'அரசு அங்கீகாரம் பெற்ற, தனியார் கல்லூரிகளில் படித்த செவிலியர்களையும்,
அரசு பணியில் நியமிக்க வகை செய்யும், அரசாணை செல்லும்' என, பிறப்பித்த உத்தரவை,
மறுஆய்வு செய்யக் கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த,2012, ஜனவரியில், சுகாதாரத் துறை, ஒரு அரசாணையை பிறப்பித்தது. அதில்,
'அரசு மருத்துவமனைகளில், செவிலியர் பணியிடங்களில், அரசு மற்றும் அரசின் அங்கீகாரம்
பெற்ற தனியார் கல்லூரிகளில் படித்தவர்களை, தேர்வு மூலம் நிரப்பிக் கொள்ள வேண்டும்' என, கூறப்பட்டு உள்ளது.
இந்த அரசாணையை எதிர்த்து, அரசு கல்லூரிகளில், செவிலியர் பயிற்சி பெற்றவர்கள்,மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுக்களை விசாரித்த, உயர் நீதிமன்ற தனி நீதிபதி,அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், அப்பீல் மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன. மனுக்களை விசாரித்த, அப்போதைய தலைமை நீதிபதி அகர்வால், நீதிபதி சத்தியநாராயணன்அடங்கிய, 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவில், 'தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும்' எனக் கூறியது.
இதை மறு ஆய்வு செய்யக் கோரி, மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவில், 'செவிலியர் பணியில் நியமிக்க, சட்டப்பூர்வ உரிமை கோர முடியாது. மறு ஆய்வுக்கு,மனுவில் தகுதியில்லை. மனுக்கள், தள்ளுபடி செய்யப்படுகிறது' என, கூறியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக