வியாழன், 13 மார்ச், 2014

News update :'குரூப் - 2' தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்களை வெளியிடசென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது

'குரூப் - 2' தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்களை வெளியிட, அரசு பணியாளர்கள்
தேர்வாணையத்துக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

உயர்நீதிமன்றத்தில், கோபிகிருஷ்ணன் என்பவர், தாக்கல் செய்த மனு: குரூப் - 2 பணிகளுக்கான தேர்வு, 2012, நவம்பரில் நடந்தது. தேர்வுக்குப் பின், 'கீ' விடைத்தாள் வெளியிடப்பட்டது. அதன்படி, 300க்கு, 210,மதிப்பெண், எனக்கு கிடைத்திருக்க வேண்டும். எழுத்துத் தேர்வில், துல்லியமாக, நான் பெற்ற மதிப்பெண் விவரம்,எனக்கு தெரியவில்லை. தேர்வு எழுதிய, அனைவர் மதிப்பெண்ணையும், வெளியிட, டி.என்.பி.எஸ்.சி.,யிடம்கோரினேன்; நடவடிக்கை இல்லை. எனவே, எழுத்து தேர்வில் கலந்து கொண்டவர்களின்மதிப்பெண்ணை வெளியிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை, நீதிபதி,நாகமுத்து விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஆர்.ராஜாராம் ஆஜரானார். டி.என்.பி.எஸ்.சி., சார்பில் ஆஜரான, வழக்கறிஞர் நந்தகுமார், ''கட் - ஆப் மதிப்பெண் பெறாததால், மனுதாரரை, நேர்முகத்தேர்வுக்கு அழைக்கவில்லை. இவரை விட குறைவான மதிப்பெண் பெற்றவர், ஆதிதிராவிட சமூகத்தைச்சேர்ந்தவராக இருந்தாலும், மாற்று திறனாளி பிரிவில் வருவதால், அழைப்பு அனுப்பப்பட்டது,'' என்றார்.
மனுவை விசாரித்த, நீதிபதி நாகமுத்து பிறப்பித்த உத்தரவு: தேர்வு முடிந்து, இறுதி முடிவு வெளியிடும்வரை, மதிப்பெண் வெளியிட முடியாது என்பதில், நியாயமில்லை; வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்.தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்ணை வெளியிட்டால் தான், ஏன் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படவில்லை என்ற விவரம், அவர்களுக்கு தெரிய வரும். தகவல் பெறும் உரிமை சட்டத்தில்,தனி தேர்வர்களுக்கு மதிப்பெண் தெரிவிக்கலாம் என்ற போது, அதை ஏன், பொதுவாக வெளியிடக் கூடாது?
'சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும்' என்பது போல், பொது மக்களுக்கு தெரியும் விதத்தில், டி.என்.பி.எஸ்.சி.,யின் அணுகுமுறையும் நேர்மையாக இருக்கவேண்டும். நேர்முகத் தேர்வுக்கு முன், தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்களை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டிருக்க வேண்டும்.எனவே, 2012, நவ., 4ம் தேதி, குரூப் - 2 தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்ணை, நான்கு வாரங்களில் வெளியிடவேண்டும். இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக