புதன், 22 ஏப்ரல், 2015

அரசு பள்ளிக்கூடங்களுக்கு ஆய்வக உதவியாளர்பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி?

அரசு பள்ளிக்கூடங்களுக்கு ஆய்வக உதவியாளர்பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி?

அரசு பள்ளிக்கூடங்களுக்கு ஆய்வக உதவியாளர் 4360 பேர் எழுத்துத்தேர்வு மூலம்
நியமனம் 24–ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிய 4360 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களைஅரசு தேர்வுத்துறை எழுத்துத்தேர்வு வைத்து தேர்ந்து எடுக்கப்பட உள்ளது.

இதற்காக விண்ணப்பிக்க 24–ந்தேதி முதல் அந்தந்தமாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவிக்கும் நோடல் மையத்தில் இருந்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க விரும்புவோர் எஸ்.எஸ்.எல்.சி.படித்திருக்கவேண்டும். 18 வயதுக்கு குறைவு இல்லாமல் இருக்கவேண்டும்.விண்ணப்பிக்க மே 6–ந்தேதி கடைசி நாள்.எழுத்துத்தேர்வு தமிழ்நாடு முழுவதும் மே 31–ந்தேதி நடைபெற உள்ளது.இதற்கான முழு அறிவிப்பு இன்று (புதன்கிழமை) வெளியாக உள்ளது.

இப்பணிக்குகுறைந்தபட்சம் பள்ளி இறுதி வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி தகுதியை பெற்றிருக்க வேண்டும்.ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர்(அருந்ததியினர்), பழங்குடியினர் மற்றும் அனைத்து வகுப்புகளையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு 35 வயதிற்குள்ளும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்,
சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(முஸ்லீம்) ஆகியோருக்கு 32 வயதிற்குள்ளும், ஏனையோர் அதாவது மேற்குறிப்பிட்ட பிரிவினரை சாராதவர்களுக்கு 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், ஆதரவற்ற விதவைகள், ஆகியோருக்கு வயது வரம்பு சலுகைகள்
நடைமுறையில் உள்ள அரசு ஆணைகள் மற்றும் விதிமுறைப்படி செயல்படுத்தப்படும். இதில், நிர்ணயம் செய்யப்பட்ட தகுதியை விட உயர் கல்வித் தகுதி பெற்ற அனைத்து பிரிவினருக்கும் வயது வரம்பு கிடையாது.இதற்கான விண்ணப்பங்களை www.tndge.in
என்ற இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி, மாவட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரசு தேர்வு மையங்களுக்கு கல்வி, சாதி, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, உயர்கல்வி, பணி முன் அனுபவச்சான்று ஆகியவைகளுடன் நேரில் சென்று விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும்.

.இதற்கு தேர்வு கட்டணமாக ரூ.100, சேவைக்கட்டணமாக ரூ.50 ரொக்கமாக அரசு தேர்வு மையங்களில் செலுத்த வேண்டும்.

விருதுநகர்
, விருதுநகர் கேவிஎஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சிவகாசி எஸ்.எச்.என்.வி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,அருப்புக்கோட்டை தேவாங்கர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம் பி.ஏ.சி.எம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவைகளில்ஆண்களும்,

விருதுநகர் சத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிவகாசி எஸ்.எச்.என்.வி.பெண்கள்
மேல்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை தேவாங்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம் ஏ.கே.டி.ஆர் பெண்கள்மேல்நிலைப்பள்ளிகளில் பெண்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக