செவ்வாய், 21 ஜனவரி, 2014

திருப்பூர்    மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில்   577 பேர் தேர்ச்சி


திருப்பூர் மாவட்டத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின்சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள்
மேல்நிலைப் பள்ளி மையத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நா.ஆனந்தி தலைமையில் நடைபெற்றது.  இதற்கான மாவட்டக் கல்வி அலுவலர், ஒரு தலைமை ஆசிரியர் உள்பட 5 பேர் அடங்கிய குழுவினர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின்சான்றிதழ்களை சரிபார்த்தனர். முதல் நாளில் 120 பேர் தங்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்புக்காக பங்கேற்றனர்.   திருப்பூர் மாவட்டத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வில் இடைநிலை ஆசிரியர்கள் 280 பேர், பட்டதாரி ஆசிரியர்கள் 297 பேர் என மொத்தம் 577 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணிகள் வரும் 28-ஆம் தேதி வரை இந்த மையத்தில் நடைபெறஉள்ளன.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக