புதன், 9 ஜூலை, 2014

TNTET- 10 நாளில் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்?

TNTET- 10 நாளில் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்?
,

தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர்பட்டியல் 10 நாளில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில்இருந்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டோர் பட்டியலை ஆசிரியர்
தேர்வு வாரியம் இன்னும் 10 நாட்களுக்குள் வெளியிட ஏற்பாடு செய்து வருகிறது.

ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக நீதிமன்றத்தில் பல வழக்குகள் இருந்தன. அந்த வழக்குகள் சமீபத்தில்முடிவடைந்துவிட்டன. இதைத்தொடர்ந்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆள் தேர்வு செய்யும்பணி நடைபெற்றுவருகிறது.

யார் அதிக மதிப்பெண் பெற்றிருக்கிறார்களோ அவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த
பணி விரைவில் முடிவடைந்து இன்னும் 10 நாட்களுக்குள் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர்பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட உள்ளது. இந்த தகவலை ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

News source DAILY THANTHI

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக