திங்கள், 14 ஜூலை, 2014

அனுமதி பெறாமல், எம்.பில்., படிக்கும்,முதுகலை ஆசிரியர்கள் பெயர் பட்டியலை அனுப்பும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது.

அனுமதி பெறாமல், எம்.பில்., படிக்கும்,முதுகலை ஆசிரியர்கள் பெயர் பட்டியலை அனுப்பும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது.
கல்வித் துறை அதிகாரிகளின் அனுமதி பெறாமல், எம்.பில்., படிக்கும்,முதுகலை ஆசிரியர்கள் குறித்த, பெயர் பட்டியலை அனுப்பும்படி, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல், எம்.பில்., படித்து வருகின்றனர். இதை,இவர்களது பணி பதிவேட்டில் சேர்ப்பதிலும், அடிப்படை சம்பளத்தில், 3 சதவீதம் உயர்த்துவதிலும்சிக்கல் உள்ளது.புகாரை அடுத்து, இவர்களது பெயர் பட்டியலை தயாரித்து அனுப்பும்படி, , அனைத்து மாவட்டமுதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.. உத்தரவில், 'முதுகலை ஆசிரியராக பணிபுரிபவர் எம்.பில்., படிக்க வேண்டுமானால், அவர் பணிபுரியும்பள்ளியின் தலைமை ஆசிரியர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.முறையான அனுமதி பெறாமல், எம்.பில்., படிப்பவர்களின் பெயர் பட்டியலை தயாரித்து அனுப்ப வேண்டும்.அவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக