திங்கள், 14 ஜூலை, 2014

பாரம்பரிய உணவை உண்டால் நோயற்று வாழலாம்

பாரம்பரிய உணவை உண்டால் நோயற்று வாழலாம்
பாரம்பரிய உணவை உண்டால் நோயற்று வாழலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் ச.
ஜெயந்தி.
கரூரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத் துறை சார்பில்வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாரம்பரிய உணவுத்திருவிழாவை தொடக்கி வைத்து அவர் மேலும் பேசியது: நோயற்ற வாழ்வை அனைவரும் வாழ வேண்டும். ரசாயன உணவுகளைத் தவிர்க்கவேண்டும் என்ற நோக்கில் தமிழக முதல்வர் பாரம்பரிய உணவுகளை மக்கள்பயன்படுத்தும் வகையில் இóத்திட்டத்தைத் தொடக்கி வைத்துள்ளார்.

ரசாயன உணவுகளைத் தயாரித்துச் சாப்பிடுவது மட்டுமன்றி,அதை குளிர்ச்சாதனப் பெட்டியிலும் வைத்துப் பதப்படுத்தி உண்பதன் மூலம்சுகாதார கேடு ஏற்பட்டு நம்மை அதிக நோய்கள் தாக்குகின்றன. ஆனால் நமது பாரம்பரிய உணவு வகையில் மனிதனுக்குத் தேவையானஅனைத்து வகை வைட்டமின்கள் கிடைப்பதுடன் உடல் ஆரோக்கியத்துடன்வாழ முடியும். நமது முன்னோர் பாரம்பரிய உணவுகளை உண்டதால்தான்நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தனர். இன்றைய சூழலில் மனிதர்களின் வேலைப்பளு அதிகரிக்க, அதிகரிக்க ரசாயனகலவை கலந்த உணவு வகை பயன்படுத்தும் நிலை அதிகரித்து வருகிறது.ஒவ்வொருவரும் உணவை மருந்தாக அளவோடு சாப்பிட்டால்
ஆரோக்கியமாக வாழ முடியம். உணவு முறையைக் கடைப்பிடிக்காவிட்டால்மருந்தை உணவாக சாப்பிடும் நிலை ஏற்படும் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக