திங்கள், 31 மார்ச், 2014

நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியராகப் பதவியுயர்வு வழங்கிட வேண்டும்

நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்குஉயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியராகப் பதவியுயர்வு வழங்கிட வேண்டும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாகப்பதவி உயர்வு வழங்கி நிரப்பிய பிறகே புதிய பணியிடங்களுக்கு ஆசிரியர்களை நியமனம் செய்திட வேண்டும்என்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள்கூட்டணி வலியுறுத்தியது.
அமைப்பின் எருமப்பட்டி, திருச்செங்கோடு, ராசிபுரம், புதுச்சத்திரம்,நாமக்கல் ஆகிய 5 ஒன்றியக் கிளைகள் தொடக்க விழா நாமக்கல்லில்சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர்வே.அண்ணாதுரை தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஆர்.நடேசன்
வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் க.தனசேகரன், மாவட்ட துணைச்செயலர்கள் பெ.சரவணக்குமார், பி.கருப்பன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் சா.கண்ணன், மு.வெங்கடாசலம் உள்ளிட்டோர்முன்னிலை வகித்தனர்.
அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள்கூட்டணி பொதுச்செயலர் சு.ஈசுவரன் புதிய கிளைகளைத்தொடக்கிவைத்து சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழ்ப்பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவியுயர்வு வழங்கிட வேண்டும், நடுநிலைப்
பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியராகப் பதவியுயர்வு வழங்கிட வேண்டும்,இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவியுயர்வு வழங்கி நிரப்பிய பிறகே புதிய காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் நியமனம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநிலத் தலைவர் கே.காமராஜ், மாநிலப் பொருளாளர் அ.ஜோசப் சேவியர்,மாநில துணைத் தலைவர் வி.எஸ்.முத்துராமசாமி, மாவட்டப் பொருளாளர் கு.சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.