திங்கள், 14 ஜூலை, 2014

தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ :2 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்

தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ 2 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.ஜூலை 7 முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற்ற தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ கலந்தாய்வு முடிவடைந்தநிலையில், தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சுமார் 10 ஆயிரம்அரசு ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக உள்ளன.

தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படிப்பில் சேருவதற்கான
கலந்தாய்வு ஜூலை 7 முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற்றது. 29 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் 8 அரசு ஆசிரியர்பயிற்சி நிறுவனங்களில் 2,600 இடங்கள், 454 தனியார் ஆசிரியர்பயிற்சி நிறுவனங்களில் அரசு ஒதுக்கீட்டுக்கான 10 ஆயிரம் இடங்கள், 42அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 1,600 இடங்கள் என 14ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் கலந்தாய்வில் இருந்தன. ஆனால், இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க 4,520 பேர்மட்டுமே விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 2,400 பேர்மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்றனர். சுமார் 2,200 பேர் படிப்புகளில்சேர்ந்துள்ளனர்.
இந்தக் கலந்தாய்வில் பங்கேற்ற பெரும்பாலானோர் மாவட்ட மற்றும்அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களையே தேர்ந்தெடுத்தனர். அரசு ஆசிரியர்பயிற்சி நிறுவனங்களில் 2,176 பேர் சேர்ந்துள்ளனர். 424 இடங்கள்மட்டுமே இதில் காலியாக உள்ளன. திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில்அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் அனைத்து இடங்களும்நிரம்பிவிட்டன. வட மாவட்டங்களில் சில இடங்கள் மட்டுமே காலியாகஉள்ளன.
தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் அரசு உதவிபெறும்ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் கலந்தாய்வின் மூலம் 50 இடங்கள்மட்டுமே நிரம்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் பெரும்பாலும்தங்களது ஊர்களுக்கு அருகில் உள்ள பிளஸ் 2 முடித்த மாணவர்களை நிர்வாகஒதுக்கீட்டுப் பிரிவில் சேர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன. கடந்தஆண்டு சுமார் 6 ஆயிரம் பேர் நிர்வாக ஒதுக்கீட்டுப் பிரிவுகளில் சேர்ந்தனர்.இந்த ஆண்டு ஏறத்தாழ அதே எண்ணிக்கையிலான மாணவர்கள் இவற்றில்சேருவார்கள் என எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 50 சதவீத இடங்கள்அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
காரணம் என்ன?: தொடக்கக் கல்வி ஆசிரியர்பயிற்சி டிப்ளமோ முடித்தவர்கள் இடைநிலை ஆசிரியர்களாக அரசு மற்றும்தனியார் பள்ளிகளில் பணி நியமனம் பெற முடியும். தமிழகம் முழுவதும்ஏற்கெனவே 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தடிப்ளமோ படிப்பை முடித்து வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் இடைநிலை ஆசிரியர்பணியிடங்களில் காலியிடங்கள் அதிகமாக இப்போது ஏற்படுவதில்லை.
அரசு வேலைக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளதால், மிகக் குறைந்தஎண்ணிக்கையிலான மாணவர்களே ஆசிரியர் டிப்ளமோ படிப்பில் சேர ஆர்வம்காட்டுவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தவழக்கு முடிவுக்கு வந்ததையடுத்து, இதுவரை மாநில அளவிலானபதிவு மூப்பின் அடிப்படையில் இருந்த இடைநிலை ஆசிரியர் பணி நியமனம்இனி வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் நடைபெற உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக