புதன், 30 ஏப்ரல், 2014

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு, மே 1 முதல் ஜூன் 1ம் தேதி வரை,கோடை விடுமுறை

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு, மே 1 முதல் ஜூன் 1ம் தேதி வரை,
கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, சென்னை உயர் நீதிமன்ற
பதிவாளர் ஜெனரல், கலையரசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு, மே 1 முதல் ஜூன் 1ம் தேதி வரை, கோடை விடுமுறை.விடுமுறை காலத்தில், அவசர வழக்குகளை விசாரிக்கும் வகையில், விடுமுறை கால நீதிமன்றங்களுக்கான நீதிபதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
மே 1 முதல் மே 11 வரை, நீதிபதிகள் சுதாகர், சசிதரன், ஆகியோர் இணைந்து, 'டிவிஷன் பெஞ்ச்' வழக்குகளை விசாரிப்பர். பின், தனியாக அமர்ந்து,இதர வழக்குகளை விசாரிப்பர். நீதிபதி கர்ணன், ஜாமின் உள்ளிட்ட வழக்குகளை விசாரிப்பார்.
மே 12 முதல் மே 18வரை, நீதிபதிகள் மணிக்குமார், சிவஞானம், வாசுகி ஆகியோரும்;
மே 19 முதல் மே 25 வரை, நீதிபதிகள்சுந்தரேஷ், ரவிச்சந்திரபாபு, மகாதேவன் ஆகியோரும்;
மே 26 முதல் ஜூன் 1 ம் தேதி வரை, நீதிபதிகள்அருணா ஜெகதீசன், வைத்தியநாதன், சொக்கலிங்கம் ஆகியோரும் விசாரிப்பர்.
சென்னை உயர்நீதிமன்ற,மதுரை கிளையின் விடுமுறை கால நீதிமன்றங்கள் குறித்த அறிவிப்பு, தனியாக வெளியிடப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்து உள்ளார்.