பெங்களூரு இஸ்ரோ செயற்கைக் கோள் மையத்தின் இயக்குநராக விஞ்ஞானி மயில்சாமி அண்ணா துரை நியமிக்கப்பட்டுள்ளார். தமிழர் ஒருவ‌ருக்கு இஸ்ரோவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட் டுள்ள‌தால் தமிழர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக இஸ்ரோ மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இஸ்ரோவின் முக்கிய விஞ்ஞானியும், சந்திரயான்-1 திட்ட இயக்குநருமான மயில்சாமி அண்ணாதுரை, பெங்களூரு இஸ்ரோ செயற்கைக் கோள் மையத்தின் இயக்குநராக நியமிக் கப்பட்டுள்ளார். இந்த மையத்தின் இயக்குநராக இருந்த விஞ்ஞானி சிவகுமாரின் பதவிக் காலம் கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் முடி வடைந்தது. இதையடுத்து, கடந்த ஏப்ரல் 1-ம் தேதி மயில்சாமி அண்ணாதுரை புதிய இயக்குந ராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த 1958-ம் ஆண்டு ஜூலை 2-ம் தேதி கோவை மாவட்டத்தில் மயில்சாமி அண்ணா துரை பிறந்தார். அங்குள்ள கல்லூரியில் பொறியியல் பயின்ற அவர் 1982-ம் ஆண்டு இஸ்ரோவில் சேர்ந்தார்.

சிறு செயற்கைக்கோள் உரு வாக்க திட்டங்கள், இன்சாட் செயற்கைக் கோள்கள் உருவாக் கத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளார். உலக அளவில் இஸ்ரோ வுக்கு நற்பெயரை பெற்றுத் தந்த சந்திரயான்-1-ன் திட்ட இயக்குநராகவும் இருந்துள்ளார். இதுமட்டு மில்லாமல் மங்கள்யான் உருவாக்கத்திலும் அண்ணாதுரை முக்கிய பங்காற்றியுள்ளார். விண்வெளித் துறையில் பல்வேறு சாதனை களை புரிந்துள்ள மயில்சாமி அண்ணாதுரைக்கு தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளன என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மயில்சாமி அண்ணாதுரைக்கு இஸ்ரோவின் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டு இருப்பதால் கர்நாடக தமிழர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.