வியாழன், 20 பிப்ரவரி, 2014

முதுகலை தமிழ் ஆசிரியர் பணி:விருதுநகரில் கே.வி.எஸ்.ஆண்கள்மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கலந்தாய்வு நடைபெற இருக்கிறது

விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட முதுகலை தமிழ்ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு முகாம் 21-ம் தேதி நடைபெற இருக்கிறது.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் முதுகலை தமிழ் ஆசிரியர்பணிக்கான தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இதில், விருதுநகர் மாவட்டத்தில் இருந்து 24 பேர் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை காலையில் கச்சேரி சாலையில் உள்ள கே.வி.எஸ்.ஆண்கள்மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற இருக்கிறது.
எனவே இக்கலந்தாய்வு முகாமில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் காலை 9.30 மணிக்கு முன்னதாக கலந்து கொள்ள வேண்டும் என மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக