ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு பணி,நாமக்கல்லில்நேற்று துவங்கியது. நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குமார் தலைமையில்துவங்கிய இப்பணி, ஏழு குழுக்காளாக பிரிக்கப்பட்டு சரி பார்க்கப்பட்டது.அதில், டி.இ.ஓ., பன்னீர்செல்வம், ஐந்து, பள்ளித் தலைமையாசிரியர்கள், கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், அலுவலக உதவியாளர் ஆகியோர் அக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். ஜனவரி, 27ம் தேதி வரை நடக்கும் இப்பணியில், ஆசிரியர் தகுதித்தேர்வில் முதல் தாளில் வெற்றி பெற்றவர்கள், 262 பேர்,இரண்டாம் தாளில் வெற்றி பெற்றவர்கள்,861 பேர் என, மொத்தம், 1,123 பேர் பங்கேற்கின்றனர். நேற்று முதல் நாளில், 169 பேரின் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது.இப்பணியை, தமிழ்நாடு பாடநூல் கழக இயக்குனர் அன்பழகன் நேரில் ஆய்வு செய்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக