புதன், 8 ஏப்ரல், 2015

கஷ்டப்பட்டு படித்தது போதும்... இனி இஷ்டப்பட்ட விதங்களில் படிக்கலாம் !


எக்கச்சக்கமாக ஃபீஸ் கட்டிச் சிறப்பான பயிற்சி அளிக்கும் பள்ளியில் என் மகனைச் சேர்த்துள்ளேன். காலை முதல் மாலைவரை பள்ளியில் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. அதுவும் போதாமல் மாலை முதல் இரவு உறங்கும்வரை டியூஷனுக்கும் செல்கிறான்.

அவன் படிப்புக்குத் தேவையான புத்தகங்கள், டேப்லெட், மடி கணினி இப்படி எல்லாவற்றையும் வாங்கித் தருகிறேன். அவன் நண்பர்களும் நன்றாகப் படிக்கிறார்கள். இவனும் எல்லாப் பாடங்களிலும் நல்ல மதிப்பெண்கள்தான் வாங்குகிறான். ஆனால், கணிதப் பாடத்தில் மட்டும் மிகக் குறைவான மதிப்பெண்கள்தான் பெறுகிறான். இதற்கு மேல் என்ன செய்வதென்றே புரியவில்லை.

இப்படிப் பரிதவிக்கும் பெற்றோர்கள் பலரைத் தினசரிச் சந்திக்க முடிகிறது. பெற்றோர்கள் மட்டுமல்ல, இதே மனநிலையில் பேசும் ஆசிரியர்களும், பேராசிரியர்களும் உண்டு. எல்லா முயற்சிகளும் செய்தாகிவிட்டது. ஆனால் பலன் ஏதுமில்லையே எனக் கவலை கொள்கிறார்கள் இவர்கள். சொல்லப் போனால் பல தனியார் பள்ளிகள் மாணவர்கள் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மூன்று விதமாக அவர்களைச் சலித்து, பிரித்து எடுக்கிறார்கள்.

புத்திக்கூர்மை கொண்ட மாணவர்கள், நடுத்தர அறிவுடைய மாணவர்கள், மந்தமான மாணவர்கள் என அடையாளம் சூட்டுகிறார்கள். அதன் பின் அவர்களுக்குத் தனித்தனியே வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில் புத்திக்கூர்மையான மாணவருக்கு ஒரு முறை சொல்லித்தரப்படும் அதே பாடம் மந்தமானவர் என அடையாளம் காணப்பட்டவருக்கு பல முறை சொல்லித்தரப்படுகிறது. சில பாடங்கள் தீவிரமான கவனம் செலுத்தி கற்பிக்கப்படுகின்றன. சில சுருக்கமான வழிகள் சொல்லித்தரப்படுகின்றன.

மீண்டும் மீண்டும் மாதிரித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இருப்பினும் எதிர்பார்க்கும் பலன் கிடைப்பதில்லை. ஆகவே அந்த மாணவர்கள் மீண்டும் அறிவிலிகள் என முத்திரை குத்தப்படுகிறார்கள். அவர்கள் மனமுடையக்கூடாது என்பதற்காக மெதுவாகக் கற்கும் திறன் படைத்தவர்கள் (slow learner) என அவர்கள் அழைக்கப்படுகிறார்கள். ஆனால் இத்தகைய அணுகுமுறை தீர்வாகாது என்கிறார் உளவியல் நிபுணர் கார்டனர்.

திரும்பத் திரும்ப பேசுற நீ…

குறிப்பிட்ட பாடத்தைப் படிக்க ஒரு மாணவர் திணறுகிறார் என்றால் அவருக்கு கற்கும் திறனில் குறைபாடு உள்ளதாக நினைத்துக் கொள்கிறார்கள். ஆகவே முன்பு வகுப்பில் எந்தப் பாடத்தை, எத்தகைய வழிமுறையில் சொல்லித்தந்தார்களோ அதே அணுகுமுறையில் மீண்டும் தனிக் கவனம் செலுத்திக் கற்றுத் தருகிறார்கள்.

இதற்குச் சிறப்புப் பயிற்சி எனப் பெயர் சூட்டுகிறார்கள். ஆனால் நேர்மறையான விளைவை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, "திரும்பத் திரும்பப் பேசுற நீ. என்ன…திரும்பத் திரும்பப் பேசுற நீ" என வடிவேலு சொன்னதையே திரும்பி திரும்பி பேசி காமெடி செய்வதுபோல இது எதிர்மறையாகத்தான் வேலை செய்யும்.

மாற்றம் தேவை

ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்வதில் பின்னடைவு ஏற்படக் காரணம் அவருடைய கற்கும் ஆற்றலில் உள்ள குறைபாடு அல்ல. அவருக்கு அந்தப் பாடம் கற்பிக்கப்பட்ட முறையில்தான் சிக்கல் உள்ளது என்கிறார் கார்டனர். கணிதம் மற்றும் தர்க்கத் திறனில் ஒரு மாணவர் பின்தங்கியிருக்கலாம். ஆனால் அவரிடம் பன்முக அறிவுத்திறனில் உள்ள வேறுவகையானத் திறன் அற்புதமாக இருக்கும். அந்தத் திறன் மூலமாக அவரால் எதையும் சிறப்பாகக் கற்றுக் கொள்ள முடியும். கேட்டல் திறனை அடிப்படையாகக் கொண்டிருப்பவரால் ஒலி வழியாகக் கற்ற விஷயங்களை நன்கு நினைவுகூரமுடியும்.

உடல் ரீதியான அறிவு படைத்தவர்களை ஒரே இடத்தில் உட்கார வைத்துப் பாடம் கற்பித்துப் பயன் இல்லை. ரோல் பிளே, உடல் அசைவு என செயலில் ஈடுபடும்போது உற்சாகமாக உணர்வார்கள். சில மாணவர்கள் வகுப்பு நடக்கும்போது இடையில் பேசிக்கொண்டே இருப்பார்கள். அப்படியானால் அவர் மனிதத் தொடர்பு அறிவாற்றல் கொண்டவராக இருக்கலாம். குழுவாக இணைந்து செயல்பட்டால் அருமையாகக் கற்றுக் கொள்வார்.

கார்டனர் அளிக்கும் பதில் இதுதான். எல்லா மாணவர்களாலும் கற்க முடியும். ஆனால் ஒரு தகவலைப் புரிந்து கொண்டு உள்வாங்கும் விதம் நபருக்கு நபர் வேறுபடும். அதே போல நாம் பார்த்து வியக்கும் பல புத்திசாலிகளிடம் எட்டு அறிவுத்திறன்களில் ஒரு சில திறன்கள்தான் அபரிமிதமாக இருக்கும். அவர்களும் மற்ற திறன்களில் பின்தங்கித்தான் இருப்பார்கள். இது மீண்டும் மீண்டும் சோதிக்கப்பட்டுக் கார்டனரால் கண்டறியப்பட்ட அறிவியல் உண்மை.

கல்விக்கு எதிரானதா?

கார்டனரின் இந்த ஆய்வு முறைப்படுத்தப்பட்ட கல்விக்கு எதிரான குரலாகத் தோன்றலாம். ஒன்று அல்லது இரண்டு அறிவுத்திறன்களைக் கற்பிப்பதே கடினம். இதில் எட்டு விதமான அறிவுத்திறன்கள் உள்ளன எனும்போது எப்படி சாத்தியப்படும் எனும் கேள்வி எழத்தான் செய்யும். இத்தகைய கேள்விக் கணைகள் கார்டனரை நோக்கி இன்றும் வீசப்படுகின்றன.

கார்டனரின் இந்த ஆய்வு முறைப்படுத்தப்பட்ட கல்விக்கு எதிரான குரலாகத் தோன்றலாம். ஒன்று அல்லது இரண்டு அறிவுத்திறன்களைக் கற்பிப்பதே கடினம். இதில் எட்டு விதமான அறிவுத்திறன்கள் உள்ளன எனும்போது எப்படி சாத்தியப்படும் எனும் கேள்வி எழத்தான் செய்யும். இத்தகைய கேள்விக் கணைகள் கார்டனரை நோக்கி இன்றும் வீசப்படுகின்றன.

ஒரு மாணவரின் ஐ கியூ எனப்படும் மொழி, தர்க்கம் மற்றும் கணித அறிவை மட்டும் கண்டறிந்து அதன் அடிப்படையில் பயிற்றுவிக்கும் போக்கை மாற்ற வேண்டும் என்கிறார் கார்டனர். ஏனெனில் அவை மட்டுமின்றி இசை, உடற்கூறு மற்றும் விளையாட்டு, காட்சி மற்றும் வெளி, மனிதர்களோடு தொடர்பு கொள்ளுதல், தன்னிலை அறிதல், இயற்கை இப்படி எட்டு விதமான அறிவுத் திறன்கள் இருக்கின்றன. ஆகவே, ஒரே முறையில் கஷ்டப்பட்டு படித்தது போதும். இனி இஷ்டப்பட்ட விதங்களில் படிக்கலாம் என்பதுதான் கார்டனர் விடுக்கும் அழைப்பு.

கடந்த 25 ஆண்டுகளாக கார்டனரின் பன்முக அறிவுத்திறன் கோட்பாடு உலகெங்கிலும் பல சர்வதேசக் கல்விக் கூடங்களில் சோதிக்கப்பட்டு வருகிறது. அவ்வளவு ஏன்? இந்தியாவில் சென்னை, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் போன்ற பெரு நகரங்களில் உள்ள சர்வதேசப் பள்ளிகளில் பன்முக அறிவுத்திறன் கற்பித்தல் முறை அறிமுகமாகியுள்ளது. அவை செயல்படும்விதம், மக்களை சென்றடைய வேண்டிய விதம் குறித்துத் தொடர்ந்து பேசலாம்.


 

அனுபவங்கள் தான் எண்ணங்களைத் தீர்மானிக்கின்றன


நம் அனுபவங்கள் தான் எண்ணங்களைத் தீர்மானிக்கின்றன என்பது எவ்வளவு தவறான கருத்து என்பதை முதலில் பார்ப்போம்.

10 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கையாடல் செய்து பிடிபட்டதால் வங்கி ஊழியர் தற்கொலை என்று படிக்கிறோம். கோடிக்கணக்கில் கையாடல் செய்ததாக குற்றஞ்சாட்டப்படும் மந்திரி சாதாரணமாகப் பேட்டி கொடுப்பார். சாலையில் வாகனம் செல்லும் தடத்துக்கு மிக அருகில் ஓரமாகப் படுத்து , எப்போதும் ஆபத்தை எதிர்நோக்கும் உணர்விலும் நன்றாக உறங்குவோர் பலர் நம் நாட்டில்.

இதே நாட்டில் தான் மிக வசதியான இடத்தில் படுத்தும் தூக்கம் வராமல் தூக்க மாத்திரை உபயோகிப்போர் எண்ணிக்கை மிக மிக அதிகம். 1100 மதிப்பெண்கள் எதிர்பார்த்து அது குறைந்ததால் மன அழுத்தத்தில் சிகிச்சைக்கு என்னிடம் வரும் மாணவர்களும் உண்டு. இரு முறை தோல்வி அடைந்தும் பதற்றப்படாமல் இருக்கிறானே என்று மன அழுத்தத்தில் என்னிடம் வரும் பெற்றோர்களும் உண்டு.

பணம் இருந்தால் கடன் அடைக்கலாம் என்பார்கள். நிரந்தர வருமானம் இல்லாதவர்கள் மைக்ரோ ஃபினான்ஸில் வாங்கிய கடனைச் சரியாகத் திருப்பித் தருவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பெரும் நிறுவனங்கள் அரசிடம் வாங்கிய கடனைத் திருப்பித் தருவதில் தாமதம். சிக்கல். ஏன்?

எல்லாம் மனசு தான்.

இரண்டு எண்ணங்கள்

விற்பனைப் பயிற்சியில் அதிகம் சொல்லப்பட்ட கதை இது:

காலணி தயாரிக்கும் நிறுவனம் ஒன்று ஒரு புதிய தீவில் கிளை பரப்ப எண்ணி 50 ஜோடி காலணிகளுடன் ஒரு விற்பனைக்காரனை அனுப்பியது. சென்றவன் அதே வேகத்தில் திரும்பினானாம். "அங்கு காலணி அணியும் பழக்கம் யாருக்கும் இல்லை. அதனால் கிளை திறக்கும் எண்ணத்தைக் கைவிடலாம். இங்கு விற்பனை சாத்தியமில்லை."

இரண்டாம் ஆளை அனுப்பினார்கள். அவன் மறு நாளே செய்தி அனுப்பினானாம்: "யாருமே காலணி அணியவில்லை. உண்மை தான். அதனால் இதை விற்கப் போட்டியும் இல்லை. முழு சந்தையையும் நாமே பிடித்துவிடலாம். இன்னும் 200 ஜோடி காலணிகள் அனுப்புங்கள். விரைவில் கிளை திறக்க ஏற்பாடு செய்யுங்கள்!"

வாய்ப்புகளில் பிரச்சினைகளைப் பார்ப்பதும் பிரச்சினைகளில் வாய்ப்புகளைப் பார்ப்பதும் அவரவர் மன நிலையைப் பொறுத்ததே!

எண்ணம் தான் விதை. உணர்வு தளிர். செயல் விருட்சம். இதைப் புரிந்து கொண்டால் அனைத்தும் எளிதாக விளங்கும்.

செயலின் விதை

"ஏன் இப்படிச் செய்யறான்?" என்று கேட்பதற்கு முன் அந்தச் செயலுக்கு விதையான எண்ணம் என்னவாக இருக்கும் என்று யோசியுங்கள்.

பல ஆண்டுகளுக்கு முன், ஒரு பிரபலப் பத்திரிகையின் கேள்வி - பதில் பகுதியில் இதைப் படித்தேன்:

கேள்வி: "நடிகை ரோஜாவைக் கட்டிப் பிடிக்க ஆசை! ஒரு வழி சொல்லுங்கள்?"

பதில்: "ரோஜாவைக் கட்டிப்பிடிக்க நினைத்தால் முள் குத்தும்!"

அருகே நடிகை ரோஜாவின் படமும் ரோஜாப்பூவின் படமும் இணைந்ததாய் ஒரு கேலிச்சித்திரம். என்ன அரிய கருத்து!

சரி, இதை ஏன் ஒரு வாசகர் கர்மச் சிரத்தையாய்க் கார்டு வாங்கி எழுதி அனுப்புகிறார்? ஆயிரம் கேள்விகளில் ஏன் இதைப் பொறுக்கி எடுத்து அந்த உதவி ஆசிரியர் பதில் எழுதிப் பிரசுரிக்கிறார்? இதை ஏன் மெனக்கெட்டுப் படித்து ஞாபகம் வைத்து நான் இப்போது எழுதுகிறேன்?

ஒவ்வொருவர் எண்ணத்தை அறியவும் முயற்சி செய்யுங்கள். மூவரின் செயலுக்கும் உந்துசக்திக்கும் செயலுக்கும் விளக்கம் கிடைக்கும்.

எண்ணமே ஆதாரம்

"ஏன் முகம் கொடுத்துப் பேச மாட்டேன் என்கிறாள்?" "ஏன் எவ்வளவு கொடுத்தாலும் திருப்தியாக இல்லை? "ஏன் இவர் செய்கின்ற எல்லாத் தொழிலும் தோல்வியில் முடிகிறது?" "ஏன் இவர் எங்குச் சென்றாலும் பிரபலமாகிறார்?" "எந்த வேலையையும் இவரால் மட்டும் எப்படி சரியான நேரத்தில் செய்ய முடிகிறது?" "இவரால் மட்டும் எப்படி எப்பொழுதுமே மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?" "இவன் எல்லோரிடமும் சணடை போடுகிறானே, ஏன்?" இப்படி நம்மைச் சுற்றிய மனிதர்களின் செயல்களுக்கு ஆதாரமான எண்ணங்களை ஆராயுங்கள். அவர்களின் செயல்களின் காரணங்கள் புரியும்.

எதிராளியின் எண்ணம் புரியாத போது நாம் நம் உறவுகளைச் சீர் குலைய விடுகிறோம்.

அவர் எண்ணத்தைப் புரிந்து நாம் எடுக்கும் முடிவுக்கும் அடிப்படை நம் எண்ணம் தாம். என்ன விசு பட வசனம் மாதிரி இருக்கா? சரி, கொஞ்சம் எளிமை படுத்தலாம் வாங்க...!

ப்ரமோஷன் வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டார். மேலதிகாரியான உங்களுக்குக் குழப்பமாக உள்ளது. "எந்தக் கிறுக்கனாவது பணமும் பவரும் வேண்டாம்னு சொல்வானா? என்ன ஆள் இவன்?" என்று யோசிக்கிறீர்கள். பின்பு, விசாரித்ததில் புரிகிறது. தொழிற்சங்க உறுப்பினர் தகுதி ப்ரமோஷனால் பறி போகும். பதவி உயர்வை விடத் தொழிற்சங்க அடையாளம் பெரிது என்று எண்ணி அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.

இப்போது இந்த அறிதல் உங்கள் எண்ணத்தை இப்படி மாற்றலாம். "சரியான அரசியல்வாதி போல. இங்கேயே இருந்து என்னென்ன பிரச்சினை செய்வானோ? கொஞ்சம் ஜாக்கிரதையா டீல் பண்ணணும்!"

அல்லது இப்படி ஓர் எண்ணம் தோன்றலாம்: "என்ன ஒரு கொள்கைப்பிடிப்பு. அவ்வளவு தீவிரமான ஈடுபாடா? நாமெல்லாம் காசு கிடைச்சா போதும்னு நினைக்கறப்ப இப்படிப் பொதுக் காரணத்துக்கு உழைக்கும் ஆளைப் பாக்கறதே பெரிய விஷயம். அந்த ஆளைப் பாத்து இன்னும் நிறைய தெரிஞ்சக்கணும்!"

எந்த எண்ணத்தைத் தேர்ந்தெடுக்கிறீகளோ அது அவருடனான உங்கள் உறவை தீர்மானிக்கும்.

ஆம். நீங்கள் உங்கள் எண்ணத்தைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்!

"நீங்கள் உங்கள் வியாதியைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்!" என்பார் தீபச் சோப்ரா. உங்கள் எண்ணம்தான் உங்களை நோய்வாய்ப்படுத்தும் என்றால் நம்புவீர்களா?

"அப்படியா ஆச்சர்யமாக இருக்கே.!" என்பதும் "ரொம்ப கதை விடறார்!" என்பதும் இரு எண்ணங்கள். எந்த எண்ணத்தை இப்பொழுது தேர்ந்தெடுத்தீர்கள் என்று பாருங்கள்.

உங்கள் தேர்வு உங்கள் தேடலை நிச்சயிக்கும்!

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com


பக்குவப்பட்ட உணர்ச்சிகள் நேர்மறையான நல்ல எண்ணங்களை வளர்க்கும்.!


நல்ல சிந்தனை வேண்டும் என்பதைத் திரும்பத் திரும்ப சொல்ல வேண்டியிருக்கிறது. கெட்ட சிந்தனை எளிதில் வருகிறது.

ஒரு கண் பார்வையற்ற மனிதன் மலை ஏறி சிகரத்தைத் தொட்டான் என்று செய்தி வந்தால் கூடப் பெரிய ஊக்கம் தோன்றுவதில்லை. சாதிச் சண்டையில் சதக் சதக் என்று குத்தினான் என்றால் ஆர்வமாய்ப் படிக்கிறோம். டி.வி நிகழ்ச்சியில் ஒரு பொருளாதார நிபுணர் பேசினால் அலுப்பு வருகிறது. ஆனால், அதிலேயே ஒரு மாமியார் மருமகளைக் கொடுமைப்படுத்தினால் கண் இமைக்காமல் பார்க்கிறோம்.

ஒருவரைப் பயமுறுத்துதல் எளிது. பெரிய அறிவு ஏதும் வேண்டியதில்லை. ஒரு பொய்த் தகவல் கூடப் போதும். ஆனால் ஒருவரை மகிழ்விப்பது பெரும் பணி. நிறையத் திறன் தேவைப்படுகிறது.

"உங்கள் அலுவலகத்தில் வெடிகுண்டு மிரட்டல் உள்ளது" என்று பதற்றமாக யாராவது சொன்னால், "எனக்கு ஏதும் மின்னஞ்சல் வரவில்லையே! வெடி குண்டு வைத்ததற்கு ஏதும் சாட்சி உண்டா? " என்று எந்த அறிவுஜீவியும் கேட்கமாட்டார். முதல் வேலையாக வெளியே எழுந்து ஓடுவார்.

அதே போல, கோபப்படுத்துவதும் எளிது. ஒரு சிறு கொசு கூட அதைச் செய்ய முடியும். உங்களுக்கு வேண்டாதவர் பற்றிய சிறு எண்ணம் கூடப் போதும். அதனால்தான் மிகச்சிறிய தூண்டுதலில் கூடப் பெரும் வன்முறைகள் நடந்துவிடுகின்றன.

ஏன் இப்படி? நம் மூளை அப்படி உருவாகியுள்ளது. அதுதான் காரணம். அடிப்படையில் நம் மனித மூளை இன்னமும் பிரதானமாக ஒரு மிருக மூளை தான். முதுகுத் தண்டின் மேற்பகுதியில் இணைக்கப்பட்டுள்ள மூளையின் பின் பகுதிதான் புலனறிவுகளின் செயலகம்.

மிருகத்தின் முக்கியத் தேவைகள் தன் உயிர் காப்பதும், இரை தேடுவதும், இனப்பெருக்க உணர்வும்தான். அதற்குத் தேவையான செயல்பாடுகள் அடிப்படையான ஆதார உணர்வுகளைச் சார்ந்தவை. அச்சம்தான் நம் முதல் உணர்ச்சி. கோபம் கூட அடுத்த கட்டத்தில்தான் தோன்றுகிறது. அதனால்தான் அச்சத்தை நம் மூளை தேடிப் பிடித்து உள்வாங்கிக்கொள்கிறது.

"உங்கள் குழந்தையின் உணவில் போதிய போஷாக்கு இருக்குதா? உங்கள் டூத் பேஸ்ட்டில் உப்பு இருக்குதா? உங்களுக்குக் கொஞ்சமாவது துப்பு இருக்குதா?" என்றெல்லாம் கேட்கும் விளம்பரங்கள் அடிப்படையில் அச்சத்தை உருவாக்கி அதன் மூலம் விற்பனையை வளர்க்க நினைக்கின்றன. காரணம் அச்சம் நமக்குச் சுலபமாக வரும்.

மூளையின் முன்பகுதி நவீனமானது. பல ஆயிர வருடங்களின் பரிணாமத்தில் வந்த நிர்வாக மூளை அது. சிந்தனை, பகுத்தறிவு, திட்டமிடுதல், செயலாக்கம் என மனிதனின் முன்னேற்றத்துக்கு ஆதாரமான அனைத்தும் இங்குதான் செயல்படுத்தப்படுகின்றன.

அதனால் கூர்ந்து நோக்குவது, யோசிப்பது, புதிதாகப் படைப்பது, நகைச்சுவை, நம்பிக்கை எல்லாம் சற்று பக்குவமான மனநிலையில் மட்டுமே ஏற்படுபவை.

அடிப்படை உணர்ச்சிகள் எதிர்மறையான கெட்ட எண்ணங்களை வளர்க்கும். பக்குவப்பட்ட உணர்ச்சிகள் நேர்மறையான நல்ல எண்ணங்களை வளர்க்கும்.

இது இரு வழிப்பாதையும் கூட. எதிர்மறை எண்ணங்கள் அச்சம், கோபம் போன்ற அடிப்படை உணர்ச்சிகளை வளர்க்கும். நேர்மறை எண்ணங்கள் மகிழ்ச்சி, நம்பிக்கை போன்ற பக்குவப்பட்ட உணர்ச்சிகளை வளர்க்கும்!

இன்னொரு விஷயமும் உள்ளது. நெருக்கடியான நிலையில் பின் மூளை உடனடி யாகச் செயல்படும். முன் மூளை சற்று நேர மெடுக்கும்.

நீங்கள் உங்கள் மனைவியிடம் சின்ன வாக்குவாதம் செய்கிறீர்கள். அவர் சொன்ன ஒரு வார்த்தையில் சற்று நிதானமிழந்து நீங்கள் பதிலுக்கு அவர் குடும்பத்தையும் சேர்த்துத் திட்டிவிடுகிறீர்கள். பின் சில நொடிகளில் செய்த பாதகமும் அதன் பின் விளைவுகளும் புரிகின்றன.

உங்கள் மனைவி ஒத்துழையாமை இயக்கம் நடத்தலாம். பதிலுக்கு நம் குடும்பத்தினரின் மொத்த வரலாறும் வரிசை மாறாமல் வரலாம். குறைந்த பட்சம் அன்றைய நிம்மதியும் தூக்கமும் போகலாம். இதெல்லாம் புரிந்து, " நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை..!"என்றெல்லாம் சொல்லிச் சமாளிக்கிறீர்கள்.

ஆனால் உங்கள் பின் மூளை செயல்பாட்டின் தாக்குதல் உங்கள் மனைவியின் பின் மூளையைத் தாக்க, " எல்லாம் சொல்லிட்டீங்க. உங்க புத்தி தெரியாதா?" என்று கோபத்தில் எழுந்து போகிறார். பின் அவரின் முன் மூளை சற்று பகுத்தறிவுடன் யோசித்து, "குழந்தைங்க முன்னாடி சண்டை போட்டா அது அவங்களை பாதிக்கும். ஹூம்.. அவர் எப்பவும் இப்படித்தான் புதுசா என்ன?" என்று சமாதானமாகிறார்.

ஒரு உறவில் ஏற்படும் உரசலின் அனாடமி இது.

அதனால்தான் சொன்னேன். அச்சம், கோபம், போன்ற நெகட்டிவ் எண்ணங்கள் எல்லாம் முந்திக் கொண்டு வருகின்றன. அமைதி, மகிழ்ச்சி, நம்பிக்கை, போன்ற பாஸிட்டிவ் எண்ணங்கள் அவ்வளவு இயல்பாக வருவதில்லை. அதற்கு நிறைய முயற்சியும் பயிற்சியும் தேவைப்படுகின்றன.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்றதும் என்னென்ன கருத்துகள் வந்தன? "கோஹ்லி சரியில்லை. எல்லாம் அனுஷ்கா ஷர்மா ராசி". "தோனியே சொதப்பிட்டார்" இப்படி வந்தவைதான் அதிகம். "அன்று ஆஸ்திரேலியா நம்மை விட நன்றாக விளையாடியது" என்று சொல்லியவர்கள் எத்தனை பேர்?

வாழ்க்கையில் சிக்கல்கள் இல்லை. அதை நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில்தான் சிக்கல்கள் உள்ளன. நம் வாழ்க்கையில் நடப்பவை நம்மை துன்புறுத்துவதில்லை. அதைப் பற்றி நாம் எண்ணும் எண்ணங்கள்தான் நம்மை துன்புறுத்துகின்றன.

நம்மால் நம் எண்ணங்களையும் உணர்வுகளையும் மாற்ற முடியும். மூளையும் மனமும் இசைந்து அற்புதங்கள் நிகழ்த்தலாம்!

இதுதான் உலகின் அத்தனை மதங்களும் ஒரே குரலில் சொல்லும் மந்திரம்!



 

"எல்லாம் சுயநிதி மெட்ரிக் பள்ளிகள் - கல்வி அதிகாரிகளின் கூட்டுக்கொள்ளை!"


ஓவியம்: முத்து
ஓவியம்: முத்து

ஓசூரில் தனியார் மெட்ரிக் பள்ளியில் 'வாட்ஸ் அப்'மூலம் பிளஸ் டூ வினாத்தாள் வெளியான விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது, பனிப்பாறையின் நுனி மட்டும் தான். கப்பலையே தகர்க்கும் கண்ணுக்குத் தெரியாத 'மிதக்கும் பனிப்பாறைகள்' ஏராளம் என்கிறார் பள்ளிக் கல்வித் துறையில் நீண்ட அனுபவம் கொண்டவரும், தமிழ்நாடு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளருமான என்.குணசேகரன்.

ஓசூரில் பிளஸ் டூ தேர்வில் 'வாட்ஸ் அப்' மூலம் வினாத்தாள் வெளியானது எதைக் காட்டுகிறது?

நமது தேர்வுமுறை எந்த அளவுக்குத் தோல்வி அடைந்துள்ளது என்பதையே காட்டுகிறது. இது ஒன்றும் புதிதல்ல. தொழில்நுட்பம் மாறியிருக்கிறது. அவ்வளவே. இதுபோன்ற முறைகேடுகள் பொதுவாக அரசுப் பள்ளிகளில் நடப்பதில்லை. எல்லா தனியார் பள்ளிகளிலும் நடப்பதில்லை. பேராசை பிடித்த சுயநிதி மெட்ரிக் பள்ளி களில்தான் இதுபோன்ற முறைகேடுகள் அதிகம் நடக்கின்றன.

ஒவ்வொரு சுயநிதி மெட்ரிக் பள்ளிக்குப் பின்னாலும் ஓய்வுபெற்ற கல்வித் துறை அதிகாரிகளும், அரசியல் பிரமுகர்களும், அரசுப் பள்ளி ஆசியர்களும் இருப்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அரசுப் பள்ளி ஆசிரியர்களின் மனப்போக்கும் இவர்களுக்கு ஆதரவாகவே உள்ளது. அவர்களின் பிள்ளைகள் படிப்பதும் பெரும்பாலும் இந்த சுயநிதி மெட்ரிக் பள்ளிகளில்தானே. சுயநிதிப் பள்ளிகளின் ஆதிக்கத்தில்தான் பள்ளிக் கல்வித் துறையே இயங்குகிறது.

தவறுக்குக் காரணமான மாவட்டக் கல்வி அலுவலர் (டிஇஓ) பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளாரே?

பிளஸ் டூ தேர்வைப் பொறுத்தவரை டிஇஓ பங்கு குறைவுதான். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்தான் (சிஇஓ) முழுப் பொறுப்பு. சிஇஓ-வுக்குத் தெரியாமல் டிஇஓ செயல்பட வாய்ப்பில்லை. மேலிருந்து கீழ் வரை ஒட்டுமொத்த அமைப்புமே இதற்குக் காரணம். பிரச்சினை பெரிதாகும்போது சிலர் பலிகடா ஆக்கப்படுகிறார்கள்.

சுயநிதி மெட்ரிக் பள்ளிகளைத் தேர்வு மையங்களாக அனுமதிப்பது, தேர்வுப் பணிக்கு மெட்ரிக் பள்ளி ஆசிரியர் களை நியமிப்பது இரண்டுமே விதிகளுக்குப் புறம்பானது; தவிர்க்கப்பட வேண்டும்.

பிளஸ் டூ தேர்வில் வேறு என்ன மாதிரியெல்லாம் முறைகேடுகள் நடக்கின்றன?

மெரிட்டில் மருத்துவம், பொறியியல் சேர்வதற்கான 'கோர் சப்ஜெக்ட்ஸ்' எனப்படும் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் எழுதும் மாணவர்கள் 100% மதிப்பெண் எடுப்பதற்கு ஏதுவாகத் தேர்வு அறையிலேயே ஏற்பாடு செய்வார்கள்.

ஒரு மதிப்பெண் வினாக்களில் அதிக கவனம் எடுத்துக்கொள்வார்கள். இதுபோன்ற பள்ளிகளில் 10-ம் வகுப்பில் 450-க்கு மேல் எடுத்தவர்களைத்தான் பிளஸ் ஒன்-ல் சேர்ப்பார்கள். அவர்கள் 100% மதிப்பெண்ணை எட்டுவதற்கு 5 - 10 மதிப்பெண்களுக்குத்தான் சிரமப்படுவார்கள். அந்த மதிப்பெண்கள்தான் 'தீர்மானிக்கும் காரணி'. ஆகவே, அதை நேர்செய்வதற்காகத்தான் அறைக் கண்காணிப்பாளரைச் சரிக்கட்டுவார்கள்.

இந்தப் பள்ளிக்கு இவர்தான் தலைமைக் கண்காணிப்பாளர், அறை கண்காணிப்பாளர் என்பதை யார் முடிவு செய்வது?

சிஇஓ சொல்வதைத்தான் பி.ஏ., டிஇஓ நடைமுறைப் படுத்துவார். ஆனால், அதற்கெல்லாம் அடிப்படை சூத்திர தாரிகள் தனியார் பள்ளி முதலாளிகள்தான்.

அதிகாரிகளை அவ்வளவு எளிதாகக் கையாள முடியுமா?

பிரபலமான தனியார் மெட்ரிக் பள்ளி அதிபர்களின் பார்வைக்கு, சிஇஓ-க்கள் யாரும் அதிகாரிகளாகத் தெரிவதில்லை. மிகச் சாதாரணமான அரசு அலுவர்களாகத்தான் பார்ப்பார்கள். வசதியான மெட்ரிக் பள்ளிகளைப் போய்ப் பாருங்கள், பணி ஓய்வுபெற்ற சிஇஓ-க்கள் நிர்வாக மேற்பார்வையாளர் என்ற பெயரில் இருப்பார்கள். அரசுக்கும் பள்ளிக்கும் தொடர்பாளர்களாக(!) அவர்கள் வேலை செய்துகொண்டிருப்பார்கள். அதற்காகத்தான் நிர்வாகம் மாதம் ரூ. 30,000, ரூ. 40,000 தந்து அவர்களை அமர்த்திக்கொள்கிறது.

அறைக் கண்காணிப்பாளர் நினைத்தால் தேர்வு மையங்களில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க முடியாதா?

செய்யலாம், அப்படித்தான் ஒன்றிரண்டு முறைகேடுகள் வெளியே வந்துள்ளன. மருத்துவம், பொறியியல் சேர்க்கையை மட்டுமே குறிவைத்துப் பள்ளிகளை நடத்தும் ஊர்களில் 'சிண்டிகேட்' அமைத்து, மொத்தமாகப் பெரிய தொகையை அதிகாரிகளுக்குக் கொடுத்து, இதுபோன்ற விஷயமே வெளியே வராமல் பார்த்துக்கொள்வார்கள். பொதுத்தேர்வு நேரம்தான் சிஇஓ-க்களுக்கு அறுவடைக் காலம். ஓய்வு பெறுவதற்கு முன் லாட்டரி அடிக்கும் நேரம்.

தனியார் பள்ளிகளை எது இப்படிச் செயல்பட வைக்கிறது?

அரசுப் பள்ளி நிர்வாகத்துக்குத் தேர்ச்சி மட்டும்தான் இலக்கு. ஆனால், சுயநிதி மெட்ரிக் பள்ளி நிறுவனங்களுக்கு மருத்துவம், பொறியியல்தான் இலக்கு. இந்த வெற்றியை விளம்பரப்படுத்தித்தான் பிளஸ் ஒன், பிளஸ் டூ-வில் ஆண்டுக்கு தலா ரூ.2 லட்சம், ரூ.3 லட்சம் என்று வசூல் செய்ய முடியும். இரண்டு மதிப்பெண், நான்கு மதிப்பெண்ணில் மெடிக்கல் சீட் கிடைக்கவில்லை என்றால், ஒரு பெற்றோருக்கு ரூ.40 லட்சம் இழப்பு. 4 லட்சம் போனாலும் பரவாயில்லை, 40 லட்சத்தை இழக்க வேண்டியதில்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

'நாமக்கல் மாதிரி கல்வி' மூலம் சதம் எடுக்க வைக்கிறோம் என்பதெல்லாம்?

உண்மைதான். இந்தப் பள்ளிகள் பிளஸ் டூ பொதுத் தேர்வுக்கு, பிளஸ் ஒன்னிலிருந்தே மாணவர்களைத் தயார்ப்படுத்துவார்கள். தொடர்ந்து மனப்பாடம், தேர்வு, மனப்பாடம், தேர்வு என்று ஒரு ஜெராக்ஸ் இயந்திரம்போல மாணவர்களை ஆக்கிவிடுவார்கள். இதனால், பெரும்பாலான கேள்விகளுக்கு மாணவர்கள் பதில் எழுதிவிடுவார்கள். சற்றே மாற்றி (ட்விஸ்ட்) கேள்வி கேட்டால் தடுமாறுவார்கள். அந்த இடத்தில்தான் நிர்வாகத்தின் கைங்கர்யம் தேவைப்படும். அதைச் செய்வதற்குத்தான் இத்தகைய குறுக்குவழிகள்.

இந்த நிலைமையையெல்லாம் எப்படி மாற்றுவது? உண்மையில், திறமையான மாணவர்கள் முன்னுக்கு வரும்படியான தேர்வு முறையைக் கொண்டுவர என்ன செய்வது?

இடைக்காலத் தீர்வாக, தனியார் மெட்ரிக் பள்ளிகளில் தேர்வு மையங்களை ரத்துசெய்துவிட்டு, அரசுப் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களை மட்டுமே கொண்டு தேர்வை நடத்தலாம். நிரந்தரத் தீர்வாக, பள்ளிக் கல்விக்குத் தொடர்பே இல்லாத டிஎன்பிஎஸ்சி போன்ற தனித்த தேர்வுத் துறையை ஏற்படுத்தி, அவர்களிடம் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒப்படைக்கலாம்.

இந்தியாவில் மருத்துவம், பொறியியல் கல்விக்கான போட்டிதான் இந்த வணிகக் கொள்ளையின் ஆணி வேர். ஆனால், உலக நாடுகள் கல்வியைப் பார்க்கும் விதமே வேறு. குறைந்தபட்ச பள்ளிக் கல்வியே போதும் என்ற நடைமுறைதான் பல முன்னேறிய நாடுகளில் உள்ளது. அதுவும் முழுமையான இலவசக் கல்வியாக இருக்கிறது. முழுமையான இலவசக் கல்வியே சமூகத்தின் உயரிய சொத்தாக அங்கே கருதப்படுகிறது. ஆகவே, தரமான இலவசக் கல்வி என்ற முழுமையான மாற்றத்துக்கான வழிமுறையைக் கல்வியாளர்கள், அறிஞர்கள், சமூக சிந்தனையாளர்கள் கூடி விவாதித்துக் கண்டறிய வேண்டும். இதுகுறித்த அக்கறை அரசுக்கும் ஆட்சிக்கு வருவோருக்கும் இல்லாமல் துளியளவுகூட மாற்றம் ஏற்படாது!

- சி. கதிரவன், 
தொடர்புக்கு: kadhiravan.c@thehindutamil.co.in


 

செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் 11 வயதைக் கடந்தவர்களும்(2003-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதிக்குப் பிறகு பிறந்த ) பெண் குழந்தைகள் சேரலாம்



செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் 11 வயதைக் கடந்தவர்களும் சேரலாம் என்று அஞ்சல் துறை அறிவித்துள்ளது.

பெண்குழந்தைகளுக்கு உயர் கல்வி கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் தபால்நிலையங்களில் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தை அஞ்சல் துறை கடந்த ஜனவரி 26-ம் தேதி அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தில் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் சேரலாம். ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் 2 பெண் குழந்தைகள் இத்திட்டத்தில் சேரலாம். கணக்குத் தொடங்குவதற்கு ஆயிரம் ரூபாய் செலுத்தவேண்டும். அதன்பிறகு, ரூ.100-க்கு மேல் விருப்பம் போல் தொகையைச் செலுத்தலாம். ஆண்டுக்கு குறைந்தது ஆயிரம் ரூபாய் செலுத்தவேண்டும். 21-வயது வரை பணம் செலுத்தியதும், முதிர்ச்சித் தொகை, கூட்டு வட்டியுடன் சேர்த்து கொடுக்கப்படும். இந்தத் திட்டம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இது குறித்து தமிழக அஞ்சல் வட்டார தலைமை அலுவலகத்தினர் கூறியதாவது:

தமிழகத்தில் மார்ச் 31-ம் தேதி வரை இத்திட்டத்தில் 6 லட்சத்து 11 ஆயிரத்து 835 பெண் குழந்தைகள் சேர்ந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் 2.23 லட்சம் பேர் கணக்கினைத் தொடங்கியுள்ளனர். திருச்சி மண்டலத்தில் 1.72 லட்சம் பேரும், மதுரை மண்டலத்தில் 1.22 லட்சம் பேரும், கோவை மண்டலத்தில் 93 ஆயிரம் பேரும் இத்திட்டத்தின் கீழ் கணக்குத் தொடங்கியுள்ளனர். இதன்மூலம், ரூ.84.55 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

10 வயது என்கிற குறி்ப்பிட்ட வரம்பு காரணமாக, இத்திட்டத்தில் கணக்குத் தொடங்க முடியாத பெண்குழந்தைகளின் பெற் றோரின் வருத்தத்தை உணர முடிகிறது. அதனால், 11 வயதைக் கடந்த பெண் குழந்தைகளையும் இதில் சேர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 2003-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதிக்குப் பிறகு பிறந்த பெண் குழந்தைகள் அனைவரும் இத்திட்டத்தில் சேரமுடியும். இந்த சலுகை, வரும் டிசம்பர் 3-ம் தேதி வரை மட்டுமே இருக்கும்.

இத்திட்டத்தின் கீழ் சேர்ந்தி ருக்கும் தொகையில் 50 சதவீதத்தை தேவைப்பட்டால் 18 வயது நிறைவடைந்ததற்குப் பிறகு எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அதற்கு முன்பு எடுக்கமுடியாது. ஒரு வேளை பணத்தைத் தொடர்ந்து செலுத்த முடியாவிட்டாலும், அதுவரை கட்டிய பணத்தை 21 வயதுக்குப் பிறகே எடுக்கமுடியும். ஆனால், இடையில் பணம் செலுத்தாத ஆண்டுகளுக்கு தலா ரூ.50 வீதம் அபராதம் செலுத்தவேண்டும். இத்திட்டத்தில் சேர, வயதுச் சான்றிதழ், முகவரி சான்றிதழ், அடையாளச் சான்று ஆகியவை அவசியம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதில் சேருவதற்கு, ரூ.1000 இல்லையென வருத்தப்படு வோருக்கு வேறு வழியைத் தபால் துறை காட்டுகிறது. இதன்மூலம் ரூ.50 செலுத்தி, அஞ்சலக சேமிப்புக்கணக்கைத் தொடங்க வேண்டும். அதில், கொஞ்சம், கொஞ்சமாக பணம் செலுத்தி ரூ.ஆயிரம் சேர்ந்ததும், அதைக் கொண்டு செல்வமகள் திட்டத்தில் கணக்குத் தொடங்கலாம்.

 

தனித் தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: ஏப்.15 முதல்விண்ணப்பிக்கலாம்

தனித் தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: ஏப்.15 முதல்விண்ணப்பிக்கலாம்
எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வுக்கு ஏப்ரல் 15 முதல் 21 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்என, அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2015-ஆம் ஆண்டில் நடைபெற உள்ள தனித் தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மே 1-ஆம் தேதியன்று
பன்னிரண்டரை வயது பூர்த்தியடைந்த தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு மையங்களில்
தேர்வர்கள் தங்களது விண்ணப்பங்களை ஏப்ரல் 15 முதல் 21-ஆம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம்.
தேர்வுக் கட்டணம் ரூ.125, பதிவுக் கட்டணமாக கூடுதலாக ரூ.50 செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை பணமாகச் செலுத்தவேண்டும். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித் தகுதி எதுவும் இல்லை. அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 8-ஆம் வகுப்பிற்குக் கீழ் படித்து இடையில் நின்றவர்களும் தனித் தேர்வர்களாக விண்ணப்பிக்கலாம். ஆனால், பன்னிரண்டரை வயது
பூர்த்தியடைந்திருக்க வேண்டும். இணையதள விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றின் ஏதேனும் ஒரு நகலை இணைக்கவேண்டும். இதற்கு தத்தகல் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வழங்கப்படாது என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

அவசர கால அழைப்பு எண் 112 டிராய் பரிந்துரை

நாடு முழுவதுக்குமான அவசர கால அழைப்பு எண்ணாக 112 என்ற ஒரே எண்ணை
பயன்படுத்தி கொள்ள தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) பரிந்துரைத்
துள்ளது. தற்போது ஒவ்வொரு துறைக்கும் என தனித்தனியாக, 100,101,102,108 என்ற அவசரகால
அழைப்பு எண்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து 112
எண்களாக பயன்படுத்த முடியும் என டிராய் தெரிவித்துள்ளது. இதன்படி தனித்தனியாக செல்லும்
அனைத்து அழைப்புகளும் 112 என்ற மைய எண்ணிற்கு தகவல் சென்றடையும். அங்கிருந்து எந்த விதமான உதவி தேவைப்படுகிறதோ அந்த துறைக்கு அழைப்பு மாற்றம் செய்யப்படும் .

மத்திய அரசு ஊழியர்கள்மற்றும் ஓய்வூதியர்களுக்கு ஆறு சதவீதஅகவிலைப்படியை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அரசு ஊழியர்கள்மற்றும் ஓய்வூதியர்களுக்கு ஆறு சதவீதஅகவிலைப்படியை உயர்த்த மத்திய
அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது
பிரதமர் நரேந்திர மோடிதலைமையிலான மத்திய அமைச்சரவைக்குழு, இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டதை அடுத்து, நேற்றுஇதற்கான அறிவிப்பு வெளியானதுஅரசு ஊழியர்களுக்கு
தற்போது, 107 சதவீதமாக வழங்கப்படும் அகவிலைப்படி, இனி, 113 சதவீதமாக உயர்த்தப்படும் ஜனவரி மாதம் முதல் முன்தேதியிட்டு இதற்கான நிலுவைத் தொகைகள்வழங்கப்படும் எனவும் அறிவிக்க பட்டுள்ளது இதன் மூலம், 45 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 55 லட்சம்ஓய்வூதியர்களும் பயனடைவர்

முதுகலை,பட்டதாரி,சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிட விவரங்களை அரசு கோரியுள்ளது.

07.04.205 ல் உள்ளபடி முதுகலை,பட்டதாரி,சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிட விவரங்களை அரசு கோரியுள்ளது.சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் 09.04.2015 க்குள் விவரம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

X. VALUATION TIME TABLE 2015

பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வில், குழப்பமாக இடம்பெற்ற வினாக்களுக்கு, ஆறு மதிப்பெண் வழங்க வேண்டும்'!

'பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வில், குழப்பமாக இடம்பெற்ற வினாக்களுக்கு, ஆறு
மதிப்பெண் வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து, மதுரை மாவட்டச் செயலர் முருகன் கூறியதாவது: கணிதத் தேர்வில், ஒரு மதிப்பெண் பகுதியில் இடம்பெற்ற, 15வது வினா, தமிழில் ஒரு அர்த்தத்திலும், ஆங்கிலத்தில் வேறு
அர்த்தம் பெறும் வகையிலும் கேட்கப்பட்டது. மேலும், ஐந்து மதிப்பெண் பகுதியில், 38வது வினா,
'புளூபிரின்ட்' அடிப்படையில் இடம் பெறவில்லை. பாடப் பகுதியில் இல்லாத, 'சாய்சதுரம்' பகுதியில் இருந்து கேட்கப்பட்டது. அதே வினா, ஆங்கிலத்தில் குழப்பமாக கேட்கப்பட்டது. எனவே, இந்த இரண்டு
வினாக்களுக்கும், விடையளிக்க முயற்சித்த மாணவர்களுக்கு, ஆறு மதிப்பெண் வழங்க வேண்டும். சங்கம் சார்பில்இந்த கோரிக்கையை, தேர்வுத்துறை இயக்குனரிடம் வலியுறுத்தி உள்ளோம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

பிளஸ் 2 வேதியியல் பாடத்தேர்வில் 2 மதிப்பெண் 'போனஸ்'

பிளஸ் 2 வேதியியல் பாடத்தேர்வில் 2 மதிப்பெண் 'போனஸ்' ஆக வழங்க கல்வித்துறை
பரிந்துரை செய்துள்ளது. பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
வேதியியல் பாடத்தில் 'பகுதி ஏ' பிரிவில் ஒரு மார்க் கேள்வியில் வினா 10 மற்றும் 22 ஆகிய இரு
கேள்விகள் தவறாக கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்விக்கு நான்கு விடைகள் வழங்கப்பட்டிருந்தது.
இந்த கேள்விகளை எழுதி ஏ, பி, சி, டி., என ஏதேனும் ஒன்றை குறிப்பிட்டு இருந்தால் ஒரு
கேள்விக்கு ஒரு மதிப்பெண் வீதம் இரண்டு கேள்விகளுக்கும் 2 மதிப்பெண்கள் போனசாக வழங்க கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு பொதுத் தேர்வு பணிகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என தமிழக கல்விதுறை அமைச்சு பணியாளர்கள் போர்க்கொடி

அரசு பொதுத் தேர்வு பணிகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என தமிழக கல்விதுறை
அமைச்சு பணியாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.பள்ளி கல்வித் துறையில் இருந்து அரசுத் தேர்வுத் துறை தனியாக பிரிக்கப்பட்டு இயக்குனர்பணியிடம் உருவாக்கப்பட்டது. மதுரை உட்பட 6 இடங்களில் மண்டல அரசு தேர்வுகள் துணைஇயக்குனர் அலுவலகங்கள் உள்ளன. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர்.ஆனால் 'இத்துறை பணியாளர்களை பொதுத் தேர்வுப் பணிகளில் ஈடுபடுத்துவது மிகவும் குறைவாக உள்ளது' என கல்வித் துறை அமைச்சுப் பணியாளர்கள் தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு கல்வித் துறை அலுவலக பணியாளர் சங்கம் சார்பில் சென்னையில் நடந்த நிர்வாகக் குழுக்கூட்டத்தில் 'கல்வித் துறையில் பணிபுரியும் அனைத்து நிலை அலுவலக பணியாளர்களுக்கும் தொடர்பில்லாதவேறு துறையான தேர்வுத் துறை சார்ந்த பணிகளில் ஈடுபடுத்துவதை தவிர்த்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' எனதீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வுப் பணிகளின்போது தஞ்சை, திருவாரூர்,கடலூர் மாவட்டங்களில் அமைச்சுப் பணியாளர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தான் அவர்களின் இந்த முடிவுக்கு காரணம். அதேநேரத்தில் சம்மந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என அமைச்சுப் பணியாளர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். இப்பிரச்னை குறித்து தமிழ்நாடு கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்க மாநிலத் தலைவர் சவுரி அருணாசலம்,பொருளாளர் துரைப்பாண்டி கூறியதாவது: தமிழகத்தில் 1974 முதல் தேர்வுத் துறை தனியாக பிரிக்கப்பட்டது.அங்கு பணியாளர்கள் இருந்தும் பொதுத் தேர்வுகளில் அவர்களை ஈடுபடுத்துவது மிகவும் குறைவாக உள்ளது.
'ஆன்லைன்' பயன்பாடு மூலம் தேர்வுத் துறை பணிகள் மிக எளிமையாக்கப்பட்டன. 90 சதவீதம் தேர்வுப் பணிகளைகல்வி துறை அமைச்சுப் பணியாளர்கள் மேற்கொள்கின்றனர். அதேநேரம் தற்போது தேர்வுப் பணிகளை காரணம்காட்டி அமைச்சுப் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுத்த தேர்வுத் துறை, கல்வி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதை வலியுறுத்தியும், வரும் தேர்வுகளின் போது அப்பணிகளில் இருந்து விடுவிக்ககோரியும் ஏப்.,15ல் உண்ணாவிரதம், ஏப்.,22 ல் விடைத்தாள் திருத்தும் மையங்கள் முன் வாயிற் கூட்டம் போன்ற போராட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றனர்.

செவ்வாய், 7 ஏப்ரல், 2015

தமிழர்கள் மகிழ்ச்சி :இஸ்ரோ செயற்கைக் கோள் மையத்தின் இயக்குநராக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை


பெங்களூரு இஸ்ரோ செயற்கைக் கோள் மையத்தின் இயக்குநராக விஞ்ஞானி மயில்சாமி அண்ணா துரை நியமிக்கப்பட்டுள்ளார். தமிழர் ஒருவ‌ருக்கு இஸ்ரோவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட் டுள்ள‌தால் தமிழர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக இஸ்ரோ மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இஸ்ரோவின் முக்கிய விஞ்ஞானியும், சந்திரயான்-1 திட்ட இயக்குநருமான மயில்சாமி அண்ணாதுரை, பெங்களூரு இஸ்ரோ செயற்கைக் கோள் மையத்தின் இயக்குநராக நியமிக் கப்பட்டுள்ளார். இந்த மையத்தின் இயக்குநராக இருந்த விஞ்ஞானி சிவகுமாரின் பதவிக் காலம் கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் முடி வடைந்தது. இதையடுத்து, கடந்த ஏப்ரல் 1-ம் தேதி மயில்சாமி அண்ணாதுரை புதிய இயக்குந ராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த 1958-ம் ஆண்டு ஜூலை 2-ம் தேதி கோவை மாவட்டத்தில் மயில்சாமி அண்ணா துரை பிறந்தார். அங்குள்ள கல்லூரியில் பொறியியல் பயின்ற அவர் 1982-ம் ஆண்டு இஸ்ரோவில் சேர்ந்தார்.

சிறு செயற்கைக்கோள் உரு வாக்க திட்டங்கள், இன்சாட் செயற்கைக் கோள்கள் உருவாக் கத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளார். உலக அளவில் இஸ்ரோ வுக்கு நற்பெயரை பெற்றுத் தந்த சந்திரயான்-1-ன் திட்ட இயக்குநராகவும் இருந்துள்ளார். இதுமட்டு மில்லாமல் மங்கள்யான் உருவாக்கத்திலும் அண்ணாதுரை முக்கிய பங்காற்றியுள்ளார். விண்வெளித் துறையில் பல்வேறு சாதனை களை புரிந்துள்ள மயில்சாமி அண்ணாதுரைக்கு தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளன என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மயில்சாமி அண்ணாதுரைக்கு இஸ்ரோவின் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டு இருப்பதால் கர்நாடக தமிழர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


 

அரசு பொது இ-சேவை மையங்களில் ரூ.30 கட்டணத்தில் பிளாஸ்டிக் (பிவிசி) ஆதார் அட்டை வழங்கும் சேவை விரைவில்

 தமிழகத்தில் ஏற்கெனவே ஆதார் அட்டை கிடைக்கப் பெற்றவர்களுக்கு அரசு பொது இ-சேவை மையங்களில் ரூ.30 கட்டணத்தில் பிளாஸ்டிக் (பிவிசி) ஆதார் அட்டை வழங்கும் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் இதுவரை 4 கோடியே 74 லட்சம் பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த அட்டையின் அடிப்பகுதியில் உள்ள விவரங்களை வெட்டி அதை அடையாள ஆவணமாக பயன்படுத்துமாறு ஆதார் அட்டை வழங்கும் யூஐடிஏஐ நிறுவனம் அறிவுறுத்தி வருகிறது.

நாடு முழுவதும் ஆதார் அட்டை வழங்கும் சேவையை யூஐடிஏஐ நிறுவனம் நேரடியாக செய்து வந்தாலும், தமிழகத்தில் மாநில அரசின் அறிவுறுத்தல்படி மக்கள்தொகை பதிவேடு திட்ட முறையில் தமிழ்நாடு மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநரகம் ஆதார் அட்டைக்கான விவரங்களை பதிவு செய்து வருகிறது. எனவே யூஐடிஏஐ நிறுவனத்துக்கு தமிழகத்தில் அலுவலகம் திறக்கப்படவில்லை.

அதனால் ஆதார் அட்டை தொலைந்தாலோ, சேதமடைந்தாலோ வேறு அட்டை பெறுவதில் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது. அதற்கான தீர்வு இதுவரை வழங்கப்படவில்லை.

இந்நிலையில் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் பொது இ-சேவை மையங்களில் ஆதார் அட்டைகளை வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.

தமிழகம் முழுவதும் 254 தாலுகா அலுவலகங்களிலும் பொது இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஏற்கெனவே சாதிச் சான்று, இருப்பிடச் சான்று, வருமானச் சான்று வழங்குவது மற்றும் அரசின் சமூக நல திட்டங்களைப் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பதிவும் ஆன்லைனில் செய்யப்படுகின்றன. மேலும் பல்வேறு புதிய சேவைகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக ஏற்கெனவே ஆதார் அட்டை கிடைக்கப் பெற்றவர்களுக்கு ஏடிஎம் கார்டு வடிவில் பிளாஸ்டிக் ஆதார் கார்டுகளை வழங்கும் சேவை விரைவில் தொடங்க உள்ளது.

இது தொடர்பாக அரசு கேபிள் டிவி நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:

இந்த அட்டையை வழங்குவதற்கான உரிமத்தை யூஐடிஏஐ நிறுவனத்திடமிருந்து அரசு கேபிள் டிவி நிறுவனம் பெற்றுள்ளது. அதன்படி ரூ.30 கட்டணத்தில் பிவிசி என்று அழைக்கப்படும் பிளாஸ்டிக்கில் வண்ண ஆதார் அட்டை வழங்கப்படும். இதை வங்கி ஏடிஎம் மற்றும் பான் அட்டைகளோடு சேர்த்து பாக்கெட்டில் வைத்துக்கொள்வது எளிது. இதற்காக யூஐடிஏஐ நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட 196 பிரிண்டர்கள் சம்பந்தப்பட்ட பொது இ-சேவை மையங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இச்சேவை விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.

ஆதார் அட்டைக்கு உரியவர் தனது கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஆதார் அட்டை பதியும்போது வழங்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு அனுப்பப்படும் ஒன் டைம் பாஸ்வேர்டு என்று அழைக்கப்படும் ஓடிபி எண்ணை தெரிவிக்க வேண்டும். அதன் பிறகே பிளாஸ்டிக் ஆதார் அட்டையை பிரின்ட் செய்ய முடியும். விரைவில் கருவிழி படலத்தை பதிவு செய்து அதன் மூலம் சம்பந்தப்பட்ட நபரை அங்கீகரிக்கவும் திட்டமிட்டிருக்கிறோம். ஒரு நபர் எத்தனை அட்டைகளை வேண்டுமானாலும் தலா ரூ.30 கட்டணத்தில் பெற்றுக்கொள்ளலாம். இந்த அட்டையை வேறு நபர் பெற வாய்ப்பில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.



இந்த ஆண்டு அரசுத் துறைகளில்,50 ஆயிரம் காலியிடங்கள் உருவாக வாய்ப்புள்ளது-டி.என்.பி.எஸ்.சி., தலைவர் சி.பாலசுப்பிரமணியன் .

தட்டச்சர் பணி, தோட்டக்கலை அலுவலர் பணி மற்றும் குரூப் - 2 பணிகள் ஆகியவற்றுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு,டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடந்து வருகிறது.
இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் சி.பாலசுப்பிரமணியன் கூறியதாவது: டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வுப் பணிகள்முன்பை விட விரைவுபடுத்தப்பட்டு, மிகவும் வெளிப்படையான முறையில் நடக்கிறது; தேர்வு முடிவுகள் தாமதமின்றிவெளியிடப்படுகின்றன. கடந்த ஆண்டு நடந்த மாவட்டக் கல்வி அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள், இவ்வாரஇறுதியிலும், குரூப் - 4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதியிலும் வெளியிடப்படும்.
ஏற்கனவே தகுதித் தேர்வு நடத்தப்பட்ட,குரூப் - 1 பதவிகளுக்கு, மே 2, 3 மற்றும் 4ம் தேதிகளில் முதன்மைத் தேர்வு நடத்தப்படும். இந்த ஆண்டு அரசுத் துறைகளில்,50 ஆயிரம் காலியிடங்கள் உருவாக வாய்ப்புள்ளது. புதிய பணி நியமனத்துக்கான பட்டியல், அலுவலர் தேர்வுக் குழு பட்டியலின் படி நடக்கும். குரூப் - 2 பதவிகளுக்கு, 1,000 இடங்கள் காலியாக உள்ளன. இதேபோல், சப் - கலெக்டர், போலீஸ்
துணைக் கண்காணிப்பாளர் மற்றும் வணிகவரி அதிகாரி போன்ற, குரூப் - 1 பதவிகளுக்கு, 60 இடங்கள் காலியாக உள்ளன.இவற்றுக்கான தேர்வு தேதி, இம்மாத இறுதிக்குள் வெளியிட வாய்ப்புள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.

