செவ்வாய், 18 மார்ச், 2014

தகவல் உரிமைச் சட்டம் படும் பாடு அட்டகத்தி!

தகவல் உரிமைச் சட்டம் படும் பாடு அட்டகத்தி!; தவறாக பதில் தந்தும் தப்பிக்கும் அதிகாரி!

சாதாரண மக்களுக்கு ஆயுதமாகக்கொண்டு வரப்பட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டம், தமிழகத்திலுள்ளஅதிகாரிகள் மற்றும் தகவல்ஆணையத்தால் அட்டகத்தியாக மாற்றப்பட்டதற்கு உதாரணமாக, கோவையில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நாகை-கூடலுார்-குண்டல்பேட் தேசியநெடுஞ்சாலை (என்.எச்.67), கோவை நகருக்குள்
ஊடுருவிச் செல்வதைத் தவிர்க்கும் பொருட்டு, பை-பாஸ் அமைப்பதற்கு தேசியநெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டது; ஆனால், விவசாயிகளின் எதிர்ப்பு, மாநில அரசின் ஒத்துழைப்பின்மை, ஆணையத்தின்பிடிவாதம் உள்ளிட்ட பல காரணங்களால் அந்த
திட்டமே கைவிடப்பட்டு விட்டது.இந்நிலையில், இந்தபை-பாஸ் திட்டத்துக்காக மேற்கொள்ளப்பட்ட நில அளவீடு குறித்த விபரங்களை, தகவல் பெறும் உரிமைச்
சட்டத்தில் வழங்குமாறு கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்)க்கு, கோயம்புத்துார் கன்ஸ்யூமர் காஸ்செயலர் கதிர்மதியோன் மனு அனுப்பியிருந்தார். அதற்கு உரிய காலத்திற்குள் அவருக்குப் பதில் வரவில்லை.
அதனால், மேல் முறையீட்டு அலுவலரான மாவட்ட வருவாய் அலுவலர்க்கு மனு அனுப்பினார்; அதற்கும் பதில் கிடைக்கவில்லை; பல நாட்கள் கழித்து, நேர்முக உதவியாளரிடமிருந்து ஒரு பதில் வந்தது; நிலஅளவீடு தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு கலெக்டர் கருணாகரன் அனுப்பிய கடிதத்தின்நகலை அனுப்புவதற்குப் பதிலாக, புதிதாக 'டைப்' செய்யப்பட்ட ஒரு கடிதம் வந்தது.அதில், பை-பாஸ் திட்டம் தொடர்பாக கலெக்டர் தனது கருத்தை வெளிப்படுத்தியிருந்த பத்தாவது 'பாரா' மட்டும் தவிர்க்கப்பட்டு, கடிதத்தின் பிற பகுதிகள் 'டைப்' செய்யப்பட்டு, பதிலாக அனுப்பப்பட்டு இருந்தது.

இதே தகவலை, நெடுஞ்சாலைத்துறையின் செயலரிடம் கன்ஸ்யூமர் காஸ் கோரியிருந்தது; அதற்கு, கலெக்டரின் கடிதநகலே பதிலாக வந்து விட்டது.ஒப்பிட்டுப்பார்த்தபோது, தவறான தகவலைத் தருவதற்காகவே, கலெக்டரின் கடிதநகலை கலெக்டரின் நேர்முக உதவியாளர் அனுப்பாமல் இருந்தது உறுதியானது; எனவே, தகவறான தகவல்அனுப்பிய நேர்முக உதவியாளர் (துணை கலெக்டர்) மீது தகவல் பெறும் உரிமைச் சட்டம் 20 (1) மற்றும் (2)
பிரிவுகளில் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாநில தகவல் ஆணையத்துக்கு கதிர்மதியோன் மனு அனுப்பினார்.ஆனால், அதனை ஒப்புக் கொள்ளாத ஆணையம், 'தவறான தகவல் அனுப்பியதற்காக ஓர் அதிகாரியின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட ஆணையத்துக்கு அதிகாரமில்லை; இது தொடர்பாகஅரசு அல்லது கோர்ட்டை அணுகவும்' என்று உத்தரவு அளித்தது.
இந்த உத்தரவின் மூலமாக, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கமே கேள்விக்குறியாகியுள்ளது.கதிர்மதியோன் கூறுகையில்,
''இப்படியே ஒவ்வொரு மனுவுக்கும், ஒவ்வொரு மனுதாரரும் அரசுக்கும், கோர்ட்டுக்கும்
போய்க்கொண்டிருக்க முடியுமா? தவறான தகவல் தரும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க
ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என்றால், இந்த சட்டத்தின் மீது மக்களுக்கு எந்த நம்பிக்கையும் ஏற்படாது; இதில் உரிய திருத்தம் செய்ய வேண்டுமென்று மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளோம்; இல்லாவிட்டால், இது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யவும் திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.


Sent from my iPad

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக