இதுபோன்ற வழக்குகள்,அனைத்து துறைகளிலும் இருக்கிறது என்றாலும்,
பள்ளி கல்வித்துறையில், மிக அதிகம். ஒரு கோடி மாணவர், 5.5 லட்சம் ஆசிரியர், ஆசிரியர்அல்லாத பணியாளர் பல லட்சம் என, பெரிய துறையாக,பள்ளி கல்வித்துறை இருப்பதால், பிரச்னைகளும் அதிகம்.தொடக்க கல்வித்துறை, பள்ளி கல்வித்துறை,
தேர்வுத்துறை, ஆசிரியர் தேர்வு வாரியம் என, பல துறைகள், பள்ளிகல்வி அமைச்சகத்தின் கீழ், இயங்கி வருகின்றன.பல்வேறு பிரச்னைகள் காரணமாக, ஆசிரியரும், ஆசிரியர் அல்லாத பணியாளர்களும், கோர்ட்டில்வழக்கு தொடர்கின்றனர்.
தற்போதைய நிலவரப்படி,தொடக்க கல்வித்துறையில், 1,000 வழக்குகளும்,பள்ளி கல்வித்துறையில், 4,000 வழக்குகளும், நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது வழக்கு விவகாரங்களை கையாள்வதே, பள்ளி கல்வித்துறைக்கு, பெரும் தலைவலியா இருக்கிறது. அதிகாரிகளில், பலர், தினமும்,கோர்ட்டுக்கு செல்வதே, முக்கிய வேலையாக இருக்கிறது. இதனால், அதிகாரிகளை, அலுவலகத்தில் பார்க்க முடியாமல், துறை ஊழியர்கள்,திண்டாடுகின்றனர். வழக்குகளை, விரைந்து முடிக்க வேண்டும் என்பதற்காக, உயர் அதிகாரிகள், ஆய்வு கூட்டங்களை நடத்துகின்றனர்.இதற்காக, மாநிலம் முழுவதிலும் இருந்து, அதிகாரிகள்,முக்கிய ஊழியர்கள், சென்னைக்கு வருகின்றனர். ஆனாலும், வழக்குகள் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
இந்நிலையில், மண்டல வாரியாக, "லீகல் செல்'அமைப்பை ஏற்படுத்தி, வழக்குகளை விரைந்து முடிக்க, பள்ளி கல்வித்துறை, திட்டமிட்டு உள்ளது. இதற்கென தனி அலுவலர், பணியாளரை நியமனம் செய்ய வேண்டும் எனில், அரசின் அனுமதியை பெற வேண்டும். மேலும்,அதிக செலவும் ஏற்படும். இதனால், அரசின் அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதை உணர்ந்து, புதியதிட்டத்தை செயல்படுத்த, கல்வித்துறை, ஆலோசித்து வருகிறது. அதன்படி, கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்களில், சட்டம் படித்தவர் யார், யார் என்ற விவரங்களை சேகரிக்க,
கல்வித்துறை, முடிவு செய்துள்ளது. இந்த பட்டியலை, மாவட்ட வாரியாக, விரைவில் பெற்று, அவர்களை, மாவட்டதலைநகரங்களுக்கு, இடமாற்றம் செய்து, வழக்கு விவகாரங்களை கையாளும் பணியை, கல்வித்துறை, வழங்க உள்ளது.
மேலும், மாவட்டங்களில் நடக்கும் குறை தீர்ப்பு கூட்டங்களை, பெயரளவிற்கு நடத்தாமல், முழு ஈடுபாட்டுடன் நடத்தி, முடிந்த அளவிற்கு, பிரச்னைகளை, உடனுக்குடன் தீர்க்க வேண்டும் எனவும், மாவட்ட அதிகாரிகளை,உயர் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். இது போன்ற நடவடிக்கைகள் மூலம், வரும் ஆண்டுகளில்,வழக்குகள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும் என, கல்வித்துறை கருதுகிறது.
இது குறித்து, பள்ளி கல்வித்துறை, நிர்வாக அலுவலர் சங்கத்தின், மாநில அமைப்பு செயலர், சீனிவாசன்கூறியதாவது: முதன்மை கல்வி அலுவலகங்களில், இளநிலை உதவியாளரை, வழக்குகளுக்கு, பதில்மனுவை தயாரிக்க, அதிகாரிகள் உத்தரவிடுகின்றனர். இளநிலை உதவியாளர் பணி, 10ம் வகுப்பு நிலையில்ஆனது. இவர் எப்படி, வழக்கை புரிந்து, பதில் மனுவை தயாரிக்க முடியும்? இதனால், பல வழக்குகளுக்கு, பதில்
மனுவை தாக்கல் செய்யாமல், அமைதியாக இருந்துவிடுகின்றனர். இது, ஒரு கட்டத்தில், கோர்ட்அவமதிப்பு வழக்கில், கோர்ட் கண்டனத்திற்கு, ஆளாக நேரிடுகிறது. அப்போது தான், உயர் அதிகாரிகளுக்கும், விஷயம் தெரிய வருகிறது. கோர்ட்டுகளில், என்ன வழக்கு வருகிறது, எந்த நிலையில்உள்ளது, பதில் மனு, எப்போது தாக்கல் செய்ய வேண்டும் என்ற விவரங்களை தெரிந்து, உடனுக்குடன்நடவடிக்கை எடுக்க வசதியாக, மாவட்ட வாரியாக, சட்ட அலுவலரை நியமனம் செய்ய வேண்டும் என, நாங்கள்கோரிக்கை வைத்தோம். சட்ட அலுவலரை நியமனம் செய்யாவிட்டாலும், சட்டம் தெரிந்த ஆசிரியர்,அலுவலரைக் கொண்டு, மண்டல வாரியாக, "லீகல் செல்' அமைக்க, கல்வித்துறை, நடவடிக்கை எடுத்து வருவது, வரவேற்கத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக