சனி, 22 மார்ச், 2014

முதல் வாரத்தில் பி.இ., விண்ணப்பம், வழங்க முடிவு

மே மாதம், முதல் வாரத்தில் இருந்து, பி.இ., விண்ணப்பங்கள், வழங்கப்பட இருப்பதாக,
அண்ணா பல்கலை வட்டாரம், நேற்று தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு, மே 4 முதல், 20 வரை,அண்ணா பல்கலை மட்டும் இல்லாமல், பல்கலை உறுப்பு கல்லூரி மற்றும் அரசு பொறியியல்கல்லூரிகளில், விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன; 2.34 லட்சம் விண்ணப்பங்கள், விற்பனை ஆயின.ஜூன் இறுதி முதல், ஜூலை இறுதி வரை நடந்த மாணவர் சேர்க்கை கலந்தாய்வில், 1.5 லட்சம்இடங்கள் நிரம்பின; 50 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களுக்கு சேர ஆளில்லை.
வரும், 2014 15 கல்வி ஆண்டுக்கான, மாணவர் சேர்க்கைக்கு, மே மாதம், முதல் வாரத்தில் இருந்து, விண்ணப்பம் வழங்க முடிவு செய்திருப்பதாக, அண்ணா பல்கலை வட்டாரம், நேற்று தெரிவித்தது. "பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும்பணி, 24ல் துவங்கி, 15 நாளில் முடிய உள்ளது. பாட வாரியாக, மதிப்பெண் தொகுப்பு மற்றும்தேர்வு முடிவு தயாரிக்கும் பணிகள், அடுத்த, இரண்டு வாரம் வரை, "டேட்டா சென்டரில்' நடக்கும். எப்படியும்,
மே மாதம், 7 தேதிக்குள், பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே,மே மாதம், முதல் வாரத்தில் இருந்து விண்ணப்பம் வழங்குவது சரியாக இருக்கும் என, பல்கலை கருதுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக