திங்கள், 2 பிப்ரவரி, 2015

சமையல் காஸ் சிலிண்டர் நேரடி மானியத்திற்கு, 'ஆதார்' எண்ணை, ஏ.டி.எம்., மூலம் பதிவு செய்து கொள்ளலாம்

சமையல் காஸ் சிலிண்டர்நேரடி மானியத்திற்கு, 'ஆதார்' எண்ணை,ஏ.டி.எம்., மூலம் வங்கி கணக்குடன்இணைக்கும் திட்டத்தை, பாரத ஸ்டேட்வங்கி துவக்கியுள்ளது.
தமிழகம் உட்பட நாடு முழுவதும், காஸ் சிலிண்டர்மானியத்தை, வாடிக்கையாளர் வங்கி கணக்கில்,நேரடியாக செலுத்தும் திட்டத்தை, ஜன., 1 முதல், மத்தியஅரசு துவக்கியுள்ளது. இத்திட்டத்தில் இணைய, 'ஆதார்' அடையாள அட்டை உள்ள வாடிக்கையாளர்கள், வங்கிகளில்விண்ணப்பத்தை வழங்கி வருகின்றனர். இதனால், வங்கிகளில், கூட்டம் நிரம்பி வழிவதால், பணபரிமாற்றம் உள்ளிட்ட, ஏராளமான பணிகள் பாதிக்கப்படுகின்றன. இதையடுத்து, ஏ.டி.எம்., மையங்களில், 'ஆதார்'எண்ணை இணைக்கும் வசதியை, பாரத ஸ்டேட் வங்கி துவக்கியுள்ளது. அதன்படி, வாடிக்கையாளர், ஏ.டி.எம்.,மையத்தில், தங்களின் கார்டை செலுத்தி, அதில், தெரிவிக்கப்படும் வழிகாட்டுதலின் படி, 'ஆதார்'எண்ணை பதிவு செய்து கொள்ளலாம். பின், 'ஆதார்' இணைக்கப்பட்ட தகவல், எஸ்.எம்.எஸ்., மூலம் வாடிக்கையாளருக்கு தெரிவிக்கப்படுகிறது.
இத்திட்டத்தை, பாரத ஸ்டேட் வங்கியை பின்பற்றி, மற்ற வங்கிகளும், அறிமுகம் செய்ய இருப்பதால், வங்கிகளில்,'ஆதார்' பதிவு செய்வது சுலபமாகும் என, தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக