புதன், 4 பிப்ரவரி, 2015

2016ம் ஆண்டிற்குள் நாட்டிலுள்ளஅனைத்து கிராம பஞ்சாயத்துக்களுக்கும்அதிவேக இணைய சேவை

''நாட்டிலுள்ளஅனைத்து கிராம பஞ்சாயத்துக்களுக்கும்அதிவேக இணைய சேவை கிடைக்க,
செயற்கைக்கோள்கள்,ஆளில்லா விமானங்கள் மற்றும்சிறப்பு பலூன்களை பயன்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது,'' என,தொலை தொடர்புத் துறை அமைச்சர்
ரவிசங்கர் பிரசாத் கூறினார்.டில்லியில்,
'டிஜிட்டல் இண்டியா' என்றமாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற, அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்கூறியதாவது: நாட்டில், 2.5 லட்சம் கிராமங்கள் உள்ளன.இவை அனைத்திற்கும், 2016ம் ஆண்டிற்குள், 30 ஆயிரம்கோடி ரூபாய் செலவில், அதிவேக இணைய சேவை கிடைப்பதற்காக, 2011ம் ஆண்டில், 'நேஷனல் ஆப்டிகல் பைபர்நெட்வொர்க்' என்ற திட்டம் துவக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், நடப்பு நிதியாண்டிற்குள், 50 ஆயிரம் கிராமங்கள், 2016 மார்ச்சுக்குள், மேலும், ஒரு லட்சம்கிராமங்கள், 2016 இறுதிக்குள், மீதமுள்ள ஒரு லட்சம் கிராமங்களையும், ஆப்டிகல் பைபர் நெட்வொர்க் மூலம்இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

ஆப்டிகல் பைபர் நெட்வொர்க் மூலம் இணைக்க முடியாதகிராமங்களில், அதிவேக இணைய சேவை கிடைக்க, செயற்கைக்கோள் தொழில்நுட்பம், ஆளில்லா விமானங்கள்மற்றும் சிறப்பு பலூன்களை பயன்படுத்துவது குறித்து, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.மின்னணு பொருட்கள் உற்பத்தியைப் பொறுத்தமட்டில், மத்திய அரசால் வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும், வெளிநாட்டு நிறுவனங்கள் பெற முடியும். அதற்காக ஏராளமான சலுகைகள்அறிவிக்கப்பட்டு உள்ளன.

மேலும், மாற்றி அமைக்கப்பட்ட, சிறப்பு ஊக்கத்தொகை சலுகை திட்டத்தின் கீழ், சிறப்பு பொருளாதார
மண்டலங்களில் முதலீடு செய்வோருக்கு, 20 சதவீதமும், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அல்லாத
பகுதி களில், முதலீடு செய்வோருக்கு, 25 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது. இவ்வாறு, ரவிசங்கர் பிரசாத்கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக