ஞாயிறு, 16 மார்ச், 2014

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் : கோரிக்கை அட்டை அணிந்து பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் போராட்டம்

கடந்த சட்ட பேரவைத் தேர்தலின் போதே புதிய பென்சன் திட்டம் ரத்து செய்யப்படும் மற்றும் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்படும் என்ற வாக்குறுதிகள் தரப்பட்டு தீர்க்கப்படாததால்,பிளஸ் 2விடைத்தாள் திருத்தும் பணியினை கோரிக்கைகள் அடங்கிய அட்டை அணிந்து போராட்டமாக தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் நடத்தவிருப்பதாக சிவகங்கை மாவட்டச் செயலர் பொ. சுப்பிரமணியன்தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். முதுகலை ஆசிரியர்களின் ஊதியமுரண்பாடுகள் களையப்பட்டு தொடக்க நிலை ஊதியம் உயர்த்தப்படவேண்டும். 2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில்நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி நியமன நாள் முதல் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும்நாள் முதல் இப்பணிகள்முடியும் வரை போராட்டம் நடைபெறுகிறது.

மொழிப் பாடங்களின் மதிப்பீட்டுப் பணி மார்ச் 21 முதலும், மற்ற மொழிப்பாடங்களின் மதிப்பீட்டுப் பணி மார்ச் 28 முதலும் நடைபெறவுள்ளது. என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக