ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ்
சரிபார்க்கும் பணி நாகர்கோவிலில் திங்கள்கிழமை எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கியது. ஜன. 27-ஆம் தேதி வரை இப்பணி நடைபெறுகிறது. சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கும் தேர்வர்கள் 12 விதமான சான்றிதழ் நகல்களை சான்றொப்பமிட்டு சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 475
பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 4 பேரைக் கொண்ட குழுவினர் சான்றிதழ் சரிபார்க்கும்பணியை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஏ.எஸ். ராதாகிருஷ்ணன் இப்பணியை ஆய்வு செய்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக