள்ளார் (உதயணன் கதை - பெருங்கதை). பேராசிரியர் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய உரையாசிரியர். தொன்மை முதலிய இலக்கணக் கூறுகளை விளக்கும் இவர் இயைபு என்ற இலக்கணத்தை விளக்கி, அதற்குச் சான்றுகளாகச் சீத்தலைச் சாத்தனாரால் செய்யப்பட்ட மணிமேகலையையும், கொங்குவேளிரால் செய்யப்பட்ட இந்தப் பெருங்கதையையும் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களே அன்றி நச்சினார்க்கினியர், மயிலை நாதர், நேமிநாத உரையாசிரியர், யாப்பருங்கல விருத்தி உரையாசிரியர், வீரசோழிய உரையாசிரியர் முதலியோர் உரைகளிலும் பெருங்கதை மேற்கோளாக இடம் பெற்றுள்ளது. இத்தகைய பெருமை பெற்ற பெருங்கதை, உதயணன் என்னும் காவியத் தலைவனின் வாழ்க்கையை விவரித்துச் செல்கிறது. இக்காப்பியத்தை இயற்றிய கொங்குவேளிர் சமண சமயத்தைச் சேர்ந்தவர். எனவே இக்காப்பியம் சமணக் கொள்கைகளை மிகுதியும் முன்னிலைப்படுத்துவதாக அமைந்துள்ளது.

வெள்ளி, 2 டிசம்பர், 2016

TRB PG TAMIL:MODEL QP

1. "திங்கள் முக்குடைகவிப்பத்" என்ற பாடலின் ஆசிரியர்?
அ) சுந்தரர் ஆ) குலசேகரர் இ) சீத்தலை சாத்தனார் ஈ) நீலகேசி
2. நம்பியாரூரர் இவற்றுடன் தொடர்புடையவர்
அ) திருநாவுக்கரசர் ஆ) மாணிக்கவாசகர் இ) சுந்தரர் ஈ) திருஞானசம்பந்தர்
3. "கண்ணுதல்" இலக்கண குறிப்பு தருக.
அ) உவமை ஆ) உருவகம் இ) இலக்கணப்போலி ஈ) வினைத்தொகை
4. நாலாயிர திவ்ய பிரபந்தத்திற்கு உரை எழுதியவர்
அ) பெரிய வாச்சான் பிள்ளை ஆ) வடக்கு திருவீதிப்பிள்ளை இ) ஆறுமுக நாவலார் ஈ) உ.வே.சா
5. மணிமேகலை எத்தனை காதைகளைக் கொண்டது.
அ) 30 ஆ) 40 இ) 100 ஈ) 599
6. சீவக சிந்தாமணிக்கு நிகராக கவிதை சுவை மிக்க நூல் எது?
அ) குண்டலகேசி ஆ) நீலகேசி இ) மணோன்மணியம் ஈ) கம்பராமாயணம்
7. "தண்டமிழ் ஆசான்" இவற்றுடன் தொடர்புடையவர்
அ) திருவள்ளுவர் ஆ) கம்பர் இ) சீத்தலை சாத்தனார் ஈ) மீனாட்சி சுந்தரனார்
8. ஜான் பனியன் என்பார் எழுதிய "பில்கிரிம்ஸ் பிராகிரஸ்" என்ற நூலினை தழுவி எழுதப்பட்ட நூல் எது?
அ) இரட்சண்ய மனோகரம் ஆ) இரட்சண்ய குறல் இ) இரட்சண்ய யாத்ரிகம் ஈ) மணோன்மணியம்
9. "சின்ன சீறா" என்ற நூலை எழுதியவர்?
அ) பனு அகமது மரைக்காயர் ஆ) உமறுப்புலவர் இ) நபிகள் நாயகம் ஈ) சீதக்காதி
10. பொருத்துக. (a) (b) (c) (d)
a. மணிமேகலை - 1. சமணம் அ) 1 2 3 4
b. நீலகேசி - 2. பெளத்தம் ஆ) 4 3 2 1
c. இரட்சண்ய யாத்ரிகம் - 3. கிறித்தவம் இ) 2 1 3 4
d. சீறாப்புராணம் - 4. இசுலாம் ஈ) 2 1 4 3
11. "இறைவனை வழிபடு பொருளாக மட்டுமல்லாமல் வாழ்க்கைப் பொருளாகவும் கொண்டு வாழ்ந்து
காட்டியவர் சுந்தரர் என்பார்" இது யாருடைய கூற்று.
அ) குன்றக்குடி அடிகளார் ஆ) இராமலிங்க அடிகளார் இ) திரு.வி.க ஈ) மாணிக்கவாசகர்
12. "திருக்கடைக் காப்பு" இதனுடன் தொடர்புடையது.
அ) பலச்ருதி ஆ) மாட திருவீதி இ) நிலா முற்றம் ஈ) காலில் அணிவது.
13. பொருந்தாதது.
அ) ஆலோகம் ஆ) பிரபாமூர்த்தி இ) கனப்பிரபை ஈ) பூலோகம்
14. "சந்திராதித்தம்" இதனுடன் தொடர்புடையது.
அ) முத்துக்குடை ஆ) பொற்குடை இ) மணிக்குடை ஈ) சாற்றமுது
15. அருக தேவனின் ஆகமங்களுள் தவறானது எது.
அ) பூர்வாகமம் ஆ) பிரகீர்ணவாகமம் இ) அங்காகமம் ஈ) தீர்த்தவாகமம்
16. "பொங்கு தாமரை" இலக்கண குறிப்பு தருக.
அ) பண்புத்தொகை ஆ) வினைத்தொகை இ) உவமைத்தொகை ஈ) உருவகத்தொகை
17. கந்த புராணம் எத்தனை படலங்களை கொண்டது.
அ) 153 ஆ) 135 இ) 118 ஈ) 92
18. "நமக்கு தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல்" என்று பாடியவர்
அ) பாரதிதாசன் ஆ) பாரதியார் இ) வாணிதாசன் ஈ) கம்பதாசன்
19. "செந்தமிழைச் செழுந்தமிழாகக் காண விரும்பியவர்" யார்?
அ) பாரதியார் ஆ) கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை இ) கனக சுப்புரத்தினம் ஈ) கம்பர்
20. பிரெஞ்சுக் குடியரசுத் தலைவரால் செவாலியர் விருதினைப் பெற்றவர்
அ) பாரதிதாசன் ஆ) வாணிதாசன் இ) முடியரசன் ஈ) அப்துல் ரகுமான்
21. தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் தமிழன்னை விருது பெற்ற கவிஞர்
அ) வாணிதாசன் ஆ) சுரதா இ) அப்துல் ரகுமான் ஈ) தாராபாரதி
22. தவறானவற்றைத் தேர்க.
அ) விலங்குகள் இல்லாத கவிதை ஆ) பால் வீதி இ) நேயர் விருப்பம் ஈ) புதிய விடியல்கள்
23. "கங்கையும் சிந்துவும்" இலக்கணக் குறிப்பு தருக.
அ) உம்மைத்தொகை ஆ) முற்றும்மை இ) எண்ணும்மை ஈ) முரண் தொடை
24. "திருக்கை வழக்கம்" என்னும் நூலின் ஆசிரியர் ?
அ) வீரமாமுனிவர் ஆ) வரதநஞ்சயப் பிள்ளை இ) கம்பர் ஈ) கபிலர்
25. "ஒன்றே யென்னின் ஒன்றேயாம்" என்னும் பாடலில் இடம் பெற்றுள்ள பா வகை என்ன ?
அ) அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ஆ) எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
இ) நாட்டுபுற சிந்து வகையை சார்ந்தது ஈ) எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

TRB PG TAMIL :மாதிரி வினாத்தாள்

                                                 தமிழ்த்தாமரை,
                                                    தருமபுரி
1. ‘முக்களாலிங்கர் என்ற இயற்பெயரினை உடையவர்
 A. சாந்தலிங்கா அடிகளார்   B. சிவப்பிரகாச சுவாமிகள்  C.சிவஞானமுனிவர்      Dதாண்டவராய சுவாமிகள்
2. பாண்டிக்கோவை என்ற நூலை தன் உரைமூலம் வெளிப்படுத்திய  உரையாசிரியர்
 A. இளம்பூரணர்                B. நக்கீரர்           .C பேராசிரியர்            D மயிலை நாதர்
3 இலக்கண உரைகளுள் அதிகமான மேற்கோள்களையும் சான்றுப் பாடல்களையும் எடுத்தாண்டுள்ள உரை
  A. யாப்பருங்கால விருத்தி               B. நன்னூல் காண்டிகை 
.C அடியார்க்கு நல்லார் உரை            .D பேராசிரியம்
4 “சொல்லுக்கு    ---------------------------------------“ என்பர்
 A. இளம்பூரணம்          B. சேனாவரையம் .C பேராசிரியம்           .D நச்சினார்க்கினியம்
5 நன்னூலுக்கு முதல் உரையாசிரியர்
  A. சங்கர நமச்சிவராயர்    B .ஆண்டிப்புலவர்     .C கூலங்கைதம்பிரான்    D மயிலை நாதர்
6. தமிழ் உரையாசிரியர்களுள், ,அதிக நூல்களுக்கு உரையெழுதிய உரையாசிரியர்
 A. இளம்பூரணர்      B. நச்சினார்க்கினியர்            C பரிமேலழகர்       D சேனாவரையர்
7 ‘ தம்பிரான் வணக்கம்மூலநூலின்  ஆசிரியர்
 A ஹென்றிக் பாதிரியார்    B. மர்டாக்         .C எல்லீஸ்        .D பிரான்சிஸ் சேவியர்
8  தூஷண திக்காரம் உள்ளிட்ட 17  உரைனடை நூல்களை படைத்தவர்
A.   சி.ஜே பெஸ்கி           B. இரேனியஸ். C இராபர்ட்-டி-நொபிலி  .D சாமுவேல் பிஸ்க் கிரீன்
9 திருவள்ளுவரின் திருவுருவம்பொறித்த தங்கநாணயம்  வெளியிட்டசென்னை கல்விச்சங்கநிறுவனர்
  A பீரான்சிஸ் ஒயிட் எல்லீஸ் B. ராட்லர்     C பெப்ரீசியஸ்       .D ஸ்க்வார்ட்ஸ்
10  “தத்தூவக் கற்பனை நிரம்பியன”   என்றும்   ‘உணர்வின் அழுகைஎன்றும் போற்றப்பட்டு 
     மொழி பெயர்க்கப்பட்ட நூல்
  A திருவாசகம்             B. திருக்குறள்     .C சிவஞானபோதம்    .D சிவப்பிரகாசம்
11. ‘ லெக்சிகன் பொயட்டிகம்என்ற அகராதியை உருவாக்கியவர்
  A நைட்பாதிரியார்         B சீகன் பால்கு        .C சர்லஸ்..கோவர்          .D பெர்சிவல்
12 ‘ எள்ளல் இலக்கிய முதல்வர் எனப் போற்றப்படுபவர்
  A. தத்துவ போதகர்      B. அன்ட்ரிக் அடிகளார்     C.வீரமாமுனிவர்         D ஜி.யூ.போப்
13 வடமொழி தாய்மொழியானால்,தமிழ் தந்தை மொழிஎன்று கூறியவர்
  A இராமலிங்க அடிகள் B. ஆறுமுக் நாவலர்    .C தண்டபாணி சுவாமிகள் D சுந்தர சுவாமிகள்
14 கிறித்துவ பாரதியார் எனப் போற்றப்படுபவரின் நூல்
  A பரமார்த்த குரு கதை   B. வசன சம்பிரதாய கதை    
 .C அசன்பே சரித்திரம்        .D பிராதப முதலியார் சரித்திரம்
15  நாயக்கர்களது  ஆட்சி கால நிகழ்ச்சிகளை அடிப்படையாகக்க்கொண்டு எழுதப்பட்ட முதல் வரலாற்று
    நாவலின் ஆசிரியர்
  A.ஜெகசிற்பியன்  B. சர்வணமுத்துப் பிள்ளை    .C கோ.வி.மணிசேகரன்   .D சாண்டில்யன்
16. விவேகனந்தரின் ஆசிபெற்றபிரபுத்த பாரதஎன்ற ஆங்கில இதழின் ஆசிரியராக இருந்தவர்
  A. இராஜம் அய்யர B. மாதவையா       C. .நா.சு                D சண்முக சுந்தரம்
17 வீரமாமுனிவருடன் தருக்கத்தில் ஈடுபட்டு பின்னர் ஏசுமத நிராகரணம்’” என்ற நூலை இயற்றியவர்
  A. சிவப்பிரகாச சுவாமிகள்                B. கச்சியப்ப முனிவர் 
 .C சுப்பிரமணிய முனிவர்                  D அடைக்கலங்காத்த முதலியார்
18 சாவித்திரி எனும் கதாபாத்திரத்தின் மூலம் பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் புதினம்
  A. முத்து மீனாட்சி  B. தில்லை கோவிந்தன்  C பத்மாவதி சரித்திரம் D விஜயமார்த்தாண்டம்
19. ‘முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவர்கட்டுரை நூலின் ஆசிரியர்
  A. திரு.வி.          B. மறைமலையடிகள்  C .வே.சா         D தாமோதரம் பிள்ளை
20 சக்ரவர்த்தினி என்பது
  A. நாளிதழ்           B. வார இதழ்              C. மாதர் மாத இதழ்   D பாலர் இதழ்.
21. ‘எங்கள் காங்கிரஸ் யாத்திரைஎன்ற பயண நூலை எழுதியவர்
  A .இராமலிங்கம் பிள்ளை   B. இராஜாஜி          .C கல்கி        .D பாரதியார்
22. வெ .இராமலிங்கனார் மொழிபெயர்த்த நூல்
   A. பஜகோவிந்தம்      B. அரவணை சுந்தரம்     C. மரகதவல்லி         D கற்பகவல்லி
23  ஆறு கதைகளைக் கொண்ட  ,அபிநவக் கதைகளைவெளியிட்டவர்
   A கு..ரா  B. .பிச்சாமூர்த்தி     C. செல்வகேசவராய முதலியார்  D  பி.எஸ்.இராமையா
24 தமிழின் முதல் வார இதழ்
   A. மெட்ராஸ் கெஜட்      B. தமிழ் மெகஸின்         C தினவர்த்தமாணி   D சென்னை கூரியர்
25 சி.சு. செல்லப்பாவின் சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்
   A. வாடிவாசல்     B .சுதந்திர தாகம்            .C எழுத்து              .D ஜிவனாம்சம்
 26.   வட்டார நாவல்களின் முன்னோடி
  A சூர்ய காந்தன்  B. நாஞ்சில் நாடன C பெருமாள் முருகன்       .D ஆர்.சண்முகசுந்தரம்
27  ஏழு கார்ட்டூன்களும் ஒரு வாண்ண ஓவியமும் எம் மொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது?
  A.வங்காளம்            B. ஒரியா .      C கன்னடம்              .D மலையாளம்
28 ஷெர்லாக் ஹோம் பாத்திரம் படைத்தவர்
  A. ஆர்தர் காண்டாயில்   B. ஜெஸ்பர்சன் .        C சார்லஸ் டிகன்ஸ்   .D ரைனால்ட்ஸ்
29. ‘ உரையாசிரிய சக்கரவர்த்திஎன்று அழைக்கப்படுபவர்
 A. வேங்கடசாமி நாட்டார்      B. மயிலைநாதர்      
 C வடமலையப்ப பிள்ளை      D வை.மு.கோபாலகிருஷ்ணமூர்த்தி
30. தமிழர் திருநாளாக பொங்கல் திருநாளைக் கொண்டாட வலியுறுத்தியவர்
 A. குமாரசாமிப்புலவர்  B. .நாமச்சிவாய முதலியார் .C அறிஞர் அண்ணா .D பூரணலிங்கம் பிள்ளை
31. திருஞான சம்பந்தர் மடம் என்று அழைக்கப்படும் மடம்
 A தருமபுர ஆதினம்   B திருவாவடுதுறை மடம் C .மதுரை மடம் D திருவண்ணாமலை மடம்
32. விசய சூசிகை எனப்படுவது
 A கதைக்கரு      B முன்கதை சுருக்கம்       C பின் நிகழ்வு          .D கதையின் உச்சம்
33 அனார்கலி, லைலா மஜ்னு கதைகளை தமிழில் முதலில் கூறியவர்
 A புதுமைப்பித்தன்     B .ரா           C ..வே.சு அய்யர்      D கு.அழகரிசாமி
34 ‘ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவம்யாருடையது ?
 A ஜெயகாந்தன்          .B லா.சா.ரா    C கண்ணதாசன்         .D ஜீவாநந்தம்
35 ‘ தக்கைமீது நான்கு கண்கள்படைத்தவர்
 A வாலி         B...கந்தசாமி         C அசோகமித்திரன்       .D எம்.வி.வெங்கட்ராம்
36 கல்கியின் விடுதலை இயக்க தொடர்பில்லாத படைப்பு
  A அலை ஓசை  .B. தியாக பூமி                   .C மகுடபதி       D பார்தீபன் கனவு
37. சிதம்பர ரகுனாதனின்துரோகிஎம்மொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது
 A ஸ்விடிஸ்        B ரஸ்ய மொழி                   C ஜெர்மன்       .D ஆங்கிலம்
38 “புதினங்கள் இனிப்புகள் தரமான இலக்கியப்பசி கொண்ட எல்லாரும் அவற்றை விரும்புகின்றனர்என்றவர்
  A ஜார்ஜ் மூர்         .B. வில்லியம் தாக்கரே         .C ஹட்சன்      D பொக்கஷியோ
39 அகில உலக சிறுகதைப் போட்டியில் பரிசுப்பெற்ற ராஜம் கிருஷ்ணனின் படைப்பு
    A .அவள்                 B. பெண்குரல்                     .C ஊசியும் உணர்வும்    .D மலர்கள்
40  நமது தீனதயாளுதான் தமிழின் முதல் நாவல் என்றவர்
 A. நடேசாஸ்திரி      B குருசாமிசர்மா       C. கோணகோபாலன்  D ஆரணி குப்புசாமி முதலியார்
41 முதல் பெண் எழுத்தாளர் என்ரு கருதப்படுபவர்
  A அனூத்மா              B.சாவித்திரி    .C பாலாமணி அம்மாள்    .D கோதைநாயகி அம்மாள்
42 கடலும் கிழவனும் எனும் புகழ்பெற்ற நூலின் ஆசிரியர்
  A ஹெமிலி ஜோலா      B.விக்டர் யூகோ     C ஹெமிங்க்வே              D குஷ்தவ் பிலாபட்
43. தாகூர் இலக்கிய விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர்
  A இராமகிருஷ்ணன்       .B சிவசங்ககரி     .C பெருமாள் முருகன்       D இந்திரா பார்த்தசாரதி
44  கருக்கு, சங்கதி  ஆகியவை  எவ்வகை புதின வகைக்கு எடுத்துக்காட்டாக அமைவன
 A பெண்ணியம்        B. குழந்தைகள்             .C தலித்தியம்      .D பின் நவினத்துவம்
45. ‘ரெயில்வே ஸ்தானம்என்ற கதையின் ஆசிரியர்.
  A பிரமிள்          .B பாரதியார்             C மெளனி               D மாலன்
46 ஒரு சிற்பியைப் போல சொற்களைச் செதுக்கி உருவாக்கும் கவித்துவ சிற்பங்கள் இவரது கதைகள் என
  யாருடைய கதைகள்  போற்றப்படுகின்றன
  A. ஜானகிராமன்        B .அகிலன்                 .C ..ரா           .D கல்கி
47. மண்வாசனையும்,மண்ருசியும் கொண்டு தமிழ்க் கதை உலகில் கிராமத்தின் அசல் முகத்தை பதிவு செய்தவர்
 A மு.             B.. ராஜம் கிருஷ்ணன்     C நா. பார்த்தசாரதி       D கி. ராஜநாராயணன்
48. காலச்சுவடு இதழை தொடங்கிய  ‘பல்லக்கு தூக்கிகள்கதாசிரியார்
  A சுந்தர ராமசாமி         B. சிதம்பர ரகுநாதன்      C அசோகமித்திரன்       D நீல .பத்மநாபன்
49 ‘ ஸ்ரீ ஆர்ய திவ்ய தேச யாத்திரை சரித்திரம்எனும்  முதல் பயன இலக்கிய நூலை இயற்றியவர்
  A சோமலே          B.. சுத்தானந்த பாரதியார்     C பகடலு நரசிம்ம நாயுடு .D பரணீதரன்
50. தேசபக்தன் கந்தன் எனும் காந்திய புதினத்தின் ஆசிரியர்
   A காசீ. வேங்கடரமணி  B டி.எஸ் .கனகசபை    C சீதாரமையா   .D நாரண துரைக்கண்ணன்
                வாழ்த்துக்கள்     TRB PG 2016 QP 9