புதன், 2 ஜூலை, 2014

ஆசிரியர் பயிற்சி சேர்க்கை கலந்தாய்வு 7ம் தேதி துவங்குகிறது

ஆசிரியர் பயிற்சி சேர்க்கை கலந்தாய்வு, வரும், 7ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடக்கிறது.
தமிழகத்தில், 29 மாவட்ட ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் (அரசு பள்ளிகள்), 9, அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், 42, அரசு உதவிபெறும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் மற்றும் 400 தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், அரசு ஒதுக்கீட்டின் கீழ், 13 ஆயிரம் இடங்கள் உள்ளன. எனினும், 4,520 மாணவர்கள் மட்டும் விண்ணப்பித்துள்ளனர்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், இணையதளம் வழியாக, வரும், 7ம் தேதி முதல் 15ம் தேதி வரை, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடக்கிறது. கலந்தாய்வுக்கான அழைப்பு கடிதம் மற்றும் 'ரேங்க்' பட்டியல், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தின் இணையதளத்தில் இன்று வெளியிடப்படுகிறது. மாணவர்கள், அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்து, அவரவர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு, குறிப்பிட்ட தேதியில் செல்ல வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக