பாட வல்லுனர் குழுவினர் 'சிறப்பு வினா விடை கையேடு' தயாரித்துள்ளனர்.
இதைகொண்டு,காலை, மாலை வேளைகளில், மாணவர்களுக்கு படம் நடத்தி,
அரசு பொது தேர்வில், 100 சதவீதம்தேர்ச்சி அடைய செய்யும் முயற்சியில், ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச்., 26, பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்ச் 3 ல்
அரசு பொது தேர்வு துவங்க உள்ளது. அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற,
வினா விடை கையேடு தயாரிக்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு,
பள்ளி கல்வி இயக்குனர்ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.
இதை தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுரைப்படி,
பள்ளிகளில் 20ஆண்டுகளுக்கு மேல் பணி புரிந்து, 100 சதவீத தேர்ச்சி பெற
செய்த ஆசிரியர்கள், ஒவ்வொரு பாடத்திற்கும் வினா விடை கையேடு தயார் செய்யும்
பணியில் ஈடுபட்டனர். இதை, தமிழ், ஆங்கிலம் என,இரண்டு மொழிகளில் தயாரித்து,
புத்தகமாக வெளியிட்டுள்ளனர். இதன் மூலம், தேர்ச்சியில் பின் தங்கியமாணவர்களுக்கு,
காலை, மாலை வேளைகளில், சிறப்பு வகுப்பு எடுக்க உள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக