புதன், 2 ஜூலை, 2014

குரூப்-1 அதிகாரிகளின்நியமனத்தை ரத்து செய்து உச்சநீதிமன்ற உத்தரவு: 83 அதிகாரிகளும் கடும் அதிர்ச்சிக்கு

தமிழகத்தைச் சேர்ந்த 83 குரூப்-1 அதிகாரிகளின்நியமனத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அந்தப்பிரச்னை குறித்து மாநில அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. 83 அதிகாரிகளும் இப்போது சென்னையிலேயே முகாமிட்டுள்ளனர்.தங்களது பணி குறித்து அரசு எடுக்கப் போகும் முடிவுக்காக அவர்கள்காத்திருக்கின்றனர்.
துணை ஆட்சியர், காவல் துறை துணை கண்காணிப்பாளர், வணிகவரி அதிகாரி என குரூப் 1 தொகுதிக்கு உள்பட்ட பணியிடங்களுக்கு கடந்த 2000-ஆம் ஆண்டில் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களில் 83 பேர் விதிமுறைகளை பின்பற்றாமல்இருந்ததாகவும், அவர்கள் தேர்வு செய்யப்பட்டதாகவும் புகார் எழுந்தது.
இதைத் தொடர்ந்து, அவர்களுடைய தேர்வினை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கா விசாரித்த உயர் நீதிமன்றம், 83 பேரின் நியமனத்தையும்
ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மற்றும் பாதிக்கப்பட்ட அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்தை உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின்தீர்ப்பை உறுதி செய்து திங்கள்கிழமை உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து 83 அதிகாரிகளும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாயினர். ஐ.ஏ.எஸ். முதல் மூத்த அதிகாரிகள்: கடந்த 10ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்த 83 பேரில் சிலர், இப்போது ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாகவும், அதற்கு இணையான நிலையிலும் இருக்கின்றனர். எனவே, அவர்களது பணி நியமனத்தை ரத்து செய்திருப்பது அதிகாரிகள் வட்டாரத்தில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு முடிவு எத்தகைய முடிவை எடுப்பது என்பது குறித்து டி.என்.பி.எஸ்.சி.,யும் தமிழக அரசும் ஆலோசித்து வருகின்றன. இதனிடையே, அதிகாரிகள் 83 பேரும் சென்னையிலேயே முகாமிட்டுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.
அவர்களுடைய நியமனம் ரத்து செய்யப்பட்ட நிலையில்,அரசின் முடிவுக்காக காத்திருக்கிறார்கள். இந்த விஷயத்தில் அரசு மிக விரைவில் முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Sent from my iPad

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக