சனி, 12 ஜூலை, 2014

நானோ இன்சுலின் வாட்டர்' மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்

ஒருவகை தாவர காயிலிருந்து நானோ தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட'நானோ இன்சுலின் வாட்டர்' மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம் என திருப்புவனம்
பட்டதாரி வாலிபர் நேசமணி முயற்சி செய்துள்ளார்.சிவகங்கை மாவட்டம்
திருப்புவனத்தை சேர்ந்தவர் எம்.நேசமணி, இவர் மதுரை யாதவா கல்லுாரியில் பி.எஸ்சி.,
மைக்ரோ பயாலஜி 2007-10ல் படித்தார். தற்போது தனியார் மினரல் வாட்டர் கம்பெனியில்,மைக்ரோ பயாலஜிஸ்ட் ஆக உள்ளார்.
இவர், ஏற்கனவே சர்க்கரை நோயாளிகளின் புண் ஆறுவதற்கான புது 'நானோ பார்முலாவில்' பிளாஸ்டர் பேண்டேஜ்தயாரித்து சென்னை ஐ.ஐ.டி.,யில் சமர்ப்பித்து புதிய கண்டுபிடிப்பாளர் என்ற சான்றிதழ் பெற்றுள்ளார்.

இந்நிலையில், ஒரு தாவரக் காய்களிலிருந்து ஒருவகை கெமிக்கலை, நானோ தொழில்நுட்பத்தில்பிரித்து எடுத்து 'நானோ இன்சுலின் வாட்டர்' தயாரித்து உள்ளார்.நேசமணி கூறுகையில், "ரத்தத்தில்சர்க்கரை சத்து அதிகரிப்பதால் சர்க்கரை நோய் உண்டாகிறது. கணையத்தில் இன்சுலின், குளுக்கான் என்றஇரண்டு சுரப்பிகள் சரிவர இயங்காததாலும் சர்க்கரை நோய் உருவாகிறது. இதில் குளுக்கான்சுரப்பி ஆல்பா செல்களையும், இன்சுலின் சுரப்பி பீட்டா செல்களையும் சுரக்கிறது. இது குறையும் பட்சத்தில்சர்க்கரை நோய் அதிகரித்து திடீர் மயக்கம், உடல் சோர்வு ஏற்படும். சரிபடுத்த மருந்து, மாத்திரை சாப்பிடுவது வழக்கம். அதிகபட்சமாக இன்சுலின் ஊசி போட்டுக்கொள்கின்றனர். அதற்குப்பதிலாககுறைந்த அளவு விலையில் தயாராகும் நானோ இன்சுலின் வாட்டர் குடித்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள்
வரும்," என்றார்.

இவரை, 82201 30443 என்ற எண்ணிலும், mnesamani2014@gmail.com என்ற இ மெயில்முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக