வேலூர் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்துக்கு யு.ஜி.சி. 12-பி அந்தஸ்து வழங்கியுள்ளது. 12-பி அந்தஸ்து பெற்றதன் மூலம் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்துக்கு இனிமேல் யு.ஜி.சி. மற்றும்மத்திய அரசு துறைகளின் நிதியுதவி தாராளமாக கிடைக்கும்.
யு.ஜி.சி. 12-பி அந்தஸ்து
தமிழ்நாட்டில் கலை அறிவியல் படிப்புகள் தொடர்பான 12 பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன.பல்கலைக்கழகங்களில் உள்கட்டமைப்பு வசதிகள், ஆய்வகம், தேவையான பேராசிரியர்கள், ஆசிரியர்அல்லாத ஊழியர்கள், ஆராய்ச்சிப்பணிகள் உள்பட பல்வேறு கூறுகளை ஆய்வு செய்து பல்கலைக்கழகமானியக் குழு (யு.ஜி.சி.) 12-பி அந்த ஸ்தை வழங்குகிறது. யு.ஜி.சி. குழுவினர் சம்பந்தப்பட்டபல்கலைக்கழகத்துக்கு நேரில் வந்து ஆய்வு செய்த பின்னரே இந்த அந்தஸ்தை அளிப்பார்கள். ஒரு பல்கலைக்கழகம் 12-பி அந்தஸ்து பெற்றால் மட்டுமே அதற்கு யு.ஜி.சி. நிதி மற்றும மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை, மத்திய உயிரி தொழில்நுட்பத்துறை உள்ளிட்ட அமைப்புகளிடமிருந்து கட்டமைப்பு வசதிகளுக்கோ அல்லது ஆய்வு பணிகளுக்கோ நிதி உதவியை பெற இயலும்.
திருவள்ளுவர் பல்கலைக் கழகம்
தமிழ்நாட்டில் கடந்த 2002-ம் ஆண்டு வேலூரில் திருவள்ளு வர் பல்கலைக்கழகம் தொடங்கப் பட்டது.வேலூர், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங் களைச் சேர்ந்த கல்லூரிகள் இந்தபல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகின்றன. திருவள்ளுவர் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு 10ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் 12-பி அந்தஸ்து பெறாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், யு.ஜி.சி. நிர்ணயித்திருந்த அனைத்து விதிமுறைகளையும் பூர்த்தி செய்தநிலையில், 12-பி அந்தஸ்து வேண்டி இப்பல்கலைக்கழகம் யு.ஜி.சி.க்கு விண்ணப்பித்திருந்தது.
இதைத்தொடர்ந்து யு.ஜி.சி. குழு அண்மையில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துக்கு நேரில்
வந்து ஆய்வுசெய்தனர். இந்த நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துக்கு 12-பி அந்தஸ்தை யு.ஜி.சி வழங்கியது.
மத்திய அரசு நிதி கிடைக்கும்
12-பி அந்தஸ்து பெற்றிருப்பதன் மூலம் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்துக்கு யு.ஜி.சி. நிதி மற்றும்மத்திய அரசின் பல்வேறு துறைகள், அமைப்புகளிடமிருந்து நிதி உதவி தாராளமாக கிடைக்கும்.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகமும், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகமும் இன்னும் யு.ஜி.சி. 12-பி அந்தஸ்து பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sent from my iPad
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக