புதன், 11 பிப்ரவரி, 2015

TRB PG TAMIL QUESTION CLARIFICATION:மயேச்சுரர் முதலாகிய வொருசாராசிரியர் வஞ்சிப்பா இரண்டடியானும் வரப்பெறும்




 
அமிர்தசாகரனார் அருளிச்செய்த

யாப்பருங்கலக்காரிகை 
 
மூலமும்

குணசாகரர் உரையும்  
 
உள்ளே
 
44

யாப்பருங்கலக் காரிகை

 
     வழுவி நாற்சீர் நாலடியான் வருவது கலிவிருத்தம் என்றும்  தெரிந்து
உணரப்படும் எ - று.
     'வெள்ளைக் கிரண்டாம் அகவற்கு மூன்று கலிக்கடி நான்கு எள்ளப்படா
வஞ்சிப்பாவிற்கு மூன்றாம் இழிபு' என்று பாக்களை முறையிற் கூறாது தலை
தடுமாற்றமாகக் காரிகை சொல்லவேண்டிய தென்னையோ வெனில், 'தலைதடுமாற்றத்
தந்து புணர்ந்துரைத்தல்' என்பது தந்திரவுத்தியாகலின்; அது மயேச்சுரர் முதலாகிய
வொருசாராசிரியர் வஞ்சிப்பா இரண்டடியானும் வரப்பெறும் என்றாரென்பதூஉம்.
ஆசிரியப்பா இரண்டடிச் (3) சுரிதகமாய் வரப்பெறும் என்பதூஉம் அறிவித்தற்கு எனக்
கொள்க. என்னை?
 
'வெண்பா வாசிரியங் கலியே வஞ்சியெனும்
நண்பா வுணர்ந்தோர் நுவலுங் காலை
இரண்டு மூன்று நான்கு மிரண்டுந்
திரண்ட வடியின் சிறுமைக் கெல்லை'
 
என்றெடுத்து ஓதிய மயேச்சுரர் வஞ்சிச் சிறுமைக்குக் காட்டும் பாட்டு:
 
 'பூந்தண்சினை மலர்மல்கிய பொழிற்பிண்டி
வேந்தன் 2கழல் பரவாதவர் வினைவெல்லார்
அதனால்
அறிவன தடியிணை 3பரவப்
      பெறுகுவர் யாவரும் பிறவியி னெறியே.'
 
     இதனை முச்சீர் வஞ்சியாக அலகிட்டு வஞ்சிப்பா ஆசிரியச் சுரிதகத்தான் இற்று
இரண்டடியான் வந்தவாறு கண்டுகொள்க.
 
'(4) ஒருதொடை யீரடி வெண்பாச் சிறுமை
இருதொடை மூன்றா மடியி னிழிந்து
 

     (3) சுரிதகம் - கலிப்பா, வஞ்சிப்பாக்களின் ஈற்றில் வரும் உறுப்பு. நீர்ச்
சுழிபோலச் சுரிந்து முடிவதனால் சுரிதகம் எனப்படும். சுரிந்து முடிதலாவது முன் வந்த
அடியளவிற் சுருங்கி முடிதல்.

      (4) இரண் டடிகொண்டது ஒரு தொடை ஆதல்பற்றி 'ஒருதொடையீரடி, என்றார்.
தொடை - (மலர்களால்) தொடுக்கப்படும் மாலையே போல, அடிகளால்
தொடுக்கப்படுவது. மூன்றாம் அடி - மூன்றாகிய அடிகள். மேலே,' நான்காம்
 

     (பி - ம்.) 2. புகழ். 3. பரவிப்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக