திங்கள், 31 மார்ச், 2014
ஆங்கிலம் இல்லாமல் இந்தியர்களால் சாதிக்க முடியாதா?
"ஆங்கிலத்தைத் தடைசெய்யக் கோருவதன் மூலம் உத்தரப் பிரதேசத்தைக் கற்காலத்துக்கு அழைத்துச் செல்கிறார் முலாயம்" என்று ஒரு ஆங்கில நாளேடு கண்டித்தது. "இது மிகவும் பிற்போக்குத்தனமான சிந்தனை, ஆங்கிலத்தின் மீதுள்ள வெறுப்பு காரணமாகச் சில மாநிலங்கள் பின்தங்கிய நிலைமையிலேயே இருக்கின்றன, மேற்கு வங்கம் அதற்கு நல்ல உதாரணம். தகவல் தொழில்நுட்பத் துறை இந்தியாவில் வளர்வதற்கு ஆங்கில மொழியறிவே காரணம்" என்று இன்னொரு நாளேடு எழுதியது.
இயற்கையான எதிர்வினை
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும் எழுதவும் முடிந்தவர்களிடமிருந்து முலாயமுக்கு வந்த கண்டனங்களை இயற்கையான எதிர்வினையாகப் பார்க்க முடிகிறது. 'தூதுவன் கொண்டு வந்த செய்தியை விரும்பாமல் தூதுவனையே கொன்றதைப் போல' ஆகிவிட்டது அவர்களுடைய செயல். உலகத்தின் வளர்ந்த நாடுகளை மனக்கண் முன்னால் கொண்டுவந்து நிறுத்தினால், முலாயம் சிங் சொன்னதுதான் சரி என்ற உண்மை உறைக்கும்.
சீனா, ஜப்பான், ஜெர்மனி, தென் கொரியா போன்ற சில நாடுகளை எடுத்துக்கொண்டாலே அவை தங்களுடைய தாய்மொழியை மட்டுமே நம்பி எல்லாத் துறைகளிலும் வெற்றிபெற்றிருப்பது புலனாகும். ஆங்கிலத்தை அவர்கள் சர்வதேச உறவுக்காக மட்டும்தான் பயன்படுத்துகின்றனர். ஆங்கிலம் நன்றாகத் தெரிந்திருந்தால் மட்டுமே எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்க முடியும் என்பது வெறும் பிதற்றல். உலக நாடுகளின் அனுபவங்களோடு பார்க்கும்போது, ஆங்கில ஆதரவாளர்களின் வாதம் தோற்றுவிடுகிறது. இந்தியாவில் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசத்தெரிந்தவர்கள் - அப்படிப் பேச முடியாதவர்களைவிட - தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்ற செருக்குடன் திரிகின்றனர்.
இதுவும் ஒரு வகை வெறிதான். ஆங்கிலம் தெரிந்தவர்களால் இன்றளவும் ஊக்குவிக்கப்படுகிறது இந்த மொழிவெறி. இது இந்திய சமுதாயத்தையே இரண்டாகப் பிளந்துவிட்டது. தாய்மொழியில் நன்றாகப் பேசவும் எழுதவும் முடிந்த பெரும்பான்மையானவர்கள் இந்தச் சிறுபான்மை 'ஆங்கில அறிவாளி'களால், தாங்கள் ஓரங்கட்டப்பட்டுவிட்டதாக உணர்கின்றனர். சில சமயங்களில் அவர்களுக்கு இதனால் அளவில்லாத கோபமும் ஏற்படுகிறது.
சொந்த மொழிகளின் வேரை மறந்து, வந்த மொழிக்கு வாழ்வுதந்து சிறுமைப்பட்ட பெரிய நாடு உலகிலேயே இந்தியாவாகத்தான் இருக்க முடியும்!
இந்த மொழிவெறியால் சமூகரீதியாக, பொருளாதார ரீதியாக, கலாச்சாரரீதியாக ஏற்படுகிற பாதிப்பு அதிகம். இன்னும் சொல்லப்போனால், இந்த நாட்டை முன்னேற விடாமல் தடுத்து நிறுத்துவதும்கூட இந்த மொழிவெறிதான்.
இனவெறி என்பது வெவ்வேறு வடிவங்களை எடுக்கக்கூடியது. பெரும்பான்மைச் சமூகமான வெள்ளையர்கள், சிறுபான்மை கருப்பினத்தவர்களை வெறுத்தார்கள். இதன் எதிர்வடிவம்தான் ஆங்கிலம் தெரிந்த சிறுபான்மையினர், அந்த மொழி தெரியாத பிற இந்தியர்களைத் தங்களைவிடத் தாழ்ந்தவர்களாகப் பார்ப்பதுவும்.
எந்த மொழி விருப்பமானது?
நாட்டின் முதல் எட்டு பெருநகரங்களில் மாநில மொழி, ஆங்கிலம் ஆகியவற்றில் செய்தித்தாள் வாசிப்பவர்கள் விகிதம் பார்த்தால் சராசரியாக 2:1 என்று இருக்கிறது. அதே டெல்லியில் 1:1, புணே 7.5:1, அகமதாபாதில் 11:1 என்றிருக்கிறது.
பெருநகரங்களில் தொலைக்காட்சி பார்ப்பதிலும் மாநில மொழிகளே அதிகம் விரும்பப்படுகின்றன, 12:1. சென்னையில் அது 7:1. அகமதாபாதில் ஆங்கில நிகழ்ச்சிகளைப் பார்க்கிறவர்கள் மிகமிகக் குறைவாக இருக்கின்றனர்.
ஆங்கிலம் சிறுபான்மையே
அதற்காக, முலாயம் கோரியபடி ஆங்கிலத்துக்குத் தடை விதிப்பது சரியாகிவிடாது. நாடாளுமன்றம் போன்ற பொது அரங்குகளில் அவரவர் தாய்மொழியில் பேசுவதை அனுமதிக்க வேண்டும். ஆங்கிலம் தெரியவில்லை என்பதற்காக இந்த நாட்டு மக்களில் பெரும்பாலானவர்கள் தவிர்க்கப்படும் 'மொழிஒதுக்கல்' தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
ஆங்கில ஆதிக்கம்
நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இன்றுவரை அரசின் நிர்வாகத்தில், தொழில்துறையில், வர்த்தகத்தில், நீதிமன்ற நடவடிக்கைகளில், முக்கியமான பல துறைகளில் ஆங்கிலமே கோலோச்சுகிறது. இதற்குக் காரணம், ஆங்கிலம் தொடர்பான சில தவறான நம்பிக்கைகளே.
தவறான நம்பிக்கை 1: நவீன உலகத்துக்கு ஆங்கிலம் தேவை.
அறிவியல், தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுவரும் மாறு தல்களைத் தெரிந்துகொள்ள ஆங்கில அறிவு அவசியம் என்கின்றனர். இது உண்மையாக இருந்தால், உலகின் முன் னணி நாடுகள் ஆங்கிலத்தில்தான் இவற்றைக் கையாண் டிருக்க வேண்டும். அப்படி இல்லையே? ஜப்பான், ஜெர்மனி போன்றவை அறிவியல், தொழில்நுட்பத்தில் சாதித்துவருகின் றன. அந்த நாடுகளில் பாடங்கள் அவரவர் தாய்மொழிகளில்தான் கற்றுத்தரப்படுகின்றன. அத்துடன் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இந்த நாடுகளின் பங்களிப்பும் அதிகம்.
தவறான நம்பிக்கை 2: உலகோடு ஒட்டிவாழ ஆங்கில மொழியறிவு அவசியம்.
ஏற்றுமதியில் உலகின் முதல் 10 இடங்களைப் பிடித்த நாடுகளில் 8 நாடுகள், அவர்களுடைய தாய்மொழியில்தான் நாட்டு நிர்வாகத்தை நடத்துகின்றன, ஆங்கிலத்தில் அல்ல. நூற்றாண்டுகளாகத் தாங்கள் செய்துவரும் அரசு நிர்வாகத்தையும் வணிகத்தையும் அதே முறையில், அதே மொழியில் மேற்கொள்கின்றனர். உலக அரங்கில் வெற்றிகரமாக அவர்கள் வலம்வருகின்றனர்.
தவறான நம்பிக்கை 3: தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ஆங்கிலம் அத்தியாவசியம்.
இந்தியாவில் ஆங்கில அறிவு அதிகமாக இருப்பதால்தான், தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவால் சாதிக்க முடிந்தது என்போர் பலர். ஆங்கிலம் தெரிந்தவர்களைச் சேர்த்து இந்தத் துறையில் வேலைவாங்க முடிகிறது என்பது உண்மையாக இருந்தாலும், ஆங்கிலத்தால்தான் இது சாத்தியம் என்பது தவறான எண்ணப்போக்கே.
தென் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் தொழில்நிறுவனத்தை எடுத்துக்கொள்ளுங்கள். தகவல் தொழில்நுட்பத் துறையிலும் நுகர்வோர் சாதனங்கள் தயாரிப்பிலும் அந்த நிறுவனம்தான் பல ஆண்டுகளாக முன்னோடியாக இருக்கிறது. அந்த நாட்டில் கொரிய மொழிக்குத்தான் முக்கியத்துவம். 1969-ல் நிறுவப்பட்ட அந்த நிறுவனம், 2012-ல் உலக அளவில் 18,900 கோடி டாலர்கள் மதிப்புக்கு விற்பனை செய்திருக்கிறது. ஐ.பி.எம்., (10,500 கோடி டாலர்கள்), மைக்ரோ சாஃப்ட் (7,800 கோடி டாலர்கள்) ஆகிய 2 நிறுவனங்களின் கூட்டுவிற்பனையைவிட அதிகம். ஆங்கிலம் இருந்தால்தான் சாதிக்க முடியும் என்ற வாதத்தை சாம்சங் உடைத்துவிட்டது.
ஆங்கிலம் விளைவித்த கேடு
இந்தியர்களை ஆங்கிலேயர்கள் ஆள வந்த பிறகு, இந்தியர் களில் மிகச் சிலரே முதலில் ஆங்கிலத்தில் பயிற்சியளிக்கப்பட்டு நிர்வாகத்தில் உதவுவதற்கு அமர்த்திக்கொள்ளப்பட்டனர். ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு அப்போது வாழ்க்கையில் சலுகைகளும் மரியாதைகளும் கிடைத்தன. அது அப்படியே பரவி, பலரையும் பற்றிக்கொண்டது.
நாடு சுதந்திரம் அடைந்த பின், இந்தியைத் தேசிய மொழியாக்கும் முயற்சிக்கு, இந்தி பேசாத மாநிலங்களிலிருந்து கடும் எதிர்ப்பு வந்தது. எனவே, இணைப்பு மொழியாக ஆங்கிலமே தொடரட்டும் என்று முடிவுசெய்யப்பட்டது. இந்த முடிவு காரணமாக இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் நாட்டின் நிர்வாகத்திலிருந்தும் பிறவற்றிலிருந்தும் ஒதுக்கி வைக்கப்பட்டனர்.
இதனால், கோடிக் கணக்கான மக்கள் முறையாகப் பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்படுகின்றனர். மனித வளத்தை முழுதாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய நாடு, ஆங்கிலம் தெரியவில்லை என்பதற்காகப் பலரை ஒதுக்கிவைத்து, மிகப் பெரிய இழப்பைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.
மொழி வழியாகப் புதியதொரு தீண்டாமை கடைப்பிடிக்கப் படுகிறது. உள்ளூர் மொழிகளைத் 'தீண்டத் தகாத'தாக ஆக்கிவிட்ட இந்தியா, உலகிலேயே புதியதொரு உதாரணம்.
இந்தியா செய்திருக்க வேண்டியது
ஜப்பான், ஜெர்மனி, கொரியா போல கல்வியை அவரவர் தாய்மொழியிலேயே அளித்திருக்க வேண்டும். ஆங்கிலம் இணைப்பு மொழியாக மட்டுமே இருந்திருக்க வேண்டும். 'சரளமாக ஆங்கிலம் பேச வராதா?' என்று வாயில் பிளாஸ்திரி போட்டு விளம்பரம் செய்து கேலி செய்யும் அவலம் இன்றும் தொடர்கிறது. இதனால், ஏராளமான இளைஞர்கள் கூனிக் குறுகி, இரண்டாம்தரக் குடிமக்கள் போல, அரைகுறை ஆங்கில அறிவுள்ளவர்கள் எதிரில் கைகட்டிச் சேவகம் செய்கின்றனர்.
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று சமூக நீதி பேசும் அரசியல் தலைவர்கள், முதலில் 'ஆங்கில மாயை'யை உடைக்க முன்வர வேண்டும். தாய்மொழியில் அறிவியல், தொழில்நுட்பம் கற்றுத்தரப்பட்டால், ஏராளமான மாணவர்கள் எளிதாகப் படித்து முன்னேற்றம் காண்பார்கள். மொழிவழியில் முன்னேற்றம் காண இந்தப் புதிய சிந்தனையோடு அரசியல் களம்காண எந்த அரசியல் கட்சியாவது தயாராக இருக்கிறதா?
© பிஸினஸ்லைன், தமிழில்: சாரி.
டாக்டர்கள்ஆலோசனை : கோடை காலத்தில் பெரியவர்கள் நாள்தோறும் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்
கோடை காலத்தில் பெரியவர்கள் நாள்தோறும் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என டாக்டர்கள்ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
கோடை காலத்தில் பெரியவர்கள் முதல்குழந்தைகள் வரை அனை வருக்கும் பல்வேறு உடல்
உபாதைகள் ஏற்படவாய்ப்புள்ளது. இந்த சூழலில்ஏற்படும் அதிக வெப்பம், குழந்தைகளை பாதித்து உடலில் பலவிதமாற்றங்களை ஏற்படுத்துகிறது. அதேபோல் வயதானவர்களுக்கு உடலில் நீர்சத்து குறைந்து,மயக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் உடலில் அதிகரிக்கும் வெப்பத்தால் நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.இவற்றை தவிர்க்க டாக்டர்கள் கூறிய
ஆலோசனை வருமாறு: கோடை காலத் தில்சுற்றுப்புற வெக்கை அதிகமாக இருப்பதால் பல
பிரச்னைகள் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க பெரியவர்கள் தினமும் 4 முதல் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இளநீர், மோர்,பழச்சாறு போன்றவை களை பருக வேண்டும்.
குழந்தைகள் தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர்பருக வேண்டும்.
பிரட், பரோட்டா, ஃபாஸ்ட் புட் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். இவ்வகை உணவுகள் நமது உடலில் அதிகளவு தண்ணீர் சத்தை எடுத்துக்கொள்ளும்தன்மை கொண்டது. உடலில் வெப்பம் அதிகமாகும் போது, இதயத்துக்கு செல்லும் ரத்த ஓட்டம்
பாதிக்கும். சுத்தமான தண்ணீரை பருக வேண்டும். வாந்தி பேதி, டயரியா வந்தால் உடனடியாகடாக்டரை அணுக வேண்டும். சிறுநீர் மஞ்சள் நிறத்தில் சென்றால், உடலில்
நீச்சத்து குறைந்து விட்டது என அறிந்துகொள் ளலாம். இதனை தவிர்க்க போதிய அளவு சுத்தமானதண்ணீர் பருகவேண்டும்.
சார்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் தண்ணீர் அளவு குறையும்போது,சர்க்கரை அளவு குறைந்து மயக்கம் ஏற்படும். இவர்கள் கையில் எப்பொழுதும் குளுக்கோஸ் கலந்ததண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும். கர்ப் பிணி பெண்களுக்கு உட லில் தண்ணீர் சத்து குறையஅதிக வாய்ப்புள்ளது. எனவே, மருத்துவரை அணுகி, உட லில் போதிய அளவு தண் ணீர்சத்து உள்ளதா என பரிசோதிக்க வேண்டும். இல்லையெனில் வயிற்றில் உள்ளகுழந்தை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்க பழச்சாறு, தண்ணீர் அதிகமாக பருகவேண்டும். எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும்.
பொதுவாக கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் கடுமையான வெயில் நேரத் தில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். குழந்தைகளை வெயிலில் அலையவிட்டால் வயிற்றுப்போக்கு, வாந்தி, அம்மை, தோல் கொப்பளம் உட்பட பலவித நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தைகளுக்கு நீர்ச்சத்துள்ள ஆகாரத்தை அதிகளவில் தரவேண்டும். தினமும் 3 லிட்டர் தண்ணீர்தரவேண்டும். சுகாதாரமாக இருக்க வேண்டும். சுத்தமில்லாமல் தயார் செய்யப்படும்உணவு வகைகளை வாங்கி தரக்கூடாது. குழந்தைகளை தினமும் இருமுறை குளிக்க வைக்கலாம்.பருத்தி ஆடைகளை அணிவிக்கலாம். இளநீர், பாழரசங்கள், உப்பு கலந்த எலுமிச்சை பழச் சாறு,தர்பூசணி தரலாம். இவ்வாறு டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியராகப் பதவியுயர்வு வழங்கிட வேண்டும்
அமைப்பின் எருமப்பட்டி, திருச்செங்கோடு, ராசிபுரம், புதுச்சத்திரம்,நாமக்கல் ஆகிய 5 ஒன்றியக் கிளைகள் தொடக்க விழா நாமக்கல்லில்சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர்வே.அண்ணாதுரை தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஆர்.நடேசன்
வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் க.தனசேகரன், மாவட்ட துணைச்செயலர்கள் பெ.சரவணக்குமார், பி.கருப்பன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் சா.கண்ணன், மு.வெங்கடாசலம் உள்ளிட்டோர்முன்னிலை வகித்தனர்.
அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள்கூட்டணி பொதுச்செயலர் சு.ஈசுவரன் புதிய கிளைகளைத்தொடக்கிவைத்து சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழ்ப்பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவியுயர்வு வழங்கிட வேண்டும், நடுநிலைப்
பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியராகப் பதவியுயர்வு வழங்கிட வேண்டும்,இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவியுயர்வு வழங்கி நிரப்பிய பிறகே புதிய காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் நியமனம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநிலத் தலைவர் கே.காமராஜ், மாநிலப் பொருளாளர் அ.ஜோசப் சேவியர்,மாநில துணைத் தலைவர் வி.எஸ்.முத்துராமசாமி, மாவட்டப் பொருளாளர் கு.சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நான்காம் வகுப்பு மாணவிக்கு, டாக்டர் பட்டம்
லேப் -டாப்பை பிரித்து பொருத்திய,கோவை தனியார் பள்ளி நான்காம்
வகுப்பு மாணவிக்கு, லண்டன்,'வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்து உள்ளது.
கோவை, சாயிபாபா காலனியைச் சேர்ந்தவர்,பிரபு மகாலிங்கம். இவருடைய, 10 வயது மகள்ஆதர்ஷினி. இவர், கோவை இந்தியன் பப்ளிக் பள்ளியில்,நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.இம்மாணவி, லேப் -டாப்பை, 15 நிமிடம் 23 நொடிகளில்,உதிரி பாகங்களாக பிரித்து மீண்டும் பொருத்தியதற்காக, லண்டன் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்பல்கலை, டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. ஆதர்ஷினி கூறியதாவது: லேப் - டாப்பை தனித்தனியே பிரித்து மீண்டும் பொருத்த, 15 நாட்கள் பயிற்சி எடுத்தேன். இதை செய்து காண்பித்ததற்காக, கடந்தாண்டு, 'இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' மற்றும்
'ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' ஆகியவற்றில் இடம்பிடித்தேன். இவற்றின் வாயிலாக, லண்டன் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் பல்கலை, மார்ச் 22ல், டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
ஞாயிறு, 30 மார்ச், 2014
15.04.2014 ம் தேதி வரை துறை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் -TNPSC
Departmental Examinations May 2014 - Instructions
|
பள்ளி கல்வி துறை : ஏப்ரல் 23 முதல் கோடை விடுமுறை
ஏப்ரல் 23 முதல் ஜூன் 1 வரை கோடை விடுமுறை விடப்படும் என பள்ளிகல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 16 :பள்ளி ஆண்டு இறுதி தேர்வுகள் முடிவு
ஏப்ரல் 17 : பெரிய வியாழன் விடுமுறை
ஏப்ரல் 18 :புனிதவெள்ளி விடுமுறை
ஏப்ரல் 19 : சனி விடுமுறை
ஏப்ரல் 20 : ஞாயிறு விடுமுறை
ஏப்ரல் 21 :பள்ளி வேலை நாள்
ஏப்ரல் 22 :பள்ளி வேலைநாள்
ஏப்ரல் 23 முதல் ஜூன் 1 வரை கோடை விடுமுறை
பெருமை வாய்ந்த மாணவர்களை உருவாக்கிய மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
பல பெரியோர்களின் பெருமை, அவர்களிடம் கல்வி கற்ற மாணவர் களாலும், மாணவர்களின் பெருமை அவர்களுக்குக் கல்வி கற்பித்த ஆசிரியர் களாலும் உலகுக்குத் தெரியவரும். அத்தகைய பெருமை வாய்ந்த மாணவர்களை உருவாக்கிய சிறப்பு மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களுக்கு மட்டுமே வாய்த்தது. வித்துவான் தியாகராசச் செட்டியார், உ.வே. சாமிநாதய்யர் போன்ற தலைசிறந்த மாணவர்கள் அவருக்குக் கிடைத்தனர்.
1815-ம் ஆண்டு திருச்சிராப்பள்ளியில் பிள்ளையவர்கள் பிறந்தார். தன் தந்தையாரைக் குருவாகக் கொண்டு ஆரம்பக் கல்வியைக் கற்கத் துவங்கிய அவர், சான்றோர் முதல் சாதாரணமானவர் வரை என யாரிடமெல்லாம் கற்க வேண்டியன உள்ளனவோ அவர்களிடமெல்லாம் கைப்பொருள் கொடுத்துக் கல்வி பயின்று மகாவித்துவான் ஆனார். சிவபக்தி, வெகுளாமை, விருந்தோம்பும் பண்பு, சாதி, மதம் நோக்காத உயர்ந்த நெஞ்சம், கற்றாரைப் போற்றும் பெருந்திறம், ஆன்மீகக் கற்பனை மிக்க கவிதைகளை விரைந்தியற்றும் பேராற்றல் இத்தகைய பெருமைகளைப் பெற்றிருந்த பேராளர் அவர். தம்மிடம் வாய்த்திருந்த கல்வித் திறனைச் சாதி மதம் பாராது எவ்விதக் கைமாறும் பெற்றுக்கொள்ளாமல் வந்து சேர்ந்த மாணவர்களச் சொந்த மக்களைப் போலக் வாரி வழங்கிய திறம் என அவரது பெருமைகள் பல. அவரது மாணவர் உ.வே.சா., அவரது பெயரை எழுத்தால் எழுதுவதற்கு அஞ்சுவதாகக் குறிப்பிடுவார். மாணாக்கர்களிடம் அத்தகைய குருபக்தியை ஏற்படுத்தியவர் மகாவித்துவான். தம்மை நாடி வந்த அனைத்து மாணவர்களுக்கும் உணவளித்துத் தங்குமிடமும் அளித்துக் கல்வி புகட்டியவர் அவர். அவர் இயற்றிய புராணங்கள் 22. பிற காப்பியங்கள் ஆறு. பிள்ளைத்தமிழ் முதலியன 45. எண்ணிறந்த தனிப்புராணங்களும் இயற்றியுள்ளார்.
நீதிபதி வேதநாயகம் பிள்ளையின் பால் இவர் பெருமதிப்பு கொண்டிருந்தார். அவரைப் பாராட்டிக் குளத்துக்கோவை என்னும் நூல் இயற்றியுள்ளார். தகுதியில்லாத யாரையும் புகழ்ந்து பாடும் பழக்கத்தைக் கொண்டிராத மகாவித்துவான் பாடிய பாடல் அவரது சமயப் பொறைக்கும் சமயம் கடந்த சிறந்த நட்புக்கும் சிறந்த சான்றாகும். பிறருக்குக் கல்வி கற்பிப்பதில் வள்ளலாக வாழ்ந்த அந்தப் பெருந்தகையின் வாழ்வு இன்றைய ஆசிரியப் பெருமக்களுக்ககெல்லாம் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவதாகும்.
எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது?
உலகத்தில் இருக்கும் அனைவரும் சந்தோஷ மாக இருந்துகொண்டிருப்பதுபோலவும் தனக்கு மட்டும் பிரச்சினை, தனக்கு மட்டும் தோல்வி, தனக்கு மட்டும் சிக்கல் எனவும் நினைத்துக் கொள்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல. இந்த இடத்தில் ஒரு முக்கியமான மனிதரை உங்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டிருக்கிறது.
அவர் ஆர்தர் ஆஷே. பிரபல டென்னிஸ் வீரர். கறுப்பினத்தைச் சேர்ந்தவர். டென்னிஸ் என்பதுதான் இவருடைய கனவு, எதிர்காலம், எல்லாமும்.
ஆனால் டென்னிஸ் விளையாடச் செல்லும் இடங்களில் எல்லாம் பலவிதமான எதிர்ப்புகள், அவமதிப்புகள். ஆனால் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு டென்னிஸ் விளையாடக் கற்றுக்கொண்டார். மிக நன்றாக விளையாடவும் செய்தார். வெற்றிகள் குவிந்தன. பலரது கவனத்தையும் ஈர்த்தார்.
உலகின் பிரபலமான அத்தனை போட்டி களிலும் கலந்துகொள்ளும் வாய்ப்புகள் வந்தன. அமெரிக்க ஓபன் டென்னிஸ், ஆஸ்திரேலியா ஓபன், விம்பிள்டன் எனப் பல போட்டிகளிலும் கலந்துகொண்டு வெற்றிகளைச் சுவைத்தார்.
திடீரென ஒருநாள் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. மாரடைப்பு என்றார்கள். அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தீவிர மருத்துவ சிகிச்சைகள் தரப்பட்டன. ஆஷே பிழைத்தார். டென்னிஸ் ரசிகர்கள் பெருமூச்சு விட்டனர். அந்தப் பெருமூச்சு அடங்குவதற்குள் அடுத்த அதிர்ச்சி வந்து சேர்ந்தது. ஆஷேவுக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டது.
மீண்டும் மருந்துகள், மாத்திரைகள். ஆனாலும் சிக்கல் தீர்ந்தபாடில்லை. வெவேறு விதமான உடல்நிலைப் பிரச்சினைகள் தொடர்ந்தன. தீவிரப் பரிசோதனையில் அவருக்கு எய்ட்ஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தீய பழக்கவழக்கங்கள் எதுவும் அவரிடம் இல்லை. அவருக்கு எய்ட்ஸ் எப்படி வந்தது? ஆய்வுசெய்து பார்த்தபோது அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்தபோது ரத்தம் ஏற்றப்பட்டது. அந்த ரத்தம் ஹெச்.ஐ.வி. கலந்த ரத்தம். விஷயம் தெரிய வந்தபோது ரசிகர்கள் துடிதுடித்துப்போனர்கள். அவருடைய ரசிகர்களில் ஒருவர் ஆஷேவுக்குக் கடிதம் எழுதினார், 'உங்களுக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது?'
அதற்கு ஆஷே நிதானமாகப் பதில் எழுதினார். 'உலகில் 5 கோடி சிறுவர்கள் டென்னிஸ் விளையாட விரும்புகிறார்கள். 50 லட்சம் பேரே விளையாடுகிறார்கள். 5 லட்சம் பேரே முறையான பயிற்சியுடன் தேர்ச்சி பெறுகிறார்கள். அவர்களில் 50 ஆயிரம் பேருக்குதான் போட்டிகளில் விளையாடும் வாய்ப்புக் கிடைக்கிறது. ஆனால் அவர்களில் 5 ஆயிரம் பேரால்தான் விளையாட முடிகிறது. அவர்களில் 50 பேர்தான் விம்பிள்டன் போன்ற சர்வதேசப் போட்டிகளுக்கு வருகிறார்கள். அவர்களில் நான்கு பேர்தான் அரை இறுதிக்கு முன்னேறுகிறார்கள். இருவர் இறுதிப் போட்டியில் மோதுகிறார்கள். ஒருவருக்குத்தான் கோப்பையை வெல்கிறார்கள்.
எனக்கு மட்டும் ஏன்? என அப்போது நான் கேட்கவில்லை.
Sent from my iPad
துவக்க பள்ளியில் முக்கியத்துவம் பெறுமா ஆங்கிலவழி கல்வி?
இந்நிலையில், தனியார் நர்சரி, பிரைமரி பள்ளிகளின்எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கவும், மாணவர் எண்ணிக்கை அங்கு பல மடங்கு பெருகுவதும் நடந்து வருகிறது.
தனியார் பள்ளி மோகம்
ஆங்கிலவழிக்கல்வி என்பது மட்டுமின்றி, மாணவர்கள் மீதான அக்கறையும், அந்தபள்ளி நிர்வாகத்திடம் கேள்வி கேட்கக்கூடிய வாய்ப்பும் இருப்பதால்,
கூலித்தொழிலாளி குடும்பத்தை சேர்ந்தவர் கூட, தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கவே விரும்புகின்றனர்.கடந்த ஆண்டு, ஆங்கிலவழிக்கல்வி என, அரசு பள்ளியில் தனிப்பிரிவு துவக்கினால், அதில் தனியார் பள்ளிகளில் சேர்ந்துள்ள மாணவர்களை, அங்கு கொண்டு வந்து பெற்றோர் சேர்க்கலாம் என, அரசும், கல்வித்துறை அலுவலர்களும் நினைத்திருந்தனர். ஆனால், அப்படியெதுவும் நடக்காததால்,ஆங்கிலவழிக்கல்விக்கு மவுசு இருப்பதாக காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக, அரசு பள்ளியில்
ஏற்கனவே, தமிழ் வழிக்கல்வியில் சேர்ந்துள்ள மாணவர்களை, ஆங்கிலவழி கல்விக்கு மாற்றியது. இதை அரசு பள்ளியில், ஒரு லட்சம் மாணவர்கள் ஆங்கிலவழிக்கல்வியில் புதிதாக சேர்ந்துள்ளனர் என, பெருமிதமாக அறிவித்தனர். ஆனால், தமிழ்வழி கல்வியில், லட்சம் மாணவர்களின் எண்ணிக்கை சரிந்தஉண்மையை யாரும் கூற முன்வரவில்லை. பெயரளவில், ஆங்கிலவழி கல்வி என, அறிவித்ததுடன் சரி, அதற்கு பின், அவர்களுக்கான தனி வகுப்புகளோ, பயிற்சிகளோ, ஆசிரியர்களோ வழங்கப்படவில்லை.
தவறான கொள்கை
தமிழ்வழிக்கல்வி, ஆங்கிலவழிக் கல்வி மாணவர்கள் அனைவரையும் ஒரே வகுப்பறையில், அமரவைத்து, அதே ஆசிரியர் மூலம் வழக்கம் போல், பாடம் நடத்தும் பணி நடந்து வந்தது. இதனால்,அரசு பள்ளிகளின் தரம் குறித்தோ, ஆங்கிலவழிக்கல்வி குறித்தோ, பெற்றோரின் எண்ணத்தில் எவ்விதமுன்னேற்றமும் இல்லை. இந்நிலையில், வரும் கல்வியாண்டில், ஆங்கிலவழிக்கல்வியில் மேலும் அதிக கவனம்செலுத்தி, மாணவர்களை ஆங்கிலவழிக் கல்வியில் கூடுதலாக சேர்க்க கல்வித்துறை அலுவலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டில் நடந்த அதே, புள்ளிவிவர, "மேஜிக்' மட்டும் பெருமிதமாகஇருக்கலாமே தவிர, மொத்த மாணவர் எண்ணிக்கையில் சரிவு இருக்கத்தான் செய்யும் என்கின்றனர்
ஆசிரியர்கள்.
எஸ்.எஸ்.எல்.சி :முன்கூட்டியே தேர்வு முடிவு?
தமிழகத்தில், எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு,துவங்கி நடந்து வருகிறது. வரும் ஏப்ரல், 9ம் தேதி வரை நடக்கிறது. பிளஸ் 2 தேர்வை போலவே,எவ்வித முறைகேடுக்கும் இடம் தராமல் நடத்த, தேர்வுத்துறை தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேபோல், விடைத்தாள் திருத்தும் பணிகளையும் துரிதப்படுத்தி,தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட
ஏற்பாடு நடக்கிறது.
கடந்த, 2012 -- 13ம் கல்வி ஆண்டில், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவு, கடந்த, மே, 31ம் தேதி வெளியிடப்பட்டு, ஜூன், 24ம் தேதி முதல், அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பிளஸ் 1வகுப்பு எடுக்கப்பட்டது. ஆனால், நடப்பு கல்வி ஆண்டில், பிளஸ் 1 வகுப்பு, முன்கூட்டியே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த, ஜூன் மாதம்வழக்கமாக, பிளஸ் 1 தவிர மற்ற வகுப்பு பள்ளிகள் திறக்க வேண்டி இருந்தும், கோடை வெப்பம் காரணமாக, துவக்க, உயர்நிலை, பிளஸ் 2 வகுப்புக்கு, கடந்த, ஜூன், 10ம் தேதி திறக்க, தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த ஆண்டு, எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு பணிகளை விரைவாக முடித்து, முன்கூட்டியே தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டு, பிளஸ் 1 வகுப்பும், முன்கூட்டியே நடத்தமுடிவு செய்யப்பட்டுள்ளது.
கல்வி அதிகாரிகள் கூறியதாவது: எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவு, லோக்சபா தேர்தல் முடிவு
வெளியிட்ட பின் அறிவிக்கப்படும். கடந்த, ஜூன், 24ம் தேதி, பிளஸ் 1 வகுப்புக்கு மாணவர்கள்சேர்க்கை நடத்தி, வகுப்பு துவங்கப்பட்டது. நடப்பு கல்வி ஆண்டுக்கு, வரும், ஜூன், 16ம் தேதி, பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடத்தி, வகுப்பு துவங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல், துவக்கப்பள்ளி,நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கு, ஜூன், 2ம் தேதி பள்ளிகள்
திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி.,க்கு மட்டும், நடப்பு கல்வி ஆண்டில், எட்டு நாள் முன்னதாக, பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்பு நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பிளஸ் 2 : ஏப்ரல் 1 முதல் முக்கிய படங்களுக்கான திருத்தும் பணி ஆரம்பம்
கடந்த 21 ம் தேதி முதல் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.இந்தாண்டு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் பல புதிய முறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது.கடந்தகாலங்களில் அறிவியல் மற்றும் கணிதம் உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கு மட்டுமே 'டம்மி' எண் பயன்படுத்தப்படும்.தற்பொழுது மாணவர்கள் எழுதும் விடைத்தாளில் பார்கோடிங் இடப்பட்டு மாணவர்களின் எண் அடங்கிய முகப்புத் தாள்
இணைக்கப்பட்டு இருந்தது. விடைத்தாள் திருத்தும் இடத்தில் இந்த முகப்புத் தாள் கிழிக்கப்பட்டு விடைத்தாளில் திருத்தும்ஆசிரியரே அதற்கான 'டம்மி' எண் போட்டு திருத்த வேண்டிய நிலையில் உள்ளனர்.பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர் ஒரு விடைத்தாளை கையில் எடுத்து 'டம்மி' எண் போடுவதில் துவங்கி திருத்தி மொத்த மதிப்பெண் போடும் வரை அனைத்து விஷயத்திலும் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியுள்ளது.இதில் ஆசிரியர் கவனமின்றி செயல்பட்டால்குறிப்பிட்ட விடைத்தாள் யாருடையது என்று கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
இது குறித்து ஆசிரியர் கூறியதாவது,
.கடந்த ஆண்டுகளைக்காட்டிலும் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியுள்ளது.எனவே கூடுதல் நேரம் தேவைப்படுகின்றது.முக்கியப்பாடங்களை திருத்துவதற்கு தினமும் காலை 12 விடைத்தாள்களும் மாலையில் 12 விடைத்தாள்களும் வழங்கப்படும். புதியமுறையால் மாலை 6 மணிக்குள் அனைத்து விடைத்தாள்களும் திருத்தி முடிப்பது சற்று சிரமமே என்றார்.
விடைத்தாள்திருத்தும் பணிகள் ஈடுபட்டுள்ள . ஆசிரியர்கள் கூடுதல் கவனத்துடன் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கல்வி அதிகாரிகள் கூறினர்.
Sent from my iPad
01.04.14 MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் தேர்வு ,ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான important வழக்குகள்
~~~~~~~~~~~~~~~~
1.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.25 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 06.02.2014 (REG. TET RELAXATION OF 5% MARKS IN VARIOUS COMMUNITIES
~~~~~~~~~~~~~~~~
2.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.252 SCHOOL EDUCATION (Q) DEPARTMENT DATED 05.10.20AS AMENDED IN G.O.MS.NO.29 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 14.02.2014
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
3 WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD
(REG. P.G. ASSISTANT IN TAMIL)
4 WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD
(REG. P.G. ASSISTANT various subjects )
வெள்ளி, 28 மார்ச், 2014
லோக்சபா தேர்தல் முடிந்த பின், 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி துவங்கும்'
பணி துவங்கும்' என, தேர்வுத் துறை வட்டாரம், நேற்று தெரிவித்துள்ளது. 60 ஆயிரம்
ஆசிரியர்கள் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: பத்து லட்சம் மாணவ, மாணவியர், 10ம்
வகுப்பு தேர்வை எழுதுகின்றனர். ஒரு மாணவருக்கு, ஏழு தேர்வுகள் வீதம், 70 லட்சம்
விடைத்தாள்களை திருத்த வேண்டி உள்ளது. தமிழகத்தில், 12 ஆயிரம் பள்ளிகளில் இருந்து, பாடவாரியாக, ஐந்து ஆசிரியர்கள் வீதம், 60 ஆயிரம் ஆசிரியர்களை, விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்த உள்ளோம். ஒரு ஆசிரியர், நாள் ஒன்றுக்கு, 30 விடைத்தாள் திருத்துவார். அதன்படி, ஒரு நாளில், 18 லட்சம் விடைத்தாள்களை திருத்த முடியும். அதிகபட்சமாக, ஐந்து நாளுக்குள், விடைத்தாள் திருத்தும்பணியை முடிப்போம். தேர்தல் பணி பயிற்சி வகுப்பில், ஆசிரியர் பங்கேற்க இருப்பதால், தேர்தலுக்குப் பின்,பணியை துவக்கி, ஏப்ரல் இறுதிக்குள் முடித்து விடுவோம்.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய பாணி : வழக்கமாக, விடைத்தாள் திருத்தும் பணி, 15 அல்லது 20 நாள் என, இழுவையாக நடக்கும். ஆனால்,இந்த ஆண்டு, விடைத்தாள் திருத்தும் பணியை, விரைந்து முடிக்க, அதிக ஆசிரியர்களை, விடைத்தாள்திருத்தும் பணியில் ஈடுபடுத்தி, இயக்குனர் நடவடிக்கை எடுத்து உள்ளார்.இதனால், தேர்வு முடிவும், விரைவில் வெளிவர வாய்ப்பு உள்ளது. தேர்வு மையங்களில் இருந்து,விடைத்தாள்களை திருத்தும் மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியில், முன்னணி தனியார் பார்சல் நிறுவன வாகனங்களை, தேர்வுத்துறை ஈடுபடுத்தி வருகிறது. "கடந்த ஆண்டு, இந்த பணிக்காக, 2.8 கோடி ரூபாயை, அஞ்சல் துறைக்கு, தேர்வுத்துறை வழங்கியது. தற்போது, தனியார் நிறுவனங்கள் பயன்படுத்தப்படுவதால், இந்தஆண்டு செலவு குறையும்' என, தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.
இலவச இடங்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம் : அரசு பதிலளிக்க இறுதி வாய்ப்பு
தேதி நிர்ணயித்ததை எதிர்த்த வழக்கில், அரசு தரப்பில் பதிலளிக்க, கடைசி வாய்ப்பாக, ஒரு வாரகால அவகாசத்தை, சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிஉள்ளது.
சென்னை, விருகம்பாக்கத்தைச் சேர்ந்த, "பாடம்' நாராயணன் தாக்கல் செய்த, கூடுதல் மனு: இலவசமற்றும் கட்டாயக் கல்வி பெறும் உரிமை சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடங்களை, சமூகத்தின் அடித்தட்டு மக்களின் குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும் என, கடந்த ஆண்டு,ஏப்ரலில், பள்ளிக்கல்வித் துறை, ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில், "25 சதவீத இடங்களுக்கு, மே 3ல் இருந்து,9ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது. ஏழு நாட்கள் மட்டுமே,பெற்றோருக்கு அவகாசம் வழங்கியது. விண்ணப்பம் பெற்று நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். இதில்,இரண்டு நாட்கள், வார விடுமுறை வந்து விடுகிறது. கர்நாடகாவில், கல்வித் துறை வகுத்த விதிகளின்படி, 25
சதவீத இடங்களுக்கு விண்ணப்பிக்க, ஒரு மாதம் அவகாசம் வழங்கப்படுகிறது. தமிழக அரசின் உத்தர வால், 69 சதவீத மாணவர்கள், தனியார் பள்ளிகளில் படிக்கும் வாய்ப்பை, 2013 - 14 கல்வியாண்டில் இழந்துள்ளனர்.எனவே, தமிழக அரசு, "கட் - ஆப்' தேதி நிர்ணயித்து பிறப்பித்த அரசாணையை, ரத்து செய்ய வேண்டும். இந்தமனு மீது, முடிவெடுக்கும் வரை, 25 சதவீத இடங்களை நிரப்ப, தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு, தலைமை நீதிபதி அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்அடங்கிய, "முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. "அரசாணையை எதிர்த்து, கடந்த ஆண்டு தாக்கல் செய்தமனுவுக்குப் பதிலளிக்க, அரசுக்கு, "நோட்டீஸ்' அனுப்பியும், பதில் மனு தாக்கல் செய்யவில்லை' என, நாராயணன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பதில் மனு தாக்கல் செய்ய,கடைசி வாய்ப்பாக, ஒரு வார கால அவகாசத்தை, அரசுக்கு வழங்குவதாக, "முதல் பெஞ்ச்' தெரிவித்தது;விசாரணையை, அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தது.
புதன், 26 மார்ச், 2014
26.03.14 MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் தேர்வு ,ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான important வழக்குகள்
GROUPING MATTERS
~~~~~~~~~~~~~~~~
1.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.25 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 06.02.2014 (REG. TET RELAXATION OF 5% MARKS IN VARIOUS COMMUNITIES
~~~~~~~~~~~~~~~~
2.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.252 SCHOOL EDUCATION (Q) DEPARTMENT DATED 05.10.20AS AMENDED IN G.O.MS.NO.29 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 14.02.2014
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
3 WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD
(REG. P.G. ASSISTANT IN TAMIL)
4 WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD
(REG. P.G. ASSISTANT various subjects )
Sent from my iPad
செவ்வாய், 25 மார்ச், 2014
News update : சென்னை உயர்நீதிமன்றத்தில் TET வழக்கு விசராணை (25.03.14)
(25.03.14) சென்னை உயர்நீதிமன்றத்தில் TET WEIGHTAGE முறைக்கு எதிரான வழக்கு2012 TET மதிப்பெண் தளர்வு தொடர்பான வழக்கின் விசாரணை நடைபெறவில்லை விசாரணை 26.03.14 ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
CPS :அரசு பங்களிப்பு ஓய்வூதிய திட்ட விவரங்கள் இனி அரசு தகவல் தொகுப்பு மையத்தில் பெற்றுக் கொள்ளலாம்
இதுகுறித்து, மாநில துணை கணக்காயர் வர்ஷினி அருண் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: அரசு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் தொடர்பான பணிகள் அனைத்தும், ஜனவரி 1ம் தேதி முதல் தமிழக தகவல் தொகுப்பு மையத்திடம் ஒப்படைக் கப்பட்டுள்ளன. இனி 2013, 14ம் ஆண்டு கணக்கு முதல் இத்திட்டம் தொடர்பான பணிகள் அனைத்தும் அரசு தகவல் தொகுப்பு மையத்தால் பராமரிக்கப்படும்.
மேலும் 2012-13ம் ஆண்டுக்கான சந்தாதாரர்கள் அனைவரின் கணக்கு விவரப் பட்டியல்கள் அந்தந்த கருவூல அலுவலர்கள் மூலம் வரைவு மற்றும் வழங்கல் அலுவலர்களுக்கு அனுப்பும் பொருட்டு, சென்னை கருவூல கணக்கு இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இனி அரசு பங்களிப்பு ஓய்வூ திய திட்டம் குறித்த அனைத்து விவரங்களுக்கும், சந்தாதாரர்கள், ஆணையர், அரசு தகவல் தொகுப்பு மையம், சென்னை 600025 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
தமிழக அரசு ஊழியர்களுக்கான 2011-12ம் ஆண்டின் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கணக்கு அறிக்கை, குறுந்தகடுகளில் பதிவு செய்யப்பட்டு, கருவூல அதிகாரி களிடம் ஒப்படைக் கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் சந்தாதாரர்கள் டி.டி.ஓ.,வை அணுகி அவரவர் கணக்கு அறிக்கையை பெற்றுக் கொள்ளலாம். இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், 04424314477 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
சென்னை உயர்நீதிமன்றத்தில் முதுகலை தமிழாசிரியர் C வகை வினாத்தாளில் இறுதி விடக்குறிப்பு தவறு என தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி
முதுகலை தமிழாசிரியர் C வகை வினாத்தாளில் வினா எண்கள் 45, 70 and 104 க்கு டிஆர்பி யின் இறுதி விடக்குறிப்பு தவறு என கே ஆர் விஜயா சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி நாகமுத்து அவற்றுக்கு Trb வெளியிட்ட இறுதி விடக்குறிப்பு (final key ) சரியே எனக் கூறி அவரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
தீர்ப்பின் சில முக்கிய பகுதிகள்
Petition filed under Article 226 of the Constitution of India praying to issue a writ of mandamus directing the respondents to revalue the Question Nos.45, 70 and 104 of Booklet Series "C" of the written Examination for direct recruitment of PG Assistant 2012-13 in Tamil
that the Madurai Bench of this Court had dismissed a number of writ petitions on the ground of latches, but, those were pertaining to the candidates who had written their examinations in the subjects other than Tamil where the final key answers were published as early as on 07.10.2013 itself. But, so far as the Tamil subject is concerned, for some reasons or other, the final key answers were not at all published on 07.10.2013 and, as a matter of fact, the same were published only on 23.12.2013. Immediately, thereafter, the petitioner has come up with this writ petition because, according to the petitioner, her objections regarding key answers for the above said three questions were not considered properly.
In view of all the above, I hold that there is no latches on the part of the petitioner and so, this writ petition cannot be dismissed on the ground of latches.
the challenges made in respect of Question Nos.45, 70 and 104 to say whether the petitioner has demonstrated that the key answers are wrong. I hold that the petitioner has failed to demonstrate that the key answers in respect of Question Nos.45, 70 and 104 in C series are wrong and so, this writ petition is liable only to be dismissd.
மாற்றுத் திறனாளிகள் தங்களது இலவச பஸ் பயணஅட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம்.
இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட மறுவாழ்வு நல அலுவலர்டி.சீனிவாசன் கூறியதாவது: மாற்றுத் திறனாளிகள் இப்போது பயன்படுத்தி வரும் இலவச பஸ் பயணஅட்டை வரும் 31-ஆம் தேதி காலாவதியாகிறது. தேர்தல்நடத்தை நெறிமுறைகள் அமலில் உள்ளதால், மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசபஸ் பயண அட்டையை வரும் நிதியாண்டுக்கு (ஏப்ரல் 1 முதல்)புதுப்பிப்பது தொடர்பாக மாற்றுத் திறனாளி நல ஆணையருக்கு அனுமதிக்கடிதம் அனுப்பினேன். திருவள்ளூர் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகள் தங்களது இலவச பஸ் பயண அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று அவர்கூறினார்.
இதையடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 100 மாற்றுத்திறனாளிகள் தங்களது இலவச பஸ் பயண அட்டையைப் புதுப்பிக்க பரிந்துரைக் கடிதம் பெற்றுள்ளனர் என்றார் அவர்
சென்னை பல்கலையின் தேர்வுகளுக்கான முடிவுகள்,இன்று வெளியிடப்படுகிறது
இன்று இரவு வெளியிடப்படுகிறது.
இதுகுறிதது சென்னை பல்கலை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை பல்கலை, தொலைதூர
கல்வி நிலையம் சார்பில், எம்.ஏ., - எம்.எஸ்.சி., - எம்.காம்., மற்றும் நூலகவியல் பட்டம்,
முதுகலை பட்டம், சான்றிதழ் மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கான தேர்வுகள், கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட்டன. இத்தேர்வுகளுக்கான முடிவுகள், இன்று இரவு, 8:00
மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகளை, www.ideunom.ac.in, www.unom.ac.in,
www.kalvimalar.com, www.indiaresults.com, உள்ளிட்ட இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.நடப்பாண்டு மாணவர்கள், மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு, 750 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும். இதற்கான விண்ணப்பம், தொலைதூரக் கல்வி மையத்தின், இணையதளத்தில் இருந்து பெறலாம்.விண்ணப்பத்தை, ஏப்.,7ம் தேதிக்குள், தொலைதூரக் கல்வி மையத்தில் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
5,855 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் - 4 தேர்வில்,தேர்வு பெற்றவர்களுக்கு, முதல்கட்டசான்றிதழ் சரிபார்ப்பு, நேற்று,சென்னையில் துவங்கியது.
போட்டி தேர்வு, கடந்த ஆண்டு ஆகஸ்ட், 25ல் நடந்தது.இத்தேர்வை, 12 லட்சம் பேர் எழுதினர். இதன் முடிவை,அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,),
சமீபத்தில் வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி நியமன
உத்தரவு வழங்குவதற்கான கலந்தாய்வு, தேர்வாணையஅலுவலகத்தில், நேற்று துவங்கியது.
முன்னாள் ராணுவவீரர்களின் வாரிசுகளுக்கான சிறப்பு கலந்தாய்வு, நேற்று நடந்தது. இதில், 200 பேர் கலந்து கொண்டனர்.மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பும், நேற்று தேர்வு செய்யப்பட்ட முன்னாள் ராணுவ வீரர்களின்வாரிசுகளுக்கு, பணி நியமன உத்தரவு வழங்குவதற்கான கலந்தாய்வும், இன்று நடக்கிறது. ஏப்ரல், 1 முதல், பொதுப்பிரிவு கலந்தாய்வு துவங்குகிறது. முதல்கட்ட கலந்தாய்வு, தொடர்ந்து, மே 8 வரை நடக்கும் என,தேர்வாணைய செயலர், விஜயகுமார் தெரிவித்தார்.
திங்கள், 24 மார்ச், 2014
25.03.14 MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் தேர்வு ,ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்
~~~~~~~~~~~~~~~~
1.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.25 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 06.02.2014 (REG. TET RELAXATION OF 5% MARKS IN VARIOUS COMMUNITIES
2.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.252 SCHOOL EDUCATION (Q
DEPARTMENT DATED 05.10.2012AS AMENDED IN G.O.MS.NO.29 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 14.02.2014REGARDING WEIGHTAGE OF MARKS
3 WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD
(REG. P.G. ASSISTANT IN TAMIL)-FOR ORDERS
போன்ற முக்கிய வழக்குகள் நாளைய விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
ஞாயிறு, 23 மார்ச், 2014
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் வாயிற்கூட்டம் நடத்த தேர்வுத்துறை தடை.
பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி மாநிலத்தில் 66 மையங்களில் நேற்று முன்தினம் துவங்கியது. முதல் கட்டமாக முதன்மை தேர்வாளர்கள் விடைத்தாள் திருத்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.நாளை ( 24.03.14 ) உதவி தேர்வாளர்கள் திருத்தும் பணியை மேற்கொள்கின்றனர். இந்தாண்டு தேர்தல்நடத்தை விதி அமலில் உள்ளதால், விடைத்தாள் திருத்தும் மையங்களில், வாயிற்கூட்டம் நடத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
பிளஸ்–2 :நாளை ( 24.03.14 ) விடைத்தாள்களில் விடைத்தாள்கள் திருத்தும்பணிதொடங்கப்பட உள்ளது . மே முதல் வாரம்தேர்வு முடிவு வெளியாகும் !
பிளஸ்–2 தேர்வு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்–2 தேர்வு கடந்த 3–ந்தேதி தொடங்கியது. இந்த தேர்வு 25– ந்தேதி முடிவடைகிறது. தொழில் கல்விக்கு தேவையான கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய முக்கிய தேர்வுகள் முடிவடைந்துவிட்டன.
தமிழ் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்பாடங்களுக்கான முதன்மைத்தேர்வர்கள் மற்றும் கூர்ந்தாய்வர்கள் விடைத்தாள்களை கடந்த 21 ம் தேதி முதல் திருத்தி வருகின்றனர். இந்த ஆண்டு விடைத்தாள் மதிப்பீடு செய்து மதிப்பெண் பதிவு செய்யும் முறையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதற்கான அறிவுரைகளையும்.குறும்படம் மூலம் பயிற்சியினையும் முகாம் அலுவலர்கள் வழங்கினர்.
நாளை ( 24.03.14 ) பிளஸ்–2 தேர்வு விடைத்தாள்களில் தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடங்களுக்கான விடைத்தாள்கள் உதவித்தேர்வர்கள் திருத்தும்பணி தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்பட உள்ளது அதற்கான அறிவுரைகள் உரிய முறையில் முதன்மை கல்வி அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு அரசு தேர்வுத்துறையால் வழங்கப்பட்டுள்ளது. .உதவித்தேர்வர்களுக்கான பயிற்சிக்குப் பின்னர் மொழிப்பாடங்களுக்கான விடைத்தாள்களை திருத்தும் பணி முழுவீச்சில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் பிளஸ்–2 தேர்வு முடிவு மே மாதம் 9–ந்தேதி வெளியிடப்பட்டது. இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் வெளியிட அனைத்து ஏற்பாடுகளையும் அரசு தேர்வுத்துறை ஏற்பாடு செய்து உள்ளது.
இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் கு.தேவராஜன் கூறுகையில் பிளஸ்–2 தேர்வு விடைத்தாள்கள் திருத்தும்பணி தமிழ்நாடு முழுவதும் 66 மையங்களில் 24–ந்தேதி தொடங்குகிறது. விரைவாகவும், விவேகமாகவும் விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய ஆசிரியர்களிடம் சொல்லி இருக்கிறோம். அவர்கள் விரைவாக மதிப்பீடு செய்தால் நல்லது. மே மாதம் முதல்வாரத்தில் எப்படியும் பிளஸ்–2 தேர்வு முடிவை வெளியிடுவோம் என்றார்.
உயிரியல் பாடத்தில் சென்டம் மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு
வினாவும், ஒரு மூன்று மதிப்பெண் வினாவிலும் பிழை இருப்பதால், தேர்வர்கள்
குழப்பத்துக்கு ஆளாகினர். அதனால், உயிரியல் பாடத்தில் சென்டம் மதிப்பெண் பெறும்
மாணவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.
நேற்று முன்தினம், உயிரியல், வணிக கணிதம், வரலாறு, தாவரவியல் பாடங்களுக்கான, பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்தது. அதில், உயிரியல் பாடத்திற்கான வினாத்தாளில், தமிழ்வழி மற்றும்ஆங்கிலவழி வினாக்களில், அச்சுப்பிழைகளும், அர்த்தம் மாறிய வார்த்தைகளும் அதிகமாக இருந்தது. அதனால்,உயிரியல் பாடத்தில் சென்டம் எடுக்கும் மாணவரின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. . தமிழ்வழி கற்ற தேர்வர், தமிழில் உள்ள வினாக்களை மட்டுமே அர்த்தம் கண்டறிந்து எழுதுவர். அதேபோல்,ஆங்கிலவழி கற்ற தேர்வர், ஆங்கிலவழி உள்ள வினாக்களை புரிந்து கொண்டு எழுதுவர். இரண்டிலும் மாற்றி மாற்றி வெவ்வேறு அர்த்தத்திலும், சிலது சரியாகவும், எழுத்துப்பிழையுடனும், சில வினாக்கள்கேட்கப்பட்டதால், 'சென்டம்' மதிப்பெண் எடுக்கும் தேர்வரின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. 'மருத்துவபடிப்புக்குச் செல்லும் மாணவருக்கு, உயிரியல் பாடம் முக்கியமானது என்பதால், அதில், சென்டம் எடுத்தாகவேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. அதில் பல வினாக்கள் குளறுபடியாக உள்ளதால், சென்டம் எடுப்பது குறைந்துவிடும். பிழையான வினாக்களுக்கு மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்' என, மாணவ, மாணவியர் தெரிவித்தனர்.
டி.இ.டி.,தேர்வில், அரசு விலக்கு அளித்தும், அது நடைமுறைப்படுத்தவில்லை குழப்பத்தில் 18 ஆயிரம் ஆசிரியர்கள்
அனுப்பப்படும் ஆசிரியர்களின், பணிப் பதிவேடுகள் (எஸ்.ஆர்.,கள்) பரிசீலிக்கப்படுவதில்லை, எனசர்ச்சை எழுந்துள்ளது. இதனால், 18 ஆயிரம் ஆசிரியர்கள் குழப்பத்தில்உள்ளனர்.
தமிழகத்தில், 2010 முதல் ஆசிரியர் தகுதி தேர்வு நடைமுறையில் உள்ளது. ஆசிரியர்
தேர்வு வாரியத்தால் 2012ல் அறிவிக்கப்பட்ட ஓர் உத்தரவில் (எண்:04/2012), 23.8.2010க்கு முன் ஆசிரியர் பணி நியமனம் தொடர்பாக சான்றிதழ் சரிபார்ப்பு அல்லது அதுதொடர்பான
நடவடிக்கைக்கு உட்பட்டிருந்தால், 23.8.2013க்கு பின் பணி நியமனம் செய்வதில், அந்த
ஆசிரியருக்கு டி.இ.டி., தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதாக டி.ஆர்.பி., அறிவிப்பு வெளியிட்டது.
இதன்படி, மாநிலத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள்,2010 முதல் 2012 வரை, 18 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள், டி.இ.டி., தேர்வு எழுததேவையில்லை என, அப்போது அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், பணியேற்று இரு ஆண்டுகள் நிறைவடைந்த ஆசிரியர்கள், தகுதி காண் பருவத்திற்காக, அவர்களது பணிப் பதிவேடுகளை,
முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அப்படி அனுப்பப்படும் பணிப்
பதிவேடுகளை கல்வி அதிகாரிகள் பரிசீலித்து, 'உங்கள் பணி நியமன உத்தரவில், ஆசிரியர் தகுதி தேர்வில்தேர்ச்சி பெற்ற பின் தான், உங்களது தகுதி காண் பருவத்தை முடிக்க இயலும்,' என பதில் கூறி, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றன.
பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறுகையில், 'டி.இ.டி.,தேர்வில், அரசு விலக்கு அளித்தும், அது நடைமுறைப்படுத்தவில்லை,' என்றனர்.
Source :dinamalar
பத்தாம் வகுப்புத் தேர்வு : தொடங்கும் நேரத்தில் மாற்றம் இல்லை.... காலை 9.15 மணிக்குத் தொடங்கும்!
இந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 3,200 எழுதுகின்றனர். இந்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை அந்தந்த பள்ளிகள் அரசுத் தேர்வுகள் இணையதளத்திலிருந்து வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில்பதிவிறக்கம் செய்து கொண்டன. இந்த ஹால் டிக்கெட்டுகள் திங்கள்கிழமைக்குள் (மார்ச் 24) மாணவ,மாணவிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுவிடும் என தலைமையாசிரியர்கள்தெரிவித்தனர்.
பத்தாம் வகுப்புத் தேர்வு மார்ச் 26 முதல் ஏப்ரல் 9-ஆம்தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தேர்வை பள்ளிகள் மூலமாக 10லட்சத்து 35 ஆயிரம் பேரும், தனித்தேர்வர்களாக 66 ஆயிரம் பேரும்எழுதுகின்றனர். பொதுத்தேர்வுக்காக தேர்வு மையங்களை தயார் செய்தல், விடைத்தாள்புத்தகத்தில் கூடுதல் பக்கங்களைத் தைத்தல், தேர்வு கண்காணிப்பாளர்கள்
நியமனம், வினாத்தாள்களை கட்டுக்காப்பு மையங்களுக்கு எடுத்துச்செல்லுதல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளன.வினாத்தாள்களின் பாதுகாப்பை உறுதி செய்ய
கட்டுக்காப்பு மையங்களுக்கு காப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
பிளஸ் 2 தேர்வில் வினாத்தாளை எடுத்துச் செல்லவும், தேர்வுக்குப்பிறகு விடைத்தாள்களை எடுத்து வரவும் அரசு செலவில் வாகனங்கள்ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த நடைமுறை பத்தாம் வகுப்புத் தேர்விலும் தொடரும் எனதேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அதேபோல், பிளஸ் 2 தேர்வில் அறிமுகம் செய்யப்பட்ட மாணவர்களின்புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள், பார்கோடு எண் உள்ளிட்டஅனைத்து புதிய அம்சங்களும் பத்தாம் வகுப்புத் தேர்விலும்நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
வினாத்தாளை தேர்வு மையங்களுக்கு விநியோகிப்பதற்கான வழித்தடங்களுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. வழக்கமாக, ஒரு கல்வி மாவட்டத்துக்கு 3 அல்லது 4 மையங்களே இருக்கும்.ஆனால், இந்த ஆண்டு 8 மையங்கள் வரை நேரத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
விடைத்தாள் பக்கங்கள் 30-ஆக அதிகரிப்பு: இந்த ஆண்டு பிளஸ் 2 விடைத்தாள் புத்தக பக்கங்களின் எண்ணிக்கை 38-ஆக அதிகரிக்கப்பட்டது. அதேபோல,பத்தாம் வகுப்பு விடைத்தாள் புத்தகப் பக்கங்களின் எண்ணிக்கையும் 30-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டுகளில் பத்தாம்வகுப்பு விடைத்தாள் புத்தகத்தில் 16 பக்கங்கள் மட்டுமே இருக்கும்.
Sent from my iPad
சனி, 22 மார்ச், 2014
தேர்தல் காரணமாக குரூப்–1, குரூப்–2 தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப குரூப்–1, குரூப்–2, குரூப்– 2 ஏ, குரூப்–4 ஆகிய தேர்வுகளை தேர்வாணையம் நடத்தி வருகிறது.
குரூப்–2 ஏ தேர்வு என்பது நேர்முகத்தேர்வு அல்லாத குரூப்–2 தேர்வாகும். குரூப்–1 தேர்வு ஏப்ரல் 26–ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. அது தேர்தல் காரணமாக ஜூலை 20–ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதுபோல மே மாதம் 18–ந் தேதி குரூப்–2 ஏ தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 16–ந் தேதி நடைபெறுவதால், அதைத் தொடர்ந்து மே 18–ந்
தேதி நடைபெறுவதாக இருந்த குரூப்–2 ஏ தேர்வு ஜூன் மாதம் 29–ந் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வி.ஷோபனா தெரிவித்துள்ளார்.
பிளஸ் 2 உயிரியல் தேர்வில், விலங்கியல் பகுதி விடைத்தாளில்,தாவரவியல் பகுதிக்கான பதில் எழுதிய மாணவிகள்
தாவரவியல் பகுதிக்கான பதில் எழுதிய சம்பவத்தால், மாணவிகள் சிலர் அச்சத்தில் உள்ளனர்.
விடைத்தாள் அமைப்பு உட்பட தேர்வுத் துறையில், இந்தாண்டு பல்வேறு மாற்றங்கள்செய்யப்பட்டன. குறிப்பாக, உயிரியல் தேர்வில், விலங்கியல், தாவரவியல் என
இரு பகுதிகளுக்கும் தலா 26 பக்கம் கொண்டதாக விடைத்தாள் தயாரிக்கப்பட்டன.
தேர்வின்போது, இந்த இரண்டு விடைத்தாள்களும் மாணவர்களுக்கு வழங்கப்படும். அதற்குரிய விடைத்தாளில் தான் விடைகள்எழுத வேண்டும். ஏனென்றால், விடைத்தாள் திருத்தும்போது, விலங்கியல், தாவரவியல்பகுதிகளை தனித்தனி ஆசிரியர்கள் திருத்தி, மதிப்பெண் வழங்குவர். இந்த முறையை, தேர்வு அறையில்மாணவர்களுக்கு தெளிவாக எடுத்துக் கூறி விடைத்தாள்கள் வழங்க, தேர்வுத் துறை அறிவுறுத்தியிருந்தது.
ஆனால், மதுரையில் உள்ள ஒரு மையத்தில், விலங்கியல் பகுதி விடைத்தாளில் விடை எழுதி முடித்தமாணவிகள் சிலர், தொடர்ந்து தாவரவியல் கேள்விகளுக்கான விடையும் எழுதிவிட்டனர். இது தாமதமாக கண்டுபிடிக்கப்பட்டது. விடைத்தாள்களை இரண்டு ஆசிரியர்கள் திருத்துவதால், விலங்கியல் பகுதியில்எழுதப்பட்ட தாவரவியல் விடைக்கான மதிப்பெண் சிக்கல் இல்லாமல் கிடைக்குமா என்ற அச்சத்தில் மாணவிகள்
உள்ளனர். .
பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் சம்பந்தப்பட்ட தேர்வு மையத்திற்கு சென்று,
"கல்வி அதிகாரிகளுக்கு முறையாக இப்பிரச்னையை தெரிவித்து, விடைத்தாள் திருத்தும் போது சம்பந்தப்பட்டமாணவிகளுக்கு மதிப்பெண் வழங்குவதில் சிக்கல் இருக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என வலியுறுத்தியுள்ளனர்.
முதல் வாரத்தில் பி.இ., விண்ணப்பம், வழங்க முடிவு
அண்ணா பல்கலை வட்டாரம், நேற்று தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு, மே 4 முதல், 20 வரை,அண்ணா பல்கலை மட்டும் இல்லாமல், பல்கலை உறுப்பு கல்லூரி மற்றும் அரசு பொறியியல்கல்லூரிகளில், விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன; 2.34 லட்சம் விண்ணப்பங்கள், விற்பனை ஆயின.ஜூன் இறுதி முதல், ஜூலை இறுதி வரை நடந்த மாணவர் சேர்க்கை கலந்தாய்வில், 1.5 லட்சம்இடங்கள் நிரம்பின; 50 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களுக்கு சேர ஆளில்லை.
வரும், 2014 15 கல்வி ஆண்டுக்கான, மாணவர் சேர்க்கைக்கு, மே மாதம், முதல் வாரத்தில் இருந்து, விண்ணப்பம் வழங்க முடிவு செய்திருப்பதாக, அண்ணா பல்கலை வட்டாரம், நேற்று தெரிவித்தது. "பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும்பணி, 24ல் துவங்கி, 15 நாளில் முடிய உள்ளது. பாட வாரியாக, மதிப்பெண் தொகுப்பு மற்றும்தேர்வு முடிவு தயாரிக்கும் பணிகள், அடுத்த, இரண்டு வாரம் வரை, "டேட்டா சென்டரில்' நடக்கும். எப்படியும்,
மே மாதம், 7 தேதிக்குள், பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே,மே மாதம், முதல் வாரத்தில் இருந்து விண்ணப்பம் வழங்குவது சரியாக இருக்கும் என, பல்கலை கருதுகிறது.
ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), இரண்டாம்தாள் ஏப்., 7 முதல், சான்றிதழ் சரிபார்ப்பு
ஏப்., 7 முதல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கவுள்ளது. டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி மதிப்பெண்
அளவை, 60 சதவீதத்தில் இருந்து, 55 சதவீதமாக குறைத்து, கடந்த மாதம், முதல்வர் அறிவித்தார்.இந்த சலுகை, கடந்த ஆண்டு, ஆகஸ்டில் நடந்த டி.இ.டி., தேர்வுக்கு பொருந்தும் எனவும்தெரிவித்தார். அதன்படி, டி.இ.டி., முதல் தாளில் (இடைநிலை ஆசிரியர்), தேர்ச்சி பெற்ற, 20ஆயிரம் பேருக்கு, கடந்த, 12ம் தேதி முதல், ஐந்து மண்டலங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து வருகிறது. இந்தப் பணி, 31ம் தேதியுடன் முடிகிறது.
இதையடுத்து, டி.இ.டி., இரண்டாம்தாளில் (பட்டதாரி ஆசிரியர்) தேர்ச்சி பெற்ற, 27 ஆயிரம் பேருக்கு, ஏப்., 7 முதல், 25ம் தேதி வரை, சான்றிதழ் சரிபார்ப்பு பணியை நடத்த, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) முடிவு செய்துள்ளது. முதல் தாளுக்கு நடந்ததைப் போல், ஐந்து மண்டலங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கும் என, டி.ஆர்.பி.,வட்டாரம் தெரிவித்துள்ளது.
வெள்ளி, 21 மார்ச், 2014
News update : சென்னை உயர்நீதிமன்றத்தில் TET வழக்கு விசராணை (21.03.14)
வியாழன், 20 மார்ச், 2014
அறிஞர் அண்ணாவின் ஆங்கில அறிவாற்றல் ......!!!
அறிஞர் அண்ணா அமெரிக்க நாட்டின் யேல் பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்தார். அப்போது அங்குள்ள மாணவர்களிடம் உரையாடினார். உரையாடலின் இடையே ஒரு மாணவர் எழுந்து 'தாங்கள் ஆங்கிலத்திலும் வல்லவர் என்று தெரியும். ஆங்கில எழுத்துகளான 'A,B,C,D' ஆகிய நான்கு எழுத்துகளும் வராத நூறு வார்த்தைகளைக் கூற முடியுமா?' எனக் கேட்டார். உடனடியாக விடையளித்தார் அறிஞர் அண்ணா. வியப்பாக இருக்கிறதா? ஒன்று முதல் தொண்ணூற்று ஒன்பது வரையிலான எண்களை ஆங்கிலத்தில் சொன்னார் அவர். நூற்றை ஆங்கிலத்தில் சொன்னால் அதில் 'D' என்னும் எழுத்து வந்து விடும் என எல்லோரும் எதிர்பார்த்திருந்த போது 'STOP' எனக் கூறி நிறைவு செய்தார்.
ஒருமுறை அறிஞர் அண்ணாவிடம் 'பிகாசு'(Because) என்னும் ஆங்கிலச்சொல் மூன்றுமுறை வருமாறு ஓர் ஆங்கிலச் சொற்றொடர் கூறுமாறு கேட்டார்கள். உடனடியாக அண்ணா சொன்னார் - "No sentence ends with because because 'Because' is a conjunction"
அறிஞர் அண்ணாவைப் பார்க்க இங்கிலாந்தைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர் வந்திருந்தார். அச்செய்தியாளர் 'அறிஞர் அண்ணா ஆங்கிலத்திலும் உலகச் செய்திகளிலும் வல்லவர் இல்லை; பன்னாட்டு அவை('UNO') பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது' என்னும் எண்ணம் கொண்டிருந்தார். அண்ணாவை எப்படியாவது கேள்வியில் மடக்கி விட வேண்டும் என எண்ணிப் "பன்னாட்டு அவையைப் பற்றித் தங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார். அவ்வினாவிற்கு அண்ணா அளித்த விடையில் அச்செய்தியாளர் கொண்டிருந்த இறுமாப்பு அடியோடு தகர்ந்தது. என்ன சொன்னார் அண்ணா என்கிறீர்களா?
"ஐ நோ யுனோ. ஐ நோ யு நோ யுனோ. பட் யு டோன்ட் நோ ஐ நோ யுனோ." ("I know UNO. I know – you know UNO. But you don't know I know UNO" )
Sent from my iPad
TNPSC: டிசம்பரில்2013 ல் நடைபெற்ற துறைத்தேர்வு முடிவுகளை TNPSC இணையதளத்தில் வெளியிட்டுள்ளது
TRB PG TAMIL பி வரிசை கருணை மதிப்பெண்: நீதிமன்றத்தின் ஆணை மறுபரிசீலனை?
பி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாக 60 க்கும் மேற்பட்ட தேர்வர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தவாறான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்க நீதிமன்றத்தின் ஆணை பெற்றுள்ளதாக தெரிகின்றது. இதுவரை ஆசிரியர் தேர்வு வாரியம் அதன்மீது எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் TRB அந்த நீதிமன்ற ஆணைகளை மறுபரிசீலனை செய்ய நீதிமன்றத்தை நாட முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அவ்வாறு செய்யும் பட்சத்தில் அம்மனுக்கள்மீண்டும் நீதியரசர் சுப்பையா விசாரிப்பார். தற்போது மதுரை பெஞ்சில் உள்ள நீதியரசர் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வரும் நாளில் விசாரணை நடைபெறக்கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
News update : சென்னை உயர்நீதிமன்றத்தில் TET வழக்கு விசராணை (20.03.14)
குரூப்-4 தேர்வில் தேர்வானவர்களுக்கு முதல்கட்ட கலந்தாய்வு 6 ஆயிரம் பேருக்கு அழைப்பு
தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் எடுத்த சுமார் 12 லட்சம் பேரின் மதிப்பெண் விவரங் கள் அடங்கிய ரேங்க் பட்டியல், டி.என்.பி.எஸ்.சி. இணையதளத் தில் வெளியானது. காலியிடங்க ளின் எண்ணிக்கை 5,853 ஆக அதிகரிக்கப்பட்டது. கலந்தாய்வு அட்டவணை தேர்வில் வெற்றி பெற்று கலந் தாய்வுக்கு அழைக்கப்படுவோரின் விவரம் ஏதும் வெளியிடப்பட வில்லை. வழக்கமாக தேர்வு முடிவை வெளியிடும்போது, தேர்ச்சி பெற்றவர்களின் பதிவு எண்களை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுவிடும். இந்தமுறை அவ்வாறு தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் வெளியிடப்படாததால், தேர்வர்கள் குழப்பம் அடைந்தனர்.
இந்நிலையில் இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவர் ஆகிய பதவிகளுக்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கான பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. புதன்கிழமை வெளியிட்டது. 6,000 பேருக்கு அழைப்பு அதன்படி, பொது தரவரிசையில் முதல் 6 ஆயிரம் இடங்களுக்குள் இடம்பெற்றிருப்பவர்கள் கலந்தாய்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கலந்தாய்வு, வரும் 24-ம் தேதி தொடங்குகிறது. 28-ம் தேதி வரை சிறப்புப் பிரிவினருக்கும் ஏப்ரல் 1 முதல் பொது தரவரிசையில் இடம்பெற்றிருப்பவர்களுக்கும் கலந்தாய்வு நடத்தப்படும். முதல் நாளில் கலந்தாய்வு, மறுநாள் சான்றிதழ் சரிபார்ப்பு என்ற வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணி மே 8-ம் தேதி முடிவடையும் என்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார் அறிவித்துள்ளார்
நியூட்டன், ஆப்பிள், அணுகுண்டு…
16-ம், 17-ம் நூற்றாண்டுகளில் ஒரு புதிய நம்பிக்கையைத் தோற்றுவிக்கும் வகையில் நிறைய நிகழ்வுகள் நடந்தன. இந்தப் பிரபஞ்சம் முழுவதையும், குறைந்தபட்சம் அதன் பௌதிக பாகங்கள் முழுவதையும் மனிதர்கள் அறிந்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கைதான் அது. தடை ஏதுமின்றி அறிவைப் பெறுவதற்கான உரிமையின் மீது கொண்ட அந்த நம்பிக்கைதான் கடந்த 1000 ஆண்டுகளில் நடந்த அறிவு வளர்ச்சியில் மிக முக்கியமான நிகழ்வு.
முன்னுதாரணமற்ற புத்தகம்
அந்தப் புதிய நம்பிக்கையின் மகுடம் என்று ஐசக் நியூட்டனின் 'பிரின்சிபியா' (1687) புத்தகத்தைக் கூறலாம். இந்தப் பிரம்மாண்டமான அறிவியல் நூல்தான் நிலைமம் (ஒரு பொருள் ஓய்வு நிலையில் அல்லது சீரான இயக்கத்தில் இருக்கும் பண்புதான் நிலைமம்), விசை போன்ற அடிப்படையான கருத்துகளை நிறுவியது, இயக்கத்துக்கான பொது விதிகளைச் சொன்னது, ஈர்ப்புவிசைக்காகச் சிறப்பு விதியை முன்வைத்தது. நியூட்டனின் இந்தப் புத்தகம் அறிவியல் வரலாற்றில் முன்னுதாரணமற்றது.
அதேபோல் நவீன அறிவியலின் பிறப்பிலும் அது முக்கியப் பங்கு வகித்தது. ஈர்ப்புவிசை குறித்து அவர் உருவாக்கிய விதி மகத்தானதுதான். ஆனால், அதைவிட முக்கியமானது என்னவென்றால், எல்லையற்றும் பிரபஞ்ச அளவிலும் அந்த விதியைப் பொருத்திப்பார்க்கக் கூடிய தன்மைதான். மரத்திலிருந்து ஆப்பிளை விழவைத்த அதே ஈர்ப்புவிசைதான் பூமியை நிலவு சுற்றிவருவதற்கும் காரணமாகிறது.
இப்படியாக, பூமிக்கும் பிரபஞ்சத்துக்கும் இடையே கோடு கிழித்து, அரிஸ்டாட்டிலால் பிரித்து வைக்கப்பட்டிருந்த உலகத்துக்கு நியூட்டனின் 'பிரின்சிபியா' புத்தத்தால் சம்மட்டி அடி விழுந்தது.
பிரபஞ்சம் முழுமைக்கும் பொருந்தும் ஈர்ப்புவிசை என்பது நியூட்டனின் தத்துவம். அந்தத் தத்துவத்தின் ஆழத்தில் மறைந்திருப்பது இதுதான்: 'இந்தப் பௌதிகப் பிரபஞ்சத்தை மனிதனால் அறிந்துகொள்ள முடியும்.' மனிதப் பிரக்ஞையின் பரிணாமத்தில் இது மிகவும் புதுமையான சிந்தனை. மேலும், புதிய விடுதலை என்றும், மனிதர்களுக்கு அளிக்கப்பட்ட புதிய அதிகாரம் என்றும் இந்தச் சிந்தனையைச் சொல்லலாம்.
இந்தச் சிந்தனை இல்லையென்றால், நமக்கு நியூட்டன் கிடைத்திருக்க மாட்டார். நியூட்டனைத் தொடர்ந்து நிகழ்ந்த அறிவுலக, அறிவியல் சாதனைகளும் சாத்தியமாகியிருக்காது.
அவர் கண்டுபிடித்த விதிகளைவிடவும் மிகமிக முக்கியமான வேறொன்றை நியூட்டன் சாதித்திருப்பதை அவருடைய சமகாலத்தவர்களும் உணர்ந்தார்கள். 'பிரின்சிபியா' நூலின் இரண்டாம் பதிப்பில் தனது நூலறிமுகத்தில் ரோஜர் கோட்ஸ் என்பவர் இப்படி எழுதுகிறார்: "மனித மனதுக்கு எட்டாதவை என்று முன்பு கருதப்பட்டவற்றையும் எட்டிப்பிடித்த சாதனையை நியூட்டன் நிகழ்த்தியிருக்கிறார்… இப்போது கதவுகள் திறக்கப்பட்டுவிட்டன."
நவீன அறிவியலின் வரலாறு
நியூட்டனின் 'பிரின்சிபியா'வில் காணப்படும் புதிய உளவியலை உருவாக்கியது எது? மதச் சிந்தனையில் ஏற்பட்ட மாற்றங்கள் நிச்சயமாக இதில் பங்கு வகித்தன. 1517-ம் ஆண்டு மார்ட்டின் லூதர் கிங்கின் பிரகடனங்கள் புராட்டெஸ்டண்டு பிரிவைத் தோற்றுவித்ததுடன், திருச்சபையின் அதிகாரங்களைக் குறைத்தன. பைபிளை ஒவ்வொரு தனிமனிதரும் படித்துப் புரிந்துகொள்ள முடியும்.
அதற்காக அவர்கள் பாதிரியார்களாக ஆக வேண்டும் என்பதில்லை என்று அவர் சொன்னது புதுவிதமான ஓர் அக விடுதலையை ஊக்குவித்தது. மதரீதியான இந்தச் சுதந்திரம் கலை, இலக்கியம், அறிவியல் போன்ற துறைகளுக்கும் பரவியது.
இதைத் தொடர்ந்து நிறைய அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன. 1572 நவம்பர் 11-ம் தேதியன்று, சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு, டிக்கோ ப்ராயே என்ற டேனிஷ் வானியலாளர் காஸ்ஸியபியா நட்சத்திரக் கூட்டத்தில் மிகமிகப் பிரகாசமாக ஒளிரும் ஒரு பொருளைக் கண்டார். அதற்கு முன்னால் அந்தப் பொருளை அங்கே பார்த்ததில்லை என்பதையும் அவர் உணர்ந்தார்.
ப்ராயே கண்டுபிடித்தது வேறொன்றுமில்லை, பெருநட்சத்திர வெடிப்புதான் அது. நட்சத்திரங்களெல்லாம் அழிவற்றவை, மாறாதவை என்ற பழம் நம்பிக்கைகளை ப்ராயேயின் கண்டுபிடிப்பு வெடிக்கச் செய்தது.
பிறகு, விண்ணுலகங்களின் தெய்விகப் பூரணத் தன்மை இத்தாலிய இயற்பியலாளர் கலிலியோவாலும் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. அவர் தனது புதிய தொலை நோக்கியை 1610-ல் நிலவை நோக்கித் திருப்பினார். "விண்வெளியில் இருக்கும் நிலவு முதலானவை சீராகவும், சமமாகவும், பரிபூரணக் கோளமாகவும் இருக்கும் என்று காலம்காலமாகத் தத்துவஞானிகள் சொல்லிவந்தார்கள்.
ஆனால், அதற்கெல்லாம் நேரெதிராக நிலவு மேடும் பள்ளமுமாக, கரடுமுரடாக, சீரற்ற பரப்பைக் கொண்டிருந்தது" என்கிறார் கலிலியோ.
நியூட்டன் பிறப்பதற்கு முந்தைய சில தசாப்தங்களில் வாழ்ந்த ரெனே தெகார்தேவின் தத்துவங்களும் அப்போது பெரும் செல்வாக்கு செலுத்தின. தன் இருப்பு உள்பட எல்லாவற்றின் இருப்பையும் சந்தேகிக்கக்கூடிய ஒரு தத்துவப் போக்கை முதன்முறையாக தெகார்தே தொடங்கிவைக்கிறார். "நான் சிந்திக்கிறேன். எனவே, நான் இருக்கிறேன்" என்றார் அவர்.
நியூட்டனின் பிரபஞ்சம் தழுவிய இயற்பியல் விதிக்கு முன்வடிவம் போன்ற ஒரு கருதுகோளை தெகார்தே முன்வைத்தார். அதற்கு 'சுழல்கள்' என்று பெயர். ஆனால், இதை நிரூபிக்க முடியாமல் போனாலும் பூமியிலும் பிரபஞ்ச அளவிலும் நிகழும் எண்ணற்ற நிகழ்வுகளை விளக்கவும் ஒருங் கிணைக்கவும் கூடிய ஒரு துணிவை அவருடைய சித்தாந்தம் தந்தது.
பௌதிகப் பிரபஞ்சத்துக்கும் ஆன்மிகப் பிரபஞ்சத்துக்கும் இடையில் ஒரு வரையறை இருந்தது. மேற்கண்ட முன்னேற்றங்களெல்லாம் அந்த வரையறையை மாற்றியமைத்ததையும் தெளிவுபடுத்தியதையும் நம்மால் உணர முடியும். கொஞ்சம்கொஞ்சமாக, அரிஸ்டாட்டிலின் 'புனிதப் புவியிய'லின் இடத்தை மேலும் நுட்பமான, அருவமான உலக வரைபடம் ஆக்கிரமித்துக்கொண்டது.
இந்த வரைபடத்தில் பௌதிக உலகம் இருக்கிறது. எலெக்ட்ரான்கள், அணுக்கள், ஒளி, வெப்பம், மூளைகள், நட்சத்திரங்கள், நட்சத்திர மண்டலங்கள் ஆகிய பருப்பொருட்கள்-ஆற்றல்கள் எல்லாம் இந்த வரைபடத்தில் அடக்கம். பரந்துவிரிந்த இந்தப் பிரபஞ்சம் அறிவியல் ஆய்வுகளுக்கும் கணித விதிகளுக்கும் உட்படுத்தக் கூடியதாக இருந்தது.
இந்த பௌதிகப் பிரபஞ்சத்துடன் இணையாக இருப்பது ஆன்மிகரீதியிலான பிரபஞ்சம். இந்தப் பிரபஞ்சம் அளவிட முடியாதது, இடம் சாராதது, அணுக்களாலோ மூலக்கூறுகளாலோ உருவாகாதது.ஆனால், அதில் நம்பிக்கை கொண்டவர்களைப் பொறுத்தவரை எங்கும் நிறைந்திருப்பது அது. இந்த இரண்டு பிரபஞ்சங்களும் எண்ணற்ற, முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றன.
ஆனாலும், அறிவியலின் களம் என்பது பௌதிகப் பிரபஞ்சம்தானே தவிர, ஆன்மிகப் பிரபஞ்சம் அல்ல. இந்தப் பிரபஞ்சம்குறித்து அறிவியலால் எண்ணற்ற விஷயங்களைச் சொல்ல முடியும். ஆனால், ஆன்மிகப் பிரபஞ்சம்குறித்து அதனால் எதையும் சொல்ல முடியாது. பிரபஞ்சம் தோன்றுவதற்குக் காரணமாக இருந்த 'பெருவெடிப்பு' (பிக் பேங்) நிகழ்ந்த ஒரு நுண்விநாடிக்கும் (நானோசெகண்ட்) குறைவான கால அளவு வரை எட்டிப்பார்க்க அறிவியலால் முடியும்.
ஆனால், பிரபஞ்சம் ஏன் உருவானது, அதற்கு ஏதாவது நோக்கம் இருக்கிறதா என்ற கேள்விகளுக்கெல்லாம் அறிவியலால் பதில் சொல்ல முடியாது.
அறிவின் சில பகுதிகள் மனிதர்களால் அறிந்து கொள்ள முடியாது என்ற எண்ணம் எல்லா உணர்வுகளை யும்போல நம் ஆழ்மனதில் உறைந்துகிடக்கிறது. அதை நமது பிரக்ஞையிலிருந்து அவ்வளவு எளிதாக வெட்டியெறிந்துவிட முடியாது. மேரி ஷெல்லியின் புகழ்பெற்ற 'ஃப்ராங்கென்ஸ்டைன்' நாவலில் (1818) இப்படி வரும்: "அறிவைப் பெறுதல் என்பது எவ்வளவு ஆபத்தானது. தனது இயல்பு அனுமதிக்கும் அளவையும் கடந்து மிகப் பெரிய உயரத்தை அடைய நினைப்பவனைவிட, தான் இருக்கும் ஊர்தான் உலகம் என்ற நினைப்பில் வாழும் மனிதன் எவ்வளவு மகிழ்ச்சியானவன்!"
அழிவுக்கான ஆக்கமா?
நியூ மெக்ஸிகோவில் முதல் அணுகுண்டுச் சோதனையை அமெரிக்கா நடத்தியபோது வெளிப்பட்ட பயங்கரம் என்பது, நம் இயல்பைவிட அதீதமான சக்திகளை நாம் கட்டவிழ்த்துவிட்டோம் என்பதற்கான அடையாளமே. இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்ததும் அணுகுண்டுத் தயாரிப்புத் திட்டத்தின் (மன்ஹாட்டன் புராஜெக்ட்) தலைவரான ராபர்ட் ஓப்பன்ஹீமர், "அப்போது நாங்கள் புரொமிதியஸ் கதையைப் பற்றியும் மனிதனின் புதிய சக்திகள்குறித்த ஆழமான குற்றவுணர்வைப் பற்றியும் நினைத்துக்கொண்டோம்" என்றார்.
படியாக்கத்தின் (குளோனிங்) மூலம் டாலி என்ற ஆட்டை உருவாக்கியபோது, "நவீன வாழ்க்கையின் மதிமயக்கக்கூடிய கதவுகள் திறந்துபார்க்கக் கூடாதவை என்று மூடப்பட்டிருந்தன. அந்தக் கதவுகளைத் திடீரென்று திறந்து, ரகசியங்களை எட்டிப்பார்த்ததுபோல இருக்கிறது" என்று 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை எழுதியது.
திறக்கப்படும் ஒவ்வொரு கதவும் தொடர்ந்து நமக்கு உறுத்தலையும் குற்றவுணர்வையும் ஏற்படுத்தக்கூடும். நாம் மிகவும் முன்னேற்றம் அடைந்தவர்களாகவும் ஆதிவாசிகளாகவும் ஒரே நேரத்தில் இருக்கிறோம். நியூட்டனின் சிந்தனைப் பாய்ச்சலும் நாமே, கல்லோடு சேர்த்துக் கட்டப்பட்ட புரொமிதியஸும் நாமே. டி.என்.ஏ-வின் ரகசியங்களைக் கட்டவிழ்த்துவிட்ட வாட்சன்–கிரிக்கும் நாமே, ஆதாம்-ஏவாளும் நாமே.
பல நூற்றாண்டுகளின் விடுதலை உணர்வும் சிறைவாசமும் படைப்புத்திறனும் பயங்கரமும் ஒன்றாக ஒரே வீட்டில் வசிக்கின்றன. திறக்கும் ஒவ்வொரு கதவும் நம்மைத் தொந்தரவுக்குள்ளாக்கும். இருப்பினும், தொடர்ந்து நாம் கதவுகளைத் திறந்துகொண்டிருப்போம்; ஏனெனில், நம்மை யாராலும் எதனாலும் தடுக்கவே முடியாது.
© 'நியூயார்க் டைம்ஸ்', தமிழில்: ஆசை
(மார்ச் - 20, நியூட்டன் நினைவு நாள்)
Sent from my iPad
நியூட்டனுடன் ஒரு ஜாலியான பேட்டி....
நிருபர்: நியூட்டன் சார், ஆப்பிள் உங்கள் தலையில் விழுந்த கதை உண்மையா?
நியூட்டன்: கெப்ளர் கண்டுபிடித்த கோள்களின் இயக்க விதிகளை மூன்று நாட்களாக விடாமல் படித்துக்கொண்டிருந்தேன். கோள்களெல்லாம் சூரியனை நீள்வட்டமாகச் சுற்றிவருவதுபற்றி அவற்றின் மூலம் அறிந்தேன். அப்போது எனக்குப் பசி தாங்க முடியவில்லை. அந்த வாசிப்பைத் தொடர முடியாததால், ஆப்பிளைப் பறித்துச் சாப்பிட்டுவிட்டு வந்துவிடலாம் என்று தோட்டத்துக்குச் சென்றேன்.
நிருபர்: அப்போதுதான் அந்த ஆப்பிள் உங்கள் தலையில் விழுந்ததா?
நியூட்டன்: இல்லை, அது என் கையில் விழுந்தது.
நிருபர்: உங்களுக்குப் பசி எடுக்கிறது என்று ஆப்பிளுக்கு எப்படித் தெரியும்? அல்லது கடவுள் செயலா?
நியூட்டன்: கடவுள் செயலல்ல, கெப்ளர் செயல்.
நிருபர்: எப்படி?
நியூட்டன்: கோள்களைப் பற்றிய அவரது கண்டுபிடிப்புதான், ஆப்பிள் எப்படி நேராக என் கையில் வந்து விழுந்தது என்பதை எனக்குப் புரிய வைத்தது. கோள்களின் சுற்றுப்பாதை சூரியனை மையம் கொண்டு எப்படி ஒரு நீள்வட்டமாக அமைகிறது என்பதை அவர்தான் புரியவைத்தார்.
நிருபர்: கிரகங்களின் சுழற்சி எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தானே?
நியூட்டன்: மேலும் அவர் சொன்னது, "சூரியனிலிருந்து ஒரு விசை வெளிவந்து கோளங்களைப் பற்றிக்கொள்கிறது." அதிலிருந்து நான் சொல்வது, "பூமி தன் புலப்படாத கைகளால் ஆப்பிளைப் பற்றிக்கொள்கிறது."
நிருபர்: ஆப்பிளைப் பற்றியது உங்கள் கைதானே?
நியூட்டன்: சூரியனிலிருந்து வெளிவரும் விசைபோல் பூமியிலிருந்து ஒரு விசை வெளி வந்து அதைச் சுற்றியுள்ள அனைத்தையும் பற்றிக்கொள்கிறது என்பதைத்தான் நான் அப்படிச் சொன்னேன். கோள்கள், விண்மீன் திரள், ஆப்பிள், நீங்கள், நான் அனைத்தும் அசைவது ஒரு விதியின் கீழ்தான். அதுதான் 'நியூட்டனின் ஈர்ப்பு விதி'.
நிருபர்: சூரியனைச் சுற்றும் சனி அல்லது புதனைப் போல் ஆப்பிள் ஒன்றும் பூமியைச் சுற்றவில்லையே?
நியூட்டன்: ஆப்பிளால் சுற்ற முடியும்.
நிருபர்: எப்படி?
நியூட்டன்: கொஞ்சம் கற்பனைசெய்து பாருங்கள். மிகமிகப் பலத்துடன், அதாவது பூமியின் ஈர்ப்பு விசையை அது சமாளிக்கக் கூடிய அளவு பலத்துடன் வீசியெறிந்தால் அது பூமியைச் சுற்ற ஆரம்பித்து, தொடர்ந்து சுற்றிக்கொண்டிருக்கும்.
நிருபர்: ஆ… புரிகிறது, பூமியைச் சுற்றும் செயற்கைக்கோள்களைப் போல…
நியூட்டன்: என் கணக்குப்படி ஆப்பிளை ஒரு நொடிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினால், பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து ஆப்பிள் விடுபட்டுவிடும். அதையே நொடிக்கு 42 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினால், சூரியனின் ஈர்ப்பு விசையிலிருந்து விடுபட்டு அண்டவெளியில் சுதந்திரமாகப் பயணிக்கத் தொடங்கிவிடும், இன்னொரு கோளின் அல்லது இன்னொரு நட்சத்திரத்தின் ஈர்ப்பு வலையில் விழும்வரை.
நிருபர்: ஆகையால் உங்கள் புகழ்பெற்ற ஈர்ப்பு விதி ஆப்பிளிலிருந்துதான் வந்தது.
நியூட்டன்: ஆமாம். நிறையுள்ள பொருள்கள் எல்லாமே ஒன்றையொன்று ஈர்க்கும் தன்மையுடையன. ஆகையால் மனிதர்கள் நாம் அனைவரும் ஒன்றாக இணையப் படைக்கப்பட்டவர்கள்.
நிருபர்: ஆப்பிளைச் சாப்பிடாமல் ஏன் அதைப் பார்த்தபடியே நிற்கிறீர்கள்?
நியூட்டன்: ஆப்பிளின் சிவப்பு நிறத்தைக் கவனித்தீர்களா?
நிருபர்: அதில் என்ன இருக்கிறது?
நியூட்டன்: சூரியனின் ஒளி ஆப்பிளின் தோல்மீது எதிரொலிப்பதால் ஆப்பிள் நம் கண்களுக்குத் தெரிகிறது.
நிருபர்: இதில் என்ன விஷயம்?
நியூட்டன்: சூரியனின் ஒளி வெண்மையாக இருக்க, அது எப்படி சிவப்பாகப் பிரதிபலிக்கிறது?
நிருபர்: ஆப்பிளின் தோல், ஒளியின் நிறத்தை மாற்றிவிடுகிறது.
நியூட்டன்: இல்லை இல்லை. சில நாள்களுக்கு முன்பு நான் ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். சூரிய ஒளியை ஒரு முப்பட்டகம் (ப்ரிஸம்) வழியே செலுத்தினேன். அது வானவில்லாக வெளிவந்தது.
நிருபர்: ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு.
நியூட்டன்: வெண்மை என்பது ஒரு நிறமல்ல, அது அனைத்து நிறங்களின் கூட்டல்.
நிருபர்: ஓ, எல்லா நிறங்களின் தொகுப்பு என்று சொல்லவருகிறீர்களா?
நியூட்டன்: அந்தத் தொகுப்பை முப்பட்டகம் முழுமையாகப் பிரித்துவிடுகிறது. ஆப்பிளோ அனைத்து நிறங்களையும் உள்வாங்கிக்கொண்டு சிவப்பை மட்டும் பிரதிபலிக்கிறது.
நிருபர்: இதைச் சரி என்று எப்படி நிரூபிப்பது?
நியூட்டன்: நீல நிற வெளிச்சத்தில் இந்த ஆப்பிள் உங்கள் கண்களுக்குத் தெரியாது.அது எதையும் பிரதிபலிக்காமல் கருநிறத்தில் தெரியும்.
நிருபர்: அந்த ஆப்பிளைக் கொடுங்கள், நான் பரிசோதித்துப் பார்க்கிறேன்.
நியூட்டன்: ஐயோ, எனது ஆப்பிள்…?
நிருபர்: இயக்கம் குறித்த விதிகளை எனக்குப் புரியும்படி விளக்குங்கள். உங்கள் ஆப்பிளைத் தந்துவிடுகிறேன்.
நியூட்டன்: சரி, சொல்கிறேன். ஒரு பொருளின் அசைவுக்குப் பின்னால் இருக்கும் ரகசியங்களை வெளிப்படுத்துவதுதான் எனது மூன்று இயக்க விதிகள். நீங்கள் ஒரு காரில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் நேராகச் சென்றுகொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் கார் எந்தவொரு மாற்றமுமின்றி நேராகச் செல்லும். அப்படிச் செல்லும் காரின் இயக்கத்தில் மாற்றம் ஏற்பட்டால் என்ன அர்த்தம்?
நிருபர்: காரை ஓட்டும் நான் வேகத்தைக் குறைத்துவிட்டேன் அல்லது கூட்டிவிட்டேன்.
நியூட்டன்: அல்லது…
நிருபர்: ஸ்டீயரிங்கை வலது அல்லது இடது பக்கம் திருப்பிவிட்டேன்.
நியூட்டன்: இதுதான் என் இயக்க விதிகளின் மூலக்கரு. எந்தவொரு பொருளின் இயக்கத்தில் மாற்றம் ஏற்பட்டாலும், அந்தப் பொருளின் மீது ஏதோவொரு விசை செயல்படுகிறது என்று அர்த்தம்.
நிருபர்: ஓ! திடீரென்று ஸ்டீயரிங்கைத் திருப்பியதுபோல்…
நியூட்டன்: ஆம்! இந்தத் திடீர் மாற்றத்தின் விளைவு உங்கள் காரின் வேகத்தில் அல்லது செல்லும் திசையில் தெரியும்.
நிருபர்: வேக மாற்றமும் விசையும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்பதே நீங்கள் கண்டறிந்த உண்மை. இதை அனைவரும் மிகப் பெரிய சாதனை என்று சொல்கிறார்கள்.
நியூட்டன்: நான் மற்றவர்களுக்கு எப்படித் தோன்றுகிறேன் என்று எனக்குத் தெரியாது. ஆனால், என்னை நான் பார்க்கும்போது கடலோரம் விளையாடும் ஒரு குழந்தையைப் போல் தெரிகிறேன். அந்தக் குழந்தை அதிர்ஷ்டவசமாக ஒரு அழகான கிளிஞ்சலைக் கண்டெடுத்தது. ஆனால், அந்தக் குழந்தையின் முன் பரந்த பெருங்கடலாக அறியப்படாத உண்மைகள் விரிந்துகிடக்கின்றன என்பதுதான் உண்மை.
- குமரன் வளவன், நாடகக் கலைஞர், இயற்பியலாளர்,
பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்பாளர்
தொடர்புக்கு: valavane@yahoo.fr
Sent from my iPad
மறதியும் நல்லது!
ஒருமுறை தன் வேதியியல் கூடத்தில் ஆராய்ச்சியில் இருந்தார். ஊருக்குக் கிளம்பும் அவசரத்தில் குடுவைகளைச் சுத்தம் செய்யாமல் அப்படியே வைத்துவிட்டுக் கிளம்பிவிட்டார்.
நீண்ட விடுமுறை முடிந்து மீண்டும் ஆய்வுக் கூடத்துக்கு வந்தார். சுத்தம் செய்யப்படாத ஆய்வுக்கூடம் அவரை வரவேற்றது. குடுவை களிலும் கிண்ணங்களிலும் இருந்த பொருட்கள் கெட்டுப்போயிருந்தன. அவற்றை எல்லாம் குப்பையில் போட்டுக் கொண்டிருந்தார்.
குடுவைகளைச் சுத்தம் செய்யும்போது தான் ஃப்ளெமிங்கின் நண்பர் ஒருவர் அவரு டைய ஆராய்ச்சியைப் பார்க்க வருவதாகச் சொன்னது நினைவுக்கு வந்தது. உடனே அங்கிருக்கும் கிண்ணங்களில் அதிகம் கெடாமல் இருக்கிற பொருளைத் தேடினார்.
அப்போது ஒரு கிண்ணத்தில் இருந்த பொருளைச் சுற்றிப் பூஞ்சைகள் வளர்ந் திருந்தன. ஆனால் அந்தப் பூஞ்சைகள் பரவியிருந்த இடத்தில் மட்டும் பாக்டீரியா வின் தாக்குதல் இல்லை. உடனே ஃப்ளெ மிங்குக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.
அந்தப் பூஞ்சை இருந்த கிண்ணத்தை எடுத்து சாறு வடித்தல் முறையில் பூஞ்சைகளைப் பிரித்தெடுத்தார். அந்தப் பூஞ்சைகள் பெனிசிலியம் நொடேடம் வகையைச் சார்ந்தவை என்பது புரிந்தது. தொடர்ச்சியான ஆராய்ச்சியில் அந்தப் பூஞ்சையில் இருந்து பாக்டீரியத் தாக்குதலுக்கு எதிரான ஆண்டிபயாட்டிக் மருந்தைக் கண்டுபிடித்தார். பெனிசிலியம் பூஞ்சையில் இருந்து பெறப்பட்ட அந்த மருந்துக்கு 'பெனிசிலின்' என்று பெயர் வைத்தார்.
சில நேரங்களில் மறதியும் கூட கண்டுபிடிப்புக்குக் காரணமாக அமைந்துவிடுகின்றன.
தேர்தல் பணியா, தேர்வுப் பணியா... ஆசிரியர்கள் குழப்பம்!
நடக்கின்றன. அதே நேரத்தில், இன்று, பிளஸ் 2 தேர்வுப் பணியும்,ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. எந்த பணிக்கு செல்வது எனத் தெரியாமல்,ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். பிளஸ் 2 தேர்வுப் பணியில், முதுகலை ஆசிரியர்ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இன்று உயிரியல், வணிகக் கணிதம், வரலாறு மற்றும் தாவரவியல் தேர்வுகள் நடக்கின்றன. வழக்கம் போல், இன்றைய தேர்வுப் பணியிலும், முதுகலை ஆசிரியர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். ஆனால், இன்று காலை, லோக்சபா தேர்தல்தொடர்பான பயிற்சிக்கு, சென்னை உள்ளிட்ட, பல இடங்களில், தேர்தல் அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
இதனால், இன்று காலை, தேர்தல் பயிற்சி கூட்டத்திற்கு செல்வதா, தேர்வுப் பணிக்குச் செல்வதா எனத்தெரியாமல், முதுகலை ஆசிரியர்கள், குழப்பம் அடைந்துள்ளனர்.
ஒவ்வொரு அரசு பள்ளியில் இருந்தும், 10 முதல், 15 ஆசிரியர் வரை, தேர்தல்
பயிற்சி கூட்டங்களுக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். துறை பணிக்கு முக்கியத்துவம் அளித்தால், தேர்தல் அதிகாரிகள் தரப்பில் இருந்து, நடவடிக்கை வருமோ என, ஆசிரியர்கள் பயப்படுகின்றனர்.
இது குறித்து, சென்னையைச் சேர்ந்த ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:
தேர்தல் தொடர்பாக பயிற்சி நடக்கும் நாட்களை, முன்கூட்டியே, கல்வித்துறை மற்றும் தேர்வுத் துறைக்கு தேர்தல் அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவித்தனரா என, தெரியவில்லை.அப்படியே தெரிவிக்காவிட்டாலும், கல்வித்துறை அதிகாரிகளாவது, தேர்தல் அதிகாரிகளுடன்ஆலோசனை நடத்தி, இரு பணிகளும் குறுக்கிடாத அளவிற்கு, உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், எதையுமே செய்யவில்லை.
இன்று நடக்கும் தேர்தல் பயிற்சியை, தேர்வு நடக்காத, 21ம் தேதிக்கு தள்ளி வைத்தால், யாருக்கும்பாதிப்பு இருக்காது. பத்தாம் வகுப்பு தேர்வின் போதும், இதேபோன்ற குழப்பங்கள்,
பட்டதாரி ஆசிரியர்களுக்கு வரலாம். அதை தவிர்க்க, முன்கூட்டியே, கல்வித்துறை அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
Sent from my iPad
பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவருக்கான, விடைத்தாள் டாப் சீட் தைக்கும் பணி துவங்கியது.
தகவல் தொழில்நுட்பம் : தேர்வில் எவ்விதகுளறுபடியும் வரக்கூடாது என்பதற்காக, தேர்வர்கள், ஹால்டிக்கெட் பெறுவதில் இருந்து, தேர்வு முடிவு வரை, தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தேவையானநடவடிக்கைகளை தேர்வுத்துறை மேற்கொண்டு வருகிறது. விடைத்தாளில்,ரகசிய குறியீடு எண், தேர்வர் போட்டோ, 40 பக்க விடைத்தாளை தைத்து கொடுத்தல், சீரியல் எண் உள்ளிட்டமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதனால், நடப்பு கல்வியாண்டு தேர்வில், எவ்வித குழப்பமும் இல்லாமல் தேர்வு நடந்து வருகிறது. தேர்வர்களுக்கு வழங்கப்படும், விடைத்தாளில், 38 பக்கம்விடைகளை எழுதுவதற்கும், இரண்டு பக்கம், இரண்டு பக்கம், மதிப்பெண்கள் விவரங்களுக்காகவும் கொடுக்கப்படுகிறது. விடைத்தாள் டாப் சீட் சம்பந்தப்பட்ட,தேர்வு மையத்தில், தையல் மிஷின் மூலமாக தைக்கப்பட்டு, தேர்வர்க்கு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், வரும், 26ம் தேதி துவங்க உள்ள, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விலும், பிளஸ் 2 தேர்வில்பின்பற்றிய முறையை, தேர்வுத்துறை பின்பற்ற வுள்ளது. அதில், விடைத்தாளுக்காக 30 பக்கம் - 28 பக்கம், விடைகளை எழுதுவதற்காகவும், இரண்டு பக்கம், மதிப்பெண்கள் விவரங்களுக்காகவும் மாணவர்களுக்கான விதிமுறைகளை குறிப்பிடவும் ஒதுக்கப்பட்டுள்ளது .
மூன்று பகுதியாக உள்ள, டாப் சீட், (முதல் பக்கத்தில், "ஏ' பகுதி தாளில்,தேர்வரின் பதிவு எண், பார் கோடு, பெயர், மையம், பள்ளி, குரூப், பாடம், பிறந்த தேதி ஆகிய விவரங்கள்உள்ளன. "பி' பகுதி தாளில், பார் கோடு, விடைத்தாள் திருத்தும் உதவி தேர்வாளர், கூர்ந்தாய்வு அலுவலர்,தலைமை தேர்வாளர், சரிபார்ப்பு அலுவலர் ஆகியோர் கையொப்பம் இடும் பகுதி உள்ளது.
தையல் மிஷின் மூலம்... :
"சி' பகுதி தாளில், பேட்ச் எண், சீரியல் எண், பாக்கெட் எண், பார் கோடு ஆகிய
விவரங்கள் பதிவு செய்ய வேண்டும். "ஏ' பகுதி சீட்டை, தேர்வு எழுதும் மைய அதிகாரியும், "பி' பகுதி தாளை,விடைத்தாள் திருத்தும் மைய அதிகாரியும் எடுத்துக் கொள்வர், "சி' பகுதி தாளை, விடைத்தாளிலேயேதைக்கப்பட்ட நிலையில் இருக்கும். தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டு, மதிப்பெண் தொடர்பான எந்த விவகாரமாக இருந்தாலும், "ஏ' பகுதி தாளில் உள்ள, பார்கோடு மூலம், "சி' பகுதி தாளை அடையாளம் கண்டு,விடைத்தாளை எடுத்து சரிபார்க்க முடியும். பத்தாம் வகுப்பு தேர்வு மையங்களுக்கு, நேற்று முன்தினம், விடைத்தாள் கட்டு அனுப்பப்பட்டது. அவை, நேற்று, தையல் மிஷின் மூலம், 30 பக்கம் கொண்ட விடைத்தாள்கட்டாக தைக்கப்பட்டது. "பிளஸ் 2 தேர்வரை காட்டிலும், பத்தாம் வகுப்பு தேர்வருக்கு, 10 பக்கம்குறைத்து வழங்கப்படும்' என, கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, வரும், 26ல்துவங்கி, அடுத்த மாதம், 9ல் நிறைவடைகிறது. இந்தத் தேர்வை, மாநிலம் முழுவதும், 10.5 லட்சம் மாணவ,மாணவியர் எழுத உள்ளனர்.
பத்தாம் வகுப்பு , "தட்கல்' :இன்று முதல், 22 வரை, செய்முறை தேர்வு
முதுகலை பட்டத்திற்கு பின் பிளஸ் 2:வேலை வழங்க சென்னைஉயர்நீதி மன்றம் உத்தரவு Detailed news
வழங்க, பரிசீலிக்க வேண்டும்' என, சென்னைஉயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கு,தருமபுரி மாவட்டத்தச் சேர்ந்த கனிமொழிஎன்பவர், விண்ணப்பித்தார். கடந்த ஆண்டு, ஜூலையில், எழுத்து தேர்வு நடந்தது. சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின்,முறையான வரிசைப்படி, கல்வி பயிலவில்லை' என கனிமொழியின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பின், பிளஸ் 2 படிப்பில், கனிமொழி, தோல்வியுற்றார். அதன்பின், சென்னை பல்கலைக்கழகத்தின், திறந்தெவளி பல்கலையில், பி.ஏ., தமிழ் பட்டம் பெற்று, ரெகுலர் படிப்பில், பி.எட்., பட்டமும் பெற்றார். பின்,அண்ணாமலை பல்கலையில், ரெகுலர் படிப்பில்,எம்.ஏ., பட்டம் பெற்றார்.இதன் பின், பிளஸ் 2 தேர்வை, தனியாக எழுதி,
தேர்ச்சி பெற்றார். 'பட்டப்படிப்பு முடிப்பதற்கு முன், பிளஸ் 2 முடிக்காததால், ஆசிரியர் பணிக்கு பரிசீலிக்க வில்லை' என, ஆசிரியர் தேர்வு வாரியம் தரப்பில் கூறப்பட்டது.
வாரியத்தின் முடிவை எதிர்த்தும், முதுகலைஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுத்து, நியமிக்க
வேண்டும் எனக்கோரி, உயர்நீதி மன்றத்தில், கனிமொழி, மனுத்தாக்கல் செய்தார்.
கனிமொழி சார்பில், வழக்கறிஞர், தாட்சாயணிரெட்டி ஆஜரானார்.
மனுவை, விசாரித்த நீதிபதி, நாகமுத்து பிறப்பித்த உத்தரவு:
ஏற்கனேவ, ஜோசப் இருதயராஜ் என்பவர் தொடுத்த வழக்கில், 'பட்டப்படிப்பு முடித்தபின், பிளஸ் 2 படித்ததை, பரிசீலிக்கலாம்' என, இரண்டுநீதிபதிகள் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது. எனேவ, கனி மொழியின் விண்ணப்பத்தை நிராகரித்ததை ஏற்க முடியாது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உத்தரவு, ரத்துசெய்யப்படுகிறது. சான்றிதழ் சரிபார்ப்புக்குப்
பின், மனுதாரர் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், முதுகலை ஆசிரியர் பணியில் நியமிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம், பரிசீலிக்க வேண்டும்.நான்கு வாரங்களுக்குள், இறுதி உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு, நீதிபதி நாகமுத்து உத்தரவிட்டு உள்ளார்.
புதன், 19 மார்ச், 2014
20.03.14 MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் தேர்வு ,ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்
GROUPING MATTERS
~~~~~~~~~~~~~~~~
1.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.25 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 06.02.2014 (REG. TET RELAXATION OF 5% MARKS IN VARIOUS COMMUNITIES
2 WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD
(REG. P.G. ASSISTANT IN TAMIL)
3 WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD
(REG. P.G. ASSISTANT various subjects )
4.WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD [FOR RECRUITMENT] CHELLENGING KEY ANSWERS 2013.BATCHES
1.GRADUATE ASSISTANT -
2. B.T. ASSISTANT
3. SECONDARY GRADE ASSISTANT
Sent from my iPad
பகுதி நேர பொறியியல் படிப்புகளில் சேரஇன்று முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
2014-15ஆம் கல்வி ஆண்டில் பகுதி நேர பொறியியல் படிப்புகளில் சேரஇன்று முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
சென்னை, கோவை உட்பட 10 இடங்களில் மார்ச் 19ம் தேதி முதல் ஏப்ரல் 4ம்
தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. சென்னையில் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்திலும், நெல்லை,கோவை, சேலம், வேலூர் அரசு பொறியியல் கல்லூரிகலும் விண்ணப்பங்கள்வழங்கப்படுகின்றன.
கோயம்பத்தூர் இன்டிஸ்டியுட் ஆப் டெக்னாலஜி கல்லூரியிலும்,காரைக்குடியில் அழகாப்பா செட்டியார் பொறியியல் கல்லூரியிலும்விண்ணப்பங்களைப் பெறலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பி வைக்க ஏப்ரல் 7ம்தேதி கடைசி நாளாகும். விண்ணப்பித்த தகுதி உள்ள மாணவர்களுக்கு மே மாதம் கலந்தாய்வு நடைபெறும்.
ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வுக்கு இணையதளத்தின் வாயிலாகஇன்று முதல் விண்ணப்பிக்கலாம்
மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஜுன் 8ம் தேதி நடைபெறஉள்ளது. இந்த நுழைவுத் தேர்வில் பங்கேற்க, புதுச்சேரி ஜிப்மர் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தின் வாயிலாக இன்று முதல் மே 2ம்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி, விடாமுயற்சி தருமே வெற்றி !
அவர்களது வாழ்க்கையில் இருந்து நமக்குப் புலனாவது என்ன? அவர்கள் கடமைக்காக மனப்பாடம் செய்யவில்லை. படிப்பதை மிகுந்த ஆர்வத்துடன் உற்சாகமாகச் செய்கிறார்கள். 'நமக்குதான் நல்ல நினைவுத்திறன் இருக்கிறதே' என்று அலட்சியமாக இருந்துவிடாமல் கடும் முயற்சியும் பயிற்சியும் செய்கிறார்கள். எனவே, பாடங்களைப் படிக்கும்போது அதை ஒரு சுவாரஸ்யமான பயிற்சியாகச் செய்யத் தொடங்குங்கள். தொடர்ச்சியாகச் செய்யுங்கள். கணினியில் எவ்வளவோ விளையாடுகிறோம். அதுபோல நினைத்துச் செய்யுங்கள்.
கொஞ்சம் நெனச்சி பாருங்க...
நூற்றுக்கணக்கான எண்களை சேமித்து வைத்துக் கொள்ளலாம் என்பது விஞ்ஞான வளர்ச்சிதான். ஆனால், அதன் காரணமாக நாம் நமது நினைவுத் திறனை கொஞ்சம் கொஞ்சமாக மழுங்கடித்துக் கொண்டு வருகிறோம். எத்தனை பேருடைய தொலைபேசி எண்கள் நமக்கு நினைவில் இருக்கிறது?
ஒரு சதுர செ.மீ. அளவுள்ள ஒரு மெமரி கார்டை 1.36 கிலோ மூளைக்கு மாற்றாகப் பயன்படுத்துகிறோம். ஆனால் ஜிபி(GB)க்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட அருமை யான சாதனம் நம் மூளை. திவ்ய பிரபந்தப் பாடல்கள் நாலாயிரம், குர்ஆன், பைபிள் என்று மனப்பாடமாகச் சொல்பவர்கள் பலரைப் பார்க்கிறோம். நினைவுத் திறனில் மட்டும் இவ்வளவுதான் நம் எல்லை என்று வைத்துக்கொள்ளாதீர்கள். பயிற்சி செய்தால் அலாவுதீன் பூதம்போல, மூளை நமக்கு கைகட்டி சேவகம் செய்யும். சின்னச் சின்னப் பயிற்சிகளாகத் தொடங்குங்கள். தெருவில் போகும்போது வரும் கடையின் பெயர்களை எல்லாம் நினைவில் வைத்துக்கொள்ளப் பழகுங்கள். 10 கடைகள் வந்ததும் வரிசையாக நினைவுபடுத்துங்கள். கொஞ்சம் பழகியபின் 20 கடைகள் ஆக்குங்கள். நடந்து செல்லும்போது இது வேண்டாம். கடை போர்டை பார்த்துக்கொண்டே யார் மீதாவது முட்டிக்கொள்ள நேரிடும். சைக்கிளில் அல்லது டூவீலரில் பின்னால் உட்கார்ந்து போகும்போது செய்வது நல்லது. செய்தித் தாள் படிக்கும்போதே செய்தியில் இடம் பெற்றிருப்பவர்களின் பெயர்கள், வயது, சம்பவம் நடந்த தேதி என்றெல்லாம் படித்துப் பழகலாம்.
இணையத்தில் எல்லா தகவல்களும் கொட்டிக் கிடக்கின்றன. தமிழகத்தின் 39 மக்களவை உறுப்பினர்களின் பெயரைப் படிக்கலாம். அதன்பிறகு 234 சட்டமன்ற தொகுதிகள். தனிம அட்டவணை (PERIODIC TABLE), எண்களுடன் திருக்குறள்கள் என்று எத்தனையோ இருக்கின்றன. கொஞ்சம் போரடித்தால் ஏதேனும் ஒரு வருடத்தில் வெளிவந்த திரைப்படங்களின் இயக்குநர், இசையமைப்பாளர் பெயர்களை நினைவில் வைத்துப் பழகலாம். பாடல் வரிகளை முழுமையாக மனப்பாடம் செய்து பாடலாம். வெறும் தகவல்களாக மனப்பாடம் செய்வதைவிட ஒரு விஷயத்தைப் பற்றி அதிகமான விவரங்களைப் படியுங்கள். உதாரணமாக ஐன்ஸ்டைனின் கோட்பாடுகள், அதை அவர் கண்டுபிடித்த வரலாறு , அதற்காகப் பட்ட கஷ்டங்கள், அவரது வளர்ச்சி என்று பல விவரங்களைப் படித்தால் ஐன்ஸ்டைன் பற்றிய தகவல்கள் ஒரு தொகுப்பாக நினைவில் நிற்கும். ஆனால் இவை நீண்டகாலப் பயிற்சி. தினமும் செய்துவந்தால்தான் தேர்வு நேரத்தில் பலன் தரும். அதை விட்டுவிட்டு, தேர்வுக்கு முந்தைய நாள் சச்சின் அடித்த ஸ்கோர்களை மனப்பாடம் செய்யப் போகிறேன் என்று உட்கார்ந்தால் க்ளீன் போல்டாகி விடுவோம்.
Sent from my iPad
சிலர் வரலாற்றில் இடம்பெறுவார்கள், சிலர் வரலாற்றை உருவாக்குவார்கள்...
தன் குடும்பத்துக்கென்று எதையும் வைக்காமல், அவ்வளவு சொத்துகளையும் கட்சிக்குக் கொடுத்துவிட்டு, கட்சி கொடுத்த ஓர் அறையில் காலமெல்லாம் வாழ்ந்து மறைந்தார் அந்த மனிதர்.
தான் விரும்பும் மாற்றத்தைத் தன்னிடத்திலிருந்து தொடங்கியவர் இ.எம்.எஸ். தன் பள்ளிப் பருவத்தில் குடுமியை எடுத்தவர், கல்லூரிப் பருவத்தில் பூணூலை அறுத்தெறிந்தார். 'நம்பூதிரி இளைஞர் சங்க'த்தின் தலைவர்களில் ஒருவராக இருந்த அவர், இத்தகைய சீர்திருத்தத்தை மற்றவர்களும் கடைப்பிடிக்க வற்புறுத்தினார். இதுகுறித்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று உண்டு.
சென்னைச் சிறையில் இருந்தபோது இ.எம்.எஸ். பூணூல் அணியாததைப் பார்த்த, அப்போது அவருடன் சிறையில் இருந்த காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, இ.எம்.எஸ்-ஸுக்குப் பூணூல் ஒன்றை அளித்திருக்கிறார். அந்தப் பூணூலை வாங்கிய இ.எம்.எஸ். பிராமணர் அல்லாத ஒரு தண்டனைக் கைதியிடம் கொண்டுபோய்க் கொடுத்தார்.
நாடு முழுவதும் திரண்ட விடுதலைப் போராட்டத்தின் எழுச்சி, தோழர் இ.எம்.எஸ்-ஸையும் இழுத்தது. 1932-ல் கல்லூரியை விட்டு வெளியேறி, காந்தி அறைகூவல் விடுத்த உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்றார். அப்போது ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருக்க நேர்ந்தது. வரலாற்றுத் துறை மாணவரான
இ.எம்.எஸ். கல்லூரியை விட்டு வெளியேறியபோது, அவரது பேராசிரியர் "நீ வரலாற்று மாணவன் மட்டுமல்ல; வரலாற்றை உருவாக்க வேண்டியவன்" என வாழ்த்தியிருக்கிறார். 1927-ல் சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி மாநாட்டில் இ.எம்.எஸ். பங்கேற்றார். பூரண சுதந்திரம் வேண்டும் என்ற தீர்மானத்தை ஆதரித்தவர்கள் பக்கம் இ.எம்.எஸ். நின்றார்.
காந்தியால் கவரப்பட்டு, சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று ஒன்றரை வருடச் சிறை வாழ்க்கைக்குப் பிறகு விடுதலையாகி வெளியே வந்தவர், இரண்டு வருடக் குடும்ப வாழ்க்கைக்குப் பிறகு மீண்டும் அவர்மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதை அறிந்து தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டார்.
தலைமறைவுக் காலம் கற்றுக்கொடுத்த வாழ்க்கை
சுமார் ஆறாண்டுக் காலம் இ.எம்.எஸ். தலைமறைவு வாழ்வை மேற்கொண்டார். ஆசார அனுஷ்டானங்களில் நியதிகளைக் கடைப்பிடித்து வளர்ந்த பெரியதொரு பிரபுத்துவக் குடும்பத்திலிருந்து கட்சிக்கு வந்த தோழர் இ.எம்.எஸ்., தலைமறைவு வாழ்க்கையின்போது மிகச் சாதாரண வாழ்க்கையை நடத்தும் ஏழை மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், மீனவர்கள் ஆகியோரது குடிசைகளில், அவர்களுடன் இரண்டறக் கலந்து, அவர்கள் தந்த உணவை - அசைவம் உட்பட - உண்டு எந்தவித எதிர்ப்புமின்றி, கட்சி ஊழியம் செய்தார்.
அந்தக் காலகட்டத்தில் வரலாற்றையும் அரசியலையும் மார்க்ஸியக் கொள்கைகளையும் ஆழமாக அலசத் தொடங்கிய இ.எம்.எஸ்., மெல்ல மெல்ல காந்தியிட மிருந்து விலகி, புதிய பாதையைத் தேர்ந்தெடுத்தார். அப்போது தலித் மக்களுடன் வாழ்ந்ததுதான் தன் வாழ்வில் பெரிய தாக்கத்தை உருவாக்கிய நாட்கள் என்று அவரே தனது சுயசரிதையில் குறிப்பிடுகிறார்.
சுதந்திரத்துக்காக ஆவேசமாக காந்தி போராடினாலும், சமுதாயச் சீர்திருத்தத்தில் அவருடைய பங்களிப்பு போதாது என்று இ.எம்.எஸ். கருதினார். இதனால் காந்தியிடமிருந்தும் நேருவிடமிருந்தும் விலகி, ஜெயப் பிரகாஷ் நாராயணன் தலைமையிலான காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியில் இணைந்தார். 1936-ல் தோழர் இ.எம்.எஸ்-ஸை கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்த்த பெருமை தோழர் சுந்தரய்யாவைச் சாரும்.
தோழர் இ.எம்.எஸ். யாரும் நம்ப முடியாத அளவுக்குப் பரந்த வாசிப்பு உள்ளவர். படித்ததைப் போலவே எல்லாத் துறைகளைப் பற்றியும் எழுதிக் குவித்தார். அவருடைய எழுத்துகள் 100 தொகுதிகளாக வெளிவந்துள்ளன.
1937-ல் மலபார் பகுதியிலிருந்து தேர்வுசெய்யப்பட்டு சென்னை ராஜதானியில் சட்டமன்ற உறுப்பினரானார். (தமிழக சட்டமன்றத்தில் முன்னோடி உறுப்பினர்களில் இ.எம்.எஸ்-ஸும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது) சென்னையைத் தலைநகரமாகக் கொண்ட அன்றைய அரசு மலபார் விவசாயிகள் பிரச்சினைபற்றி ஆய்வு செய்து அறிக்கை அளித்திட அமைக்கப்பட்ட 19 பேர் கொண்ட வல்லுநர் குழுவில் தோழர் இ.எம்.எஸ்ஸும் இடம்பெற்றிருந்தார்.
இந்தக் குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் அளித்த அறிக்கைக்குத் தனது மாற்றுக் கருத்தை ஒரு குறிப்பாக அளித்தார். (அன்றைய விவசாயிகள் நிலைமையும், அதற்கு இ.எம்.எஸ். அளித்த தீர்வையும் இப்போதும் பேராசிரியர்கள் பாராட்டுகிறார்கள். அவர் அளித்த தீர்வு, எதிர்காலத்தில் தேசம் தழுவிய விவசாயிகள் இயக்கங்களின் முழக்கங்களாக மாறின.)
தோழர் இ.எம்.எஸ். தான் வாழ்ந்த காலத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் நிலவிய வரலாற்றுச் சூழலைத் தாண்டிச் சிந்தித்தவர். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, மொழிவழி மாநிலப் பிரிவினைக் கோரிக்கைகள் எழுந்தபோது, 'ஐக்கிய கேரளம்' நூலை இ.எம்.எஸ். எழுதினார். தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் என மொழிவழி மாநிலங்கள் அமைவதற்கு வித்திட்ட பல முன்னோடிகளில் தோழர் இ.எம்.எஸ்-ஸும் ஒருவர்.
நாட்டின் முதல் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி
1957-ல் நாட்டின் முதல் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி இ.எம்.எஸ். தலைமையில் கேரளத்தில் அமைந்தது. 28 மாதங்களே நீடித்த இந்த ஆட்சியின் குறுகிய காலத்தில், உபரி நில விநியோகம், குத்தகை விவசாயிகளின் நில வெளியேற்றத் தடுப்பு, குடியுரிமைப் பாதுகாப்பு (மனைப்பட்டா), கல்வியளிப்பதில் அரசின் பங்களிப்பை உறுதிப்படுத்துதல், பரந்துபட்ட சுகாதார அடிப்படைக் கட்டமைப்பை நிறுவுதல் போன்ற பல திட்டங்களைக் கொண்டுவந்தார்.
கல்வி, சுகாதாரம், பிறப்பிலேயே இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறைப்பது போன்ற மனிதவள மேம்பாட்டுக் குறியீடுகளில் இன்றும் கேரளம் முதலிடத்தில் இருப்பதற்குத் தோழர் இ.எம்.எஸ்-ஸின் பங்களிப்பு முக்கியமானது.
கட்சி பெரிதா, தனிநபர் பெரியவரா?
தோழர் இ.எம்.எஸ். இரு முறை முதல்வராக இருந்திருக்கிறார். தவிர, கட்சியின் பொதுச் செயலாளராக 10 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். ஆனால், என்றைக்குமே தான் என்ற செருக்கோ அகங்காரமோ அவரிடம் வெளிப்பட்டது இல்லை. ஒரு சின்ன உதாரணம், அவர் முதலமைச்சராக இருந்தபோது, கேரள அரசு நிறைவேற்றிய ஒரு சட்டத்தில் தவறு இருந்தது பின்னர் தெரியவந்தது. இதற்காகக் கட்சியின் அரசியல் தலைமைக் குழு அவரைப் பகிரங்கமாகக் கண்டித்தது.
அவர் டெல்லியிலிருந்து கூட்டம் முடிந்து திருவனந்தபுரம் வந்தபோது அவர்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைபற்றி பத்திரிகையாளர்கள் கேட்டபோது, தவறு நடந்த துறைக்கான அமைச்சர் அவர் இல்லை என்றாலும், ஒரு முதல்வராகத் தவறுக்குப் பொறுப்பேற்றுக்கொண்ட அவர், "என் கட்சியே என்னைக் கண்டிக்காவிட்டால் வேறு யார்தான் என்னைச் சரிசெய்ய முடியும்?" என்று கேட்டார்.
வாழ்நாள் சாதனை
அவருடைய கடைசிக் காலத்தில் அவரைச் சந்தித்த பத்திரிகையாளர் ஒருவர், ''உங்களுடைய வாழ்க்கையின் சாதனையாக எதைக் கருதுகிறீர்கள்?" என்று கேட்டபோது, "ஒரு சனாதன ஜமீன் குடும்பத்தில் பிறந்த என்னைப் பின்னாளில், பாட்டாளி வர்க்கம் தன் தத்துப்பிள்ளையாக ஏற்றுக்கொண்டதையே வாழ்நாள் சாதனையாகக் கருதுகிறேன்" என்று குறிப்பிட்டார் இ.எம்.எஸ். ஊழலும் யதேச்சதிகாரமும் அரசியல் யதார்த்தம் ஆகிவிட்ட சூழலில் வாழ்கிறோம். ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணராக வழிகாட்டுகிறார் தோழர் இ.எம்.எஸ்.
Sent from my iPad
புகையில்லா வாகனம்!பெங்களூரில் 100 சதவீதம் மின்சாரத்தில் இயங்கும் பஸ் !
எரிபொருட்களின் விலையும், வாகனங்கள் வெளியேற்றும் புகையும் எதிர்கால சந்ததியினரின் வாழ்வாதாரத்திற்கே வேட்டுவைக்கின்றன. இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், இந்தியாவிலேயே முதல்முறையாக பெங்களூரில் 100 சதவீதம் மின்சாரத்தில் இயங்கும் பஸ் (எலக்ட்ரிக் பஸ்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முற்றிலும் புகையே இல்லாமல், குறைந்த ஒலியுடன் வலம்வரும் இந்த பஸ் மக்களுக்கு மட்டுமில்லாமல் சுற்றுச்சூழலுக்கும் உற்ற நண்பனாக மாறிவிட்டது. அதுமட்டுமில்லாமல் குறைந்த செலவில் அதிக லாபத்தையும் ஈட்டித் தரும் என்று பெங்களூர் மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவிக்கிறது. எனவே கர்நாடக அரசு இன்னும் நிறைய மின்சார பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளது.
சீன பேருந்து நிறுவனமான 'BYD' உருவாக்கி இருக்கும் இந்த மின்சார பஸ்ஸின் சாதக பாதகங்களை ஆராய 3 மாதங்கள் ஒத்திகைக் கால அளவு வகுக்கப்பட்டிருக்கிறது. .
புகையில்லா வாகனம்!
பெங்களூரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களும், தொழிற்சாலைகளும் வெளியிடும் கரும் புகையால் நகரின் சுற்றுச்சூழல் கேள்விக்குறியாகியுள்ளது. இன்னொரு பக்கம் இந்தியாவின் பிற நகரங்களைக் காட்டிலும் பெங்களூரில் அதிக ஒலி மாசுபாடு ஏற்பட்டிருக்கிறது.
எனவே புகையை வெளியேற்றாத மின்சார வாகனங்களைப் பயன்படுத்த கர்நாடக அரசு திட்டமிட்டது. இதன் தொடக்கமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவிலேயே முதல்முறையாக பெங்களூரில் 'மின்சார பஸ்' அறிமுகம் செய்யப்பட்டது. முழுவதும் மின்சாரத்தால் இயங்கும் இந்த பஸ்ஸில் இருந்து புகை முற்றிலும் வெளிவருவதில்லை.
அதிநவீன பஸ்
மற்ற பஸ்களைக் காட்டிலும் மின்சார பஸ்ஸில் பல்வேறு அதிநவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக பஸ்ஸின் முன் பக்கம், பின்பக்கம் என 2 பக்கங்களிலும் 2 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் பேருந்தில் இருக்கும் பயணிகளை பாதுகாக்கவும், விபத்துகளில் இருந்து தப்பிக்கவும் முடியும். அதே போல ஒவ்வொரு இருக்கைக்கும் தனித்தனியே டிவி, இணையதள வசதி செய்யப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு அடுத்த நிறுத்தத்தை அறிவிக்கும் எல்.இ.டி. அறிவிப்புப் பலகையும், ஒலிபெருக்கியும், மின்சாரத்தின் மூலம் இயங்கும் கதவுகளும் இருக்கின்றன. 31 இருக்கைகள் மட்டுமே இந்த பஸ்ஸில் உள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு இருக்கைகள் இதில் உள்ளன.
மின்சார பஸ்ஸில் இன்ஜின் ஆயில், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எதுவும் தேவைப்படாது. அதே வேளையில் மற்ற வாகனங்கள் எழுப்பும் ஒலியை காட்டிலும் குறைந்த அளவிலான ஒலியை மட்டுமே மின்சார பஸ் எழுப்புகிறது. மேலும் இந்திய சாலைகளுக்கு ஏற்ற வகையில் இந்த பஸ் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் மேடு,
பள்ளங்களில் அதிகம் குலுங்காமல் பயணிக்க முடியும். மேலும் விபத்தின் போது தப்பிக்கும் வகையில் அவசரகால கதவுகளும் பொருத்தப்பட்டிருக்கிறது.
எல்லா வகையிலும் சிறந்த வாகனம்
இந்த பஸ்ஸில் 540 வோல்ட் பேட்டரி (மின்கலம்) பயன்படுத்தப்பட்டுள்ளது. 6 மணி நேரம் இந்த பேட்டரியை சார்ஜ் செய்தால் 250 கி.மீ. தூரம் பயணம் செய்யமுடியும். 3 மணி நேரம் பேட்டரியை சார்ஜ் செய்தால் தாராளமாக 100 கி.மீ. பயணிக்கலாம். அதிகபட்சமாக 96 கி.மீ. வேகத்திலும், சராசரியாக 60-65 கி.மீ. வேகத்திலும் செல்லலாம். மின்சாரம் இல்லாத மின்வெட்டு நாட்களில் சோலார் பேனல்களின் மூலம் மின்சாரம் பெறும் வசதியும் உள்ளது.
பேட்டரியால் ஏற்படும் விபத்தை முற்றிலும் தவிர்க்கும் வகையில் அயர்ன் (iron battery) பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேருந்தின் விலை ரூ.2.7 கோடி. இந்தியாவில் பயன்படுத்தப்படும் பேருந்துகளை விட விலை அதிகமாக இருப்பினும், இது அரசிற்கு அதிக லாபத்தை வழங்கக்கூடியது. ஏனென்றால் எரிபொருட்களை பயன்படுத்தும் பஸ்ஸில் 1 கி.மீ. தூரத்திற்கு 18 ரூபாய் செலவாகிறது. ஆனால் இந்த பஸ்ஸில் 1 கி.மீ. தூரத்திற்கு 7 ரூபாய் மட்டுமே செலவு ஆகிறது.
முழுவதும் குளிர்சாதனம் செய்யப்பட்ட இப்பேருந்தில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.15-ம் அதிகபட்ச கட்டணமாக ரூ.80-ம் வசூலிக்கப்படுகிறது.