டி.இ.ஓ. தேர்வுக்கான ரிசல்ட் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும்

டி.இ.ஓ. தேர்வுக்கான ரிசல்ட் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும்' என்று டி.என். பி.எஸ்.சி.தலைவர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

குரூப்2 பதவியில் 1130 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு 5239 பேர் அழைக்கப்பட்டிருந்தனர்.அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை பிரா ட்வேயில் உள்ள டி.என்.பி. எஸ்.சி. தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. மேலும், சென்னை ஐகோர்ட்டில் காலியாக உள்ள 139 தட்டச்சர் பதவி, தோட்டக்கலை துறை அதிகாரி பதவியில் காலியாக உள்ள 189 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பும் நேற்று துவங்கியது.ஒரே நாளில் 3 தேர்வுக்கான
சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுவது இதுவே முதல் முறை. இப்பணிகளை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் விஜயகுமார் ஆகியோர் பார்வையிட்டனர். அதன் பின்னர், டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியன் அளித்த பேட்டி:
குரூப் 1 பதவியில் போலீஸ் டி.எஸ்.பி (25 காலி பணியிடம்), துணை கலெக்டர்(13 காலி பணியிடம்) என 60க்கும்மேற்பட்டகாலி பணியிடங்கள், குரூப் 2வில்(நேர்முக தேர்வு பதவி) 1000காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு இந்த மாத இறுதியில்அறிவிக்கப்படும். அறிவிப்பு வெளியான மறுநிமிடமே ஆன்லைன் மூலம் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்பணி தொடங்கப்படும். இந்தாண்டுக்கான கால அட்டவணையில் 10,000 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றுஅறிவிக்கப்பட்டிருந்தது. தற்போதைய சூழ்நிலையில், இந்த பணியிடங்கள் எண்ணிக்கை 15,000 ஆக உயர்ந்துள்ளது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதிய குரூப் 4 தேர்வுக்கான ரிசல்ட் இந்த மாதத்துக்குள் வெளியிடப் படும். அதே போல, டி.இ.ஓ. தேர்வுக்கான ரிசல்ட் இந்த மாத இறுதிக்குள்
வெளியிடப்படும்.தேர்வுகள் அனைத்தும் உடனுக்குடன் நடத்தி விரைவில் தேர்வு முடிவு களை வெளியிட நடவடிக்கைகளைடிஎன்பிஎஸ்சி தூரிதப்படுத்தியுள்ளது.
தேர்வு முடிவுகளை காண விரும்புவோர் டி.என்.பி. எஸ்.சி. இணையதளத்தில்தேர்வு எண், பிறந்தநாள் தேதியை டைப் செய்து பார்க்க வேண்டும். அதில், அவர்களது மதிப்பெண் மட்டும் தான் தெரியும்.மற்றவர்கள் மதிப்பெண்ணை பார்க்க முடியாது. தற்போது, இந்த முறை மாற்றப்பட்டுள்ளது. அதாவது, ஒருவரின்மதிப்பெண்ணை மட்டுமல்ல தேர்வு எழுதிய அனைவரின் மதிப்பெண்ணை பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனால், மற்றவர்கள் எவ்வளவு மார்க் வாங்கி உள்ளனர் என்பதை பார்க்க முடியும்.
இவ்வாறுபாலசுப்பிரமணியன் கூறினார்.

திங்கள், 6 ஏப்ரல், 2015

tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: ஆசிரியை மீது ஆசிட் வீசிய பள்ளி முதல்வர்... சென்னையில் கொடூரம்

tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: ஆசிரியை மீது ஆசிட் வீசிய பள்ளி முதல்வர்... சென்னையில் கொடூரம்

முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம்

முதுகலை தமிழாசிரியர் ஆசிரியர் போட்டித் தேர்வுக்குஇப்பொழுதிருந்தே தயாரவது உங்களது வெற்றியை உறுதிப்படுத்தும்!

PG TRB TAMIL:முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா?
உங்களுக்கு வெற்றி நிச்சயம் !
முதுகலை ஆசிரியர்களுக்கான பணிநியமன ஆணை பெற்று 30.03.2015 அன்று பணியில் மகிழ்வுடன் சேர்ந்துள்ளனர்.

இந்நிலையில் அடுத்த கல்வியாண்டுக்கான முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்குஇப்பொழுதிருந்தே தயாரவது உங்களது வெற்றியை உறுதிப்படுத்தும். முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா நீங்கள்...சரியான வழிகாட்டுதல் இல்லாததால் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவரா ? உங்களுக்கு வெற்றி நிச்சயம் !
முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம் வழிகாட்டுதலுடன் சிறந்த பயிற்சிவழங்கப்படும்.
சென்ற முதுகலை தமிழாசிரியர் தேர்வில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர்களுக்கு உதவும்வகையில் அலகுவாரியாக பயிற்சி மற்றும் தேர்வுகள் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது. சென்ற 2014 முதுகலை தமிழாசிரியர் தேர்வில் 85 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் இதில் பங்கேற்கலாம்.ஏற்கனவே பாடத்திட்டத்தை ஒட்டி பாடப்பகுதிகளை முழுமையாகபடித்துமுடித்து தங்கள் இல்லத்திலிருந்தோ அல்லது குழுவாக படித்து தேர்வுக்கு தயாராகுவோரும் இப்பயிற்சி மற்றும்தேர்வுமுறை மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும். தேர்வுக்குப்பின் வினாவிடை அலசல்,தொடர்புடைய தேர்வில்
எதிர்பார்க்கப்படும் வினாக்கள் போன்றவை விவதிக்கப்படும். தமிழ் தவிர உளவியல் பொது அறிவு பகுதிகளுக்கும் பயிற்சி உண்டு.
இதுவரை இத்திட்டத்தில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவ 25 க்கும் மேற்பட்டோர் இப் பயிற்சியில் சேர்ந்து போட்டித்தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். பயிற்சியில் இணைந்தவர்களுக்கு உடனடியாகப் பாடப்பொருள் அனுப்பப்படும் முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவர் நீங்களென்றால் உங்களுக்கு வெற்றி நிச்சயம் !
நீங்களும் இணையுங்கள்
கடின உழைப்பும்..இலக்கை அடையும் வரை ஓயமாட்டேன் எனும் மன உறுதியுடையவர்கள் மட்டும் தொடர்பு கொள்க.
வெற்றி- 7598299935

என் வயது ‘25’ :இதுவரை நான் யாரையும் காதலிக்கவில்லை !

எனக்கு இருபத்தைந்து வயதாகிறது. இதுவரை, எந்தப் பெரிய சிக்கலையும் என் வாழ்க்கையில் சந்தித்தது இல்லை. நானாக உருவாக்கிக் கொண்டதும் இல்லை. என் வாழ்வின் பெரும்பாலான முடிவுகளை நானே எடுத்திருக்கிறேன். அவை இதுவரை என்னை வருத்தப்படுத்தியதில்லை. தனியார் துறையில் நல்ல வேலையில் இருக்கிறேன். மொழிகளைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் இருந்ததால் நான்கு மொழிகளைக் கற்றுக் கொண்டேன். புத்தகங்கள் வாசிப்பது மட்டும்தான் என் ஒரே பொழுதுபோக்கு. என் பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள், நலம்விரும்பிகள் என எல்லோருக்கும் என்னைப் பற்றிய பெருமிதம் அதிகம். ஆனால் இப்போது முற்றிலும் புது விதமான ஒரு சூழலை எதிர்கொள்கிறேன். அதற்குக் காரணம் என் '25' வயது.

இதுவரை நான் யாரையும் காதலிக்கவில்லை. இனிமேல் காதலிப்பேனா என்றும் தெரியாது. காதல் இல்லாத திருமணத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் என் பெற்றோர் சமூகத்தின் வழக்கமான முறைப்படி எனக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் விருப்பமில்லாவிட்டாலும் அதை முழுவதுமாகத் தவிர்க்க முடியாத நிலையில் இருக்கிறேன்.

பொருத்தமான மாப்பிள்ளை கிடைப்பது கஷ்டமாக இருப்பதால் அவர்கள் முயற்சி தீவிரமடைந்திருக்கிறது. முதலில் இதை இயல்பாக எடுத்துக்கொண்டவர்கள் இப்போது பதற்றம் கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். மாப்பிள்ளை கிடைக்காததற்கு என் மீது குறைகாணவும் ஆரம்பித்திருக்கிறார்கள். என் வாசிப்பு, சிந்தனை, வித்தியாசமான போக்கு ஆகியவை அவர்களுக்கு உறுத்துகின்றன. நான் திருமணத்தில் ஆர்வமில்லாமல் இருப்பதைப் பெரிய குறையாகப் பார்க்கிறார்கள். இருபத்தி மூன்று ஆண்டுகளாக என்னைக் கொண்டாடிய என் குடும்பம் இப்போது கொண்டாட மறுக்கிறது. எந்தக் காரணங்களுக்காக எனக்குக் குடும்பத்தில் மரியாதை கிடைத்ததோ அதே காரணங்கள் இப்போது அவர்களைத் தொந்தரவுக்குள்ளாக்குகின்றன.

அவர்களின் இந்த மாறுதல் எனக்கு மறைமுகமான நெருக்கடியை ஏற்படுத்துகிறது. அப்பா, தங்கை, தம்பி என குடும்பத்தில் எல்லோரும் திடீரென்று என்னை வித்தியாசமாகப் பார்ப்பதாகவும், சில சமயம் அலட்சியப்படுத்துவதாகவும் உணர்கிறேன். நான் குடும்பத்துக்காகச் சொல்லும் ஆலோசனைகள் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இது உன் வீடு இல்லை, இந்த வீட்டைவிட்டு நீ செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது எனச் சில நேரங்களில் நேரடியாகவும், பல நேரங்களில் மறைமுகமாகவும் எனக்கு உணர்த்துகிறார்கள். "நீ ஏன் யாரையும் காதலிக்கவில்லை?"என்ற தங்கையின் ஜாலியான கேள்விகூடச் சமயத்தில் குத்தலாகவே வெளிப்படுகிறது.

என்னுடைய எந்தத் திறமைகளையெல்லாம் பார்த்து என் அம்மா பெருமைப்பட்டுக்கொண்டு இருந்தாரோ, இப்போது அதே திறமைகளைப் பார்த்து பயப்படுகிறார். நான் புத்தகத்தை எடுத்துப் படிக்கும்போதெல்லாம் என் அம்மாவின் கண்களில் மிரட்சியைப் பார்க்கிறேன். ஆனால், என்னை நினைத்து மிரட்சியடையவோ, கவலைப்படவோ தேவையில்லை என என் அம்மாவுக்குப் புரியவைப்பது அத்தனை சுலபமில்லை.

என்னுடன் படித்த பெரும்பாலான நண்பர்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது. அதனால் நட்பு வட்டத்தில் இருப்பவர்களைச் சந்திக்கும்போதும் 'எப்போது திருமணம்?' என்ற கேள்வியையே எதிர்கொள்கிறேன். இந்தக் கேள்வி என்னை சலிப்படைய வைக்கிறது. என் பணியிடத்திலோ அல்லது மற்ற இடங்களிலோ, என்னைச் சமூகத்தின் வரையறைகளை மதிக்காத திமிர்பிடித்த பெண் போலப் பார்க்கிறார்கள். அதனால்தான் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறேன் என்று நினைக்கிறார்கள்.

இங்கே ஒரு பெண் சுயமாகச் சிந்திப்பது, திறமைசாலியாக இருப்பதெல்லாம் அவளது வாழ்க்கையின் எல்லாக் கட்டங்களிலும் அங்கீகரிக்கப்படுவதில்லை. இந்தியாவின் குடும்ப அமைப்பில் உள்ள இந்தப் பிரச்சினையை ஒரு பெண்ணாக நான் அதிகம் சந்திக்கிறேன். அந்த யதார்த்தம் எனக்குப் புரிந்தாலும் அதை ஏற்றுக்கொள்வது மிகக் கடினமாக இருக்கிறது.

இருபத்தைந்து வயதில் காதலிக்காமல், திருமணத்தைப் பற்றிச் சிந்திக்காமல் இருக்கும் ஒரு பெண் இந்தச் சமூகத்தில் வாழத் தகுதியற்றவளா? இந்தக் கேள்வி என்னை என் அன்றாட வாழ்க்கையில் அலைக்கழித்துக் கொண்டே இருக்கிறது.

- ஹம்ஸா,சென்னை.



 

ரகசிய கேமரா.....உஷாராக இருப்பது எப்படி?


 

ஜவுளிக் கடைகள், லாட்ஜ்களில் ரகசிய கேமராக்களை பொருத்தி பெண்கள் உடை மாற்றுவது போன்ற காட்சிகளை படம் எடுக்கும் அநாகரிகம் பரவலாக நடந்துவருகிறது. இத்தகைய சூழலில், பொது இடங்களுக்குச் செல்பவர்கள் உஷாராக இருக்கவேண்டியது அவசியமாகிறது.

சில ஜவுளிக் கடைகளின் உடை மாற்றும் அறைகள், சில லாட்ஜ் களின் படுக்கை அறைகளில் ரகசிய கேமரா வைக்கப்படுகின்றன. இதில் பதிவாகும் காட்சிகளை சிலர் பார்த்து ரசிப்பதோடு, இணைய தளங்கள் வரை பதிவேற்றம் செய்யப்படுகின்றன என்ற புகார் பரவலாக கூறப்படுகிறது. கோவாவில் ஒரு ஜவுளிக் கடைக்கு சென்ற மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, அங்கு உடை மாற்றச் சென்றபோது ரகசிய கேமரா இருந்ததை கண்டுபிடித்த விவகாரம் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், இதுபோன்ற இடங்களுக்கு செல்லும்போது உஷாராக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வையும் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

உடை மாற்றும் அறை, குளியல் அறை, படுக்கை அறை போன்றவற்றில் மறைத்து வைக் கப்படும் ரகசிய கேமராக்கள் சிசிடிவி (கண்காணிப்பு கேமரா) போல பெரிய அளவில் இருக் காது. கண்ணுக்கு தெரியாத இடத்தில் மிக மிக சிறிய அளவில் பொருத்தப்பட்டிருக்கும். ஸ்குருவின் தலைப்பகுதி, கடிகாரம், பிளக் பாய்ன்ட், பிளக் ஹோல்டர், முகம்பார்க்கும் கண்ணாடியின் பின்புறம், குளிர்சாதன பெட்டி, கதவின் கைப்பிடி என எதிலும் இதைப் பொருத்தமுடியும். லாட்ஜ்களில் படுக்கை, குளிக்கும் இடம் ஆகியவற்றை நோக்கியுள்ள அனைத்து இடங்களையும் முதலில் கவனமாகப் பார்க்க வேண்டும். விளக்கை அணைத்த பிறகு, இருட்டாக உள்ள அறைகளில் படம் பிடிக்கக்கூடிய நவீன அகச்சிவப்பு கேமராக்களையும் இந்த அநாகரிக வேலைக்கு பயன் படுத்துகிறார்கள்.

கண்டுபிடிப்பது எப்படி?

ஹோட்டல் அறைக்குள் நுழைந்ததும் அனைத்து மின் விளக்குகளையும் அணைத்து விட்டு, அறை முழுவதையும் செல்போனில் வீடியோ எடுங்கள். பின்னர் அதை ஓடவிட்டுப் பாருங்கள். எந்த இடத்திலாவது சிவப்பு அல்லது வெள்ளை நிற ஒளி வந்தால் கேமரா இருக்கிறது என்று அர்த்தம்.

செல்போனில் யாரிடமாவது பேசியபடியே அறை முழுவதும் மெதுவாக நடந்து செல்லுங்கள். திடீரென இரைச்சல் சத்தம் கேட்டால், அருகே ரகசிய கேமரா போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் இருக்கிறது என்று உணர்ந்துகொள்ளலாம்.

ரகசிய கேமரா மட்டு மின்றி, முகம் பார்க்கும் கண்ணாடி யால் கூட வில்லங்கம் ஏற்பட லாம். பொது வாக உயர் அளவிலான போலீஸ் விசாரணை, ஆட்களை அடையா ளம் காட்டுதல் போன்றவற்றுக்கு 'டூ வே' (இருபக்க) கண்ணாடி பயன்படுத்தப்படும். அதாவது, முகம் பார்க்கும் சாதாரண கண்ணாடிதான். ஆனால், அதன் பின்னால் இருந்துகொண்டு இங்கு நடப்பதை பார்க்க முடியும். அவர்கள் இருப்பது இங்கிருந்து தெரியாது. லாட்ஜ்கள், ஜவுளிக் கடைகளில் இருப்பது இத்தகைய கண்ணாடி இல்லை என்பதை உறுதிசெய்துகொள்வது அவசியம்.

வழக்கத்தைவிட உங்கள் அறையில் விளக்கு வெளிச்சம் அதிகமாக, கண்ணை கூசும் அளவில் இருந்தால், அங்கு இருப்பது இருபக்க கண்ணாடி யாக இருக்க வாய்ப்பு அதிகம். ஏனென்றால், மங்கலான வெளிச் சத்தில் இத்தகைய கண்ணாடி வழியாக தெளிவாக ஊடுருவிப் பார்க்க முடியாது.

விளக்குகளை அணைத்துவிட்டு கண்ணாடி மீது டார்ச் அடித்துப் பார்த்தால், பின்னால் ஏதேனும் இருக்கிறதா என்பதை அறியலாம். கருப்பு பிலிம் ஒட்டப்பட்ட காருக்குள் பார்ப்பதுபோல, இரு கைகளையும் அணைத்து வைத்தபடி கண்ணாடியோடு முகத்தை ஒட்டிக்கொண்டு பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியும். இன்னொரு எளிய வழி. கண்ணாடி முன்பு நின்று உங்கள் விரலால் கண்ணாடியை தொடுங்கள். விரல் நுனிக்கும் கண்ணாடியில் தெரியும் பிம்பத்துக்கும் நடுவே இடைவெளி இருந்தால், அது முகம் பார்க்கும் சாதாரண கண்ணாடி. கொஞ்சம்கூட இடைவெளியின்றி விரலும் பிம்பமும் ஒட்டிக்கொண்டிருந்தால், உஷார்! அது இருபக்க கண்ணாடி.

இதுபோல ரகசிய கேமராக்கள் மூலம் படம்பிடிக்கப்படும் காட்சிகளை அதிக விலை கொடுத்து வாங்க ஏராளமான இணைய தளங்கள் இருக்கின்றன. இவர்கள் கொடுக்கும் பணத்துக்கு ஆசைப்பட்டுதான் பல இடங் களில் ரகசிய கேமராக்கள் வைக்கப் படுகின்றன. கேமரா வைக்கும் செலவைக்கூட அவர் களே ஏற்றுக் கொள்வதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற ரகசிய கேமராக்கள், அகச்சிவப்பு கேமராக்களைக்கூட கண்டுபிடிக்கக்கூடிய கருவிகளும் சந்தையில் கிடைக்கின்றன.



பக்டீரியாவை அழிக்கும் வெங்காயம், பூண்டு, மாட்டுப் பித்தநீர்!


ஆயிரம் வருடங்களுக்கு முன்னதாக கண்நோய்க்கு பயன்படுத்தப்பட்ட ஒரு மருந்து, தற்போதைய சூப்பர்பக் எனப்படும், பெரும்பாலான நுண்ணுயிர் கொல்லி மருந்துக்கு கட்டுப்படாத நோய்கிருமிகளை அழிக்க உதவும் என்று நிபுணர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

வெங்காயம், வெள்ளைப் பூண்டு மற்றும் மாட்டின் பித்தநீர் ஆகியவை உள்ளடங்கிய 9 ஆம் நூற்றாண்டின் ஆங்கிலேயர்களின் நாட்டு மருந்து ஒன்று இந்த சூப்பர்பக்ஸ்களை கொல்லும் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

எம்ஆர்எஸ்ஏ எனப்படுகின்ற நோய்க்கிருமிகளை இந்த மருந்து கிட்டத்தட்ட முற்றாக அழித்ததைப் பார்த்த விஞ்ஞானிகள் பெரும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.

பிரிட்டிஷ் நூலகத்தில் காணப்பட்ட ஒரு நாட்டு மருந்துக் குறிப்பில் இந்த விபரங்கள் காணப்பட்டுள்ளன. ஆங்கிலோ சாக்ஸன் நிபுணரான, நொட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த, டாக்டர் கிறிஸ்டினா லீ அவர்கள், வெள்ளைப்பூண்டு, வெங்காயம் அல்லது லீக், வைன் மற்றும் மாட்டு பித்தநீர் ஆகியவற்றைக் கொண்ட இந்த மருந்தை மொழிபெயர்த்துள்ளார்.

அதனைக் கொண்டு அந்த மருந்தை தயாரித்த அதே பல்கலைக்கழக நுண்ணுயிர் நிபுணர்கள், பெருமளவில் வளர்க்கப்பட்ட எம்ஆர்எஸ்ஏ கிருமியில் அதனை சோதித்துள்ளனர்.

ஆங்கிலோ சாக்ஸன் மருத்துவர்கள், தற்போதைய மருத்துவ முறைக்கு கிட்டத்தட்ட சமனான ஒரு மருத்துவ சிகிச்சை முறையை பின்பற்றியுள்ளது போல தோன்றுகிறது.

நுண்ணுயிர் கொல்லிகள் குறித்த தற்போதைய ஆய்வுகளுக்கு அந்த பண்டைய மருத்துவ குறிப்புகள் ஒரு நல்ல பாடத்தையே தந்துள்ளன.

இந்த குறிப்பிட்ட மருந்து 90 வீதமான எம்ஆர்எஸ்ஏ பக்டீரியாவை கொல்வதாக அறியப்பட்டுள்ளது.

கண்நோய்க்கான இந்த மருந்து சிறிய அளவில் நுண்ணுயிர் கொல்லியாக பயன்படும் என்றுதான் விஞ்ஞானிகள் நினைத்திருக்கிறார்கள். ஆனால், அது இவ்வளவு செயற்பாட்டுத் திறனுடன் இருக்கும் என்று அவர்கள் நினைத்திருக்கவில்லை.

பக்டீரியாக்களால் வரும் பல நோய்களுக்கான மருந்துகள் அந்த குறிப்பில் இருப்பதாக டாக்டர் லீ கூறுகிறார்.

பக்டீரியாக்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே அதற்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறுகிறார்.

பேர்மிங்ஹாமில் நடக்கவுள்ள பொது நுண்ணுயிரியல் அமைப்பின் வருடாந்த மாநாட்டில் இந்த கண்டுபிடிப்பு குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

 

12ம் தேதி, 'ஜாக்டா' நடத்தும் உண்ணாவிரதத்தில், தி.மு.க., மற்றும் தே.மு.தி.க., உட்பட, சிலகட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

12ம் தேதி, 'ஜாக்டா' நடத்தும் உண்ணாவிரதத்தில், தி.மு.க., மற்றும் தே.மு.தி.க., உட்பட, சிலகட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து உட்பட, பல கோரிக்கைகளை வலியுறுத்தி . வரும், 12ம் தேதி, 'ஜாக்டா' நடத்தும் உண்ணாவிரதத்தில், தி.மு.க., மற்றும் தே.மு.தி.க., உட்பட, சிலகட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து, தனியார் பள்ளிகள் புதிதாகத் துவங்க அனுமதிக்கக் கூடாது, தமிழகத்திற்கு தனிக் கல்விக் கொள்கை கொண்டு வர
வேண்டும், தொகுப்பூதிய ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உட்பட, பல கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர் சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதில், 'ஜாக்டோ' ஆசிரியர் கூட்டுக்குழுவைப் போல்,'ஜாக்டா' கூட்டுக்குழுவும் தனியாக போராட்டங்களை அறிவித்துள்ளது. இக்குழுவின் நிர்வாகிகள் கூட்டம், சென்னையில்
நேற்று முன்தினம் நடந்தது. அதில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில், வரும், 12ம் தேதி நடத்த உள்ள உண்ணாவிரதப் போராட்டத்தை, கட்சிகள் ஆதரவு பெற்று தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி, உண்ணாவிரதத்தில், தி.மு.க., - தே.மு.தி.க., - காங்., - பா.ம.க., - பா.ஜ., - ம.தி.மு.க., - த.மா.கா., மார்க்சிஸ்ட் கம்யூ., உள்ளிட்ட கட்சிகள், பல்வேறுஅமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்பதாக, 'ஜாக்டா' கூட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் இளமாறன் தெரிவித்தார்.

சா.தேவதாஸ், சாகித்ய அகாதெமியின் 2014- ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழியாக்க விருதுக்குத் தேர்வு

"லடாக்கிலிருந்து கவிழும் நிழல்' என்ற ஆங்கில நாவலை தமிழில் மொழியாக்கம் செய்த எழுத்தாளர் சா.தேவதாஸ், சாகித்ய அகாதெமியின் 2014- ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழியாக்க விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இலக்கிய உலகில் மிக உயரிய விருதாக சாகித்ய அகாதெமி விருது கருதப்படுகிறது. அந்த வகையில் சிறந்த மொழியாக்க நூலுக்கான 2014- க்கான விருதை சாகித்ய அகாதெமி திங்கள்கிழமை இரவு அறிவித்தது. பல்வேறு மொழிகளில் இருந்து 24 இந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட இலக்கிய விமர்சனம், நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை, நாடகம், சுயசரிதை போன்ற சிறந்த படைப்புகளுக்கு சாகித்ய அகாதெமி ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி வருகிறது. 2008 முதல் 2012-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வெளியான படைப்புகளை ஒவ்வொரு மொழிக்கும் மூன்று பேர் அடங்கிய தேர்வுக் குழு ஆய்வு செய்து பரிந்துரை செய்திருந்தது. அதன் அடிப்படையில் சாகித்ய அகாதெமியின் தலைவர் விஸ்வநாத் பிரசாத் திவாரி தலைமையில் அதன் நிர்வாகக் குழுக் கூட்டம் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் டாக்டர் எச்.பாலசுப்பிரமணியம், இந்திரன், டாக்டர் தமிழவன் கார்லோஸ் ஆகியோர் அடங்கிய தமிழ் மொழிக்கான தேர்வுக் குழு அளித்த பரிந்துரையின்படி, பபானி பட்டாச்சார்யாவின் "ஷேடோ ஃபிரம் லடாக்' என்ற ஆங்கில நூலை தமிழில் "லடாக்கிலிருந்து கவிழும் நிழல்' என மொழியாக்கம் செய்த இலக்கிய எழுத்தாளர் சா.தேவதாஸ், விருதுக்குத் தகுதி பெற்றதாக நிர்வாகக் குழு அறிவித்தது. இதேபோல, திருவள்ளுவர் தமிழில் இயற்றிய "திருக்குறள்' நூலை ராஜஸ்தானி மொழியில் "குறள்-காவியா' என்ற பெயரில் மொழியாக்கம் செய்ததற்காக கைலாஷ் மண்டேலா என்பவரும் சாகித்ய அகாதெமி விருதுக்குத் தகுதி பெற்றுள்ளார். விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டோருக்கு அவர்களின் படைப்பின் பெயர் பொறிக்கப்பட்ட தாமிர பட்டயம், சால்வை, ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை ஆகியவை வழங்கப்பட உள்ளன. இவை வரும் ஆகஸ்ட் மாதம் வழங்கப்படும் என்றும் சாகித்ய அகாதெமி தெரிவித்துள்ளது.

ஜாக்டோ உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைப்பவர் மற்றும் முடித்து வைப்பவர் பட்டியல்





க்டோ உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைப்பவர் மற்றும் முடித்து வைப்பவர் பட்டியல் DHARMAPURI,PUDUKKOTTAI,SIVAGANGAI,CHENNAI, RAMNADNAGAPPATTINAM, KRISHNAGIRI

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி:முதுபெரும் தலைவர்களில் ஒருவருமான திருவாளர் ச.அப்துல் மஜீத் உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார்


தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நிறுவனரும், ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களின் தொடக்கக்கால முதுபெரும் தலைவர்களில் ஒருவருமான திருவாளர் ச.அப்துல் மஜீத் அவர்கள் இன்று காலை 11.15 மணியளவில் உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார். அன்னாரின் இறுதி சடங்கு நாளை மாலை கடலூரில் நடைபெறவுள்ளது என்பதனை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இங்ஙனம்
இரா. தாஸ், பொதுச் செயலாளர்,
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
 

ஆசிரியர் தகுதித்தேர்வு:13.53 சதவீதம் பேர் தேர்ச்சி

மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வின் (CTET-2015)முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி 18ம் தேதி 988 மையங்களில் 96 நகரங்களில் CTET-2015 தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வை மொத்தம் 6.77 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். இதில் 13.53 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். தேர்ச்சியடைந்தவர்களின் விகிதம், கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. சிடிஇடி தேர்வில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்கள் மத்திய அரசு பள்ளிகளில் ஒன்று முதல் எட்டு வரை உள்ள வகுப்புகளுக்கு ஆசிரியர்களாக பணியாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

அரசு பணி வழங்க கோரி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் :கணினி அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் அறிவிப்பு

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள்சங்க மாநில செயலாளர் குமரேசன் வெளியிட்டஅறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு கணினியை ஒரு பாடமாக மாணவர்களுக்கு கற்பிக்கும் வகையில் கடந்த திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும்2011ம் ஆண்டு சமச்சீர் கல்வி அறிமுகம் படுத்தப்பட்டது. அப்போது நகராட்சி மற்றும் அரசு பள்ளிகளில் 6 , 8 மற்றும் 10வகுப்புகளுக்கு கணிப்பொறி இயல் என்ற பாட புத்தகம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் ஆட்சி மாற்றம் காரணமாக மூன்று ஆண்டுகளாக கணிப்பொறி இயல் பாட புத்தகத்தை மாணவர்களுக்கு வழங்காமல் அரசு நிறுத்தி விட்டது. இதனால் தமிழகம் முழுவதும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டகணினியில் பி.எட் முடித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு அரசு பணிகிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வரும் கல்வி ஆண்டில் 6 முதல் 10ம் வகுப்பு வரை கணினி அறிவியலை கட்டாய பாடமாக்கி, கணினியில் பி.எட்முடித்தவர்களுக்கு வேலை வழங்க வேண்டும். மேல் நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள கணினி அறிவியல் ஆசிரியர்பணியிடத்தை நிரப்ப வேண்டும். வட்டார வளமையங்களில் காலியாக உள்ள கணினி அலுவலர் பணியிடங்களில், கணினியில்பி.எட் முடித்தவர்களை பணி அமர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விரைவில் தமிழகம் முழுவதும்ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். முதற்கட்டமாக நாளை திண்டுக்கல் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கணினி பயிற்றுநர்கள் 503 பேர் பணி நியமனம்

. தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்ற இணையவழி கலந்தாய்வில்503 கணினிபயிற்றுநர்களுக்கு பணி நியமன ஆணைசனிக்கிழமை வழங்கப்பட்டது.உயர் நீதிமன்ற தடை உத்தரவு காரணமாக, 133 பேருக்கான பணி நியமன ஆணை தாற்காலிகமாகநிறுத்திவைக்கப்பட்டுள்ளது.மேலும் சிலர் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்
.இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர்எஸ்.கண்ணப்பன் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் கணினி பயிற்றுநர்கள் 652பேர்பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்தக் காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்குவதற்கான இணையதள கலந்தாய்வு சனிக்கிழமை நடைபெற்றது.அனைத்து
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் நடைபெற்ற கலந்தாய்வில் கணினி பயிற்றுநர்கள் பங்கேற்றனர்.இதில் ஆதரவற்ற விதவைகள், முன்னாள் ராணுவ வீரர்கள், கலப்பு மணம் புரிந்தவர்களுக்கான முன்னுரிமைப் பட்டியலில் தங்களது பெயர்களைச் சேர்க்க வேண்டும் என 4 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை பெற்றுள்ளனர். இதன் காரணமாக,
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 643 பேரில் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 133 பேருக்கு பணி நியமன ஆணை தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் இறுதி உத்தரவின் அடிப்படையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் உறுதிசெய்யப்பட்ட தேர்வுப் பட்டியல் பெறப்பட்ட பின்னரே பணி நியமன ஆணை வழங்கப்படும்.முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 133 பேரைத் தவிர மீதமுள்ளவர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இவர்களில் 491 பேருக்கு அவர்களின் சொந்த மாவட்டங்களிலேயே பணி நியமனம் கிடைத்துள்ளது என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 3 ஏப்ரல், 2015

முதுகலை தமிழாசிரியர் ஆசிரியர் போட்டித் தேர்வுக்குஇப்பொழுதிருந்தே தயாரவது உங்களது வெற்றியை உறுதிப்படுத்தும்!

PG TRB TAMIL:முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா? வெற்றி நிச்சயம் !
முதுகலை ஆசிரியர்களுக்கான பணிநியமன ஆணை பெற்று 30.03.2015 அன்று பணியில் மகிழ்வுடன் சேர்ந்துள்ளனர்.
இந்நிலையில் அடுத்த கல்வியாண்டுக்கான முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்குஇப்பொழுதிருந்தே தயாரவது உங்களது வெற்றியை உறுதிப்படுத்தும்.
முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா நீங்கள்...சரியான வழிகாட்டுதல் இல்லாததால் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவரா ? உங்களுக்கு வெற்றி நிச்சயம் !
முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம் வழிகாட்டுதலுடன் சிறந்த பயிற்சிவழங்கப்படும்.
சென்ற முதுகலை தமிழாசிரியர் தேர்வில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர்களுக்கு உதவும்வகையில் அலகுவாரியாக பயிற்சி மற்றும் தேர்வுகள் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது. சென்ற 2014 முதுகலை தமிழாசிரியர் தேர்வில் 85 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் இதில் பங்கேற்கலாம்.ஏற்கனவே பாடத்திட்டத்தை ஒட்டி பாடப்பகுதிகளை முழுமையாகபடித்துமுடித்து தங்கள் இல்லத்திலிருந்தோ அல்லது குழுவாக படித்து தேர்வுக்கு தயாராகுவோரும் இப்பயிற்சி மற்றும்தேர்வுமுறை மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும். தேர்வுக்குப்பின் வினாவிடை அலசல்,தொடர்புடைய தேர்வில்
எதிர்பார்க்கப்படும் வினாக்கள் போன்றவை விவதிக்கப்படும். தமிழ் தவிர உளவியல் பொது அறிவு பகுதிகளுக்கும் பயிற்சி உண்டு.
இதுவரை இத்திட்டத்தில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவ 25 க்கும் மேற்பட்டோர் இப் பயிற்சியில் சேர்ந்து போட்டித்தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். பயிற்சியில் இணைந்தவர்களுக்கு உடனடியாகப் பாடப்பொருள் அனுப்பப்படும் முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவர் நீங்களென்றால் உங்களுக்கு வெற்றி நிச்சயம் !
நீங்களும் இணையுங்கள்
கடின உழைப்பும்..இலக்கை அடையும் வரை ஓயமாட்டேன் எனும் மன உறுதியுடையவர்கள் மட்டும் தொடர்பு கொள்க.
வெற்றி- 7598299935

வியாழன், 2 ஏப்ரல், 2015

தேர்வு முறைகேடுகளைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: அமைச்சர் கே.சி.வீரமணி

தேர்வு முறைகேடுகளைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பள்ளிகல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.

சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும், ஒசூரில் வாட்ஸ்அப்' மூலம் பிளஸ் 2 கேள்வித்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிறப்பு கவன ஈர்ப்புத்
தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக செங்குட்டுவன் (திமுக), டில்லிபாபு (மார்க்சிஸ்ட்), எம்.ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்ட்கட்சி), பிரின்ஸ் (காங்கிரஸ்), கணேஷ்குமார் (பாமக) ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் ஆட்சி), கிருஷ்ணசாமி (புதியதமிழகம்) ஆகியோர் பேசினர்.
அதற்கு பதில் அளித்து, கே.சி.வீரமணி பேசியது:ஒசூர் கல்வி மாவட்டத்துக்கு உள்பட்ட
தேர்வு மையங்களில் ஒன்றான பரிமளம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 3 இணைப்புப் பள்ளிகளைச் சேர்ந்த 323 மாணவர்கள்பிளஸ் 2 தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.மார்ச் 18-ஆம் தேதி, கணிதம், விலங்கியல் பாடங்களைக் கொண்ட மாணவர்களுக்குத்தேர்வு நடந்தது. இதைக் கண்காணிக்கும் பணியில் ஒசூர் விஜய் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் மகேந்திரன், கோவிந்தன் ஆகியோர் ஈடுபட்டனர். காலை 11 மணியளவில் அந்த மையத்தின் அதிகாரி சீனிவாசன் பார்வையிட்ட போது, 2 ஆசிரியர்களின் கையிலும் செல்லிடப்பேசி இருப்பதைக் கண்டார்.அதை வாங்கி ஆய்வு
செய்தபோது கணித பாட கேள்வி தாள்களில் சில பக்கங்கள்"வாட்ஸ்அப்' மூலம் வேறு செல்லிடப்பேசிக்குஅனுப்பப்பட்டதுதெரிய வந்தது. உடனடியாக 2 ஆசிரியர்களும் கண்காணிப்புப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.இதுதொடர்பாக முதன்மை கல்வி
அதிகாரி மூலம் கிருஷ்ணகிரி புகார் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2 ஆசிரியர்களும் கைது
செய்யப்பட்டனர். இவர்கள் விஜய் வித்யாலயா பள்ளியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்தக் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த கிருஷ்ணகிரி, ஒசூர், தருமபுரி ஆகியவற்றில் செயல்படும் 4 தேர்வு மையங்களுக்கு வேறு மாவட்டத்தைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

அரசு தேர்வு இயக்குநர் மேற்கொண்ட விசாரணை அடிப்படையில் ஒசூர் கல்வி மாவட்ட அதிகாரி வேதகன் தன்ராஜ், புக்கசாகரம் அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மாது, ஒசூர் மாவட்ட கல்வி இளநிலை உதவியாளர் ரமணராஜன், கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அலுவலகக் கண்காணிப்பாளர் சந்திரசேகரன், கிருஷ்ணகிரிமுதன்மைக் கல்வி அலுவலக உதவியாளர் அசோக்குமார் ஆகியோர் தாற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர்.தேர்வு முறைகேடுகளைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனிவரும் தேர்வுகளில் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க அரசு தேர்வுத் துறை இயக்குநர் அனைத்து அலுவலகங்களுக்கும் விவரமான அறிக்கை,வழிகாட்டுதலை அனுப்பி உள்ளார் என்றார்.