திங்கள், 7 ஏப்ரல், 2014

லோக்சபா தேர்தல்,இன்று துவங்குகிறது

ஒன்பது கட்டமாக நடக்கும் லோக்சபா தேர்தல்,இன்று துவங்குகிறது. முதல் கட்டமாக
இன்று, வட கிழக்கு மாநிலங்களான அசாமில், ஐந்து தொகுதியிலும்,
திரிபுராவில் ஒரு தொகுதியிலும் ஓட்டுப்பதிவு நடக்கிறது.
பதினாறாவது லோக்சபாவுக்கான தேர்தல்ஒன்பது கட்டமாக நடைபெற உள்ளது. இதுவரை இல்லாத வகையில், இம்முறை, பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தி, பா.ஜ.,
தேர்தலை சந்திக்கிறது.
பெரும் எதிர்பார்ப்பு : பா.ஜ., சார்பில், குஜராத் முதல்வர்நரேந்திர மோடியை, பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி, பா.ஜ., தேர்தலை சந்திக்கிறது. காங்., சார்பில்,ராகுலை மையப்படுத்தினாலும், அவரை உறுதியாக பிரதமர் வேட்பாளர் என அறிவிக்கவில்லை. இதனால், இந்த லோக்சபா தேர்தல், அரசியல் கட்சிகளிடமும், வாக்காளர்களிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சூழ்நிலையில், முதல் கட்டமாக இன்று, வடகிழக்கு மாநிலங்களான, அசாம், திரிபுரா மாநிலங்கள்தேர்தலை சந்திக்கின்றன.

அசாமில், தேஸ்பூர், கலியாபோர், ஜோர்கட், திப்ரூகர், லக்கிம்பூர், ஆகிய ஐந்து தொகுதிகளிலும், திரிபுரா மேற்கிலும் இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது. இத்தொகுதிகளில், நேற்று முன்தினம் மாலையுடன் பிரசாரம் முடிந்துவிட்டது. காங்., ஆளும் அசாம் மாநிலத்தில்,
பலமுனை போட்டி நிலவுகிறது. மத்திய அமைச்சர்களாக உள்ள ராணி நாரா, பவன்சிங் கட்டோவர் அசாம்முதல்வர் தருண் கோகாயின் மகன் கவுரவ் கோகாய் ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கும், திரிபுராவில், 13 பேர்போட்டியிடுகின்றனர். இத்தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், 10 முறை வெற்றி பெற்றுள்ளது.

முதல்முறை : அசாமில், உல்பா தீவிரவாதிகள் பிரச்னை இம்முறை கட்டுக்குள் இருப்பதாக, போலீசார்தெரிவித்துள்ளனர். கடந்த 30 ஆண்டுகளில், முதன் முதலாக, இம்முறைதான், வாக்காளர்களுக்கு தேர்தல்புறக்கணிப்பு குறித்து, உல்பா தீவிரவாதிகள் அழைப்பு எதுவும் விடுக்கவில்லை. உல்பா தீவிரவாதிகளில்முக்கியமானவராக கருதப்படும், ஹீரா சரானியா, "போடோ' அல்லாத பல்வேறு சமூக அமைப்புகளுடன்இணைந்து, சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் : அசாமில், முதற்கட்ட ஓட்டுப்பதிவுக்காக, 8,588 ஓட்டுச்சாவடிகள்
அமைக்கப்பட்டுள்ளன. இதில், 3,000 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு,
பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆறு தொகுதிகளிலும், திட்டமிட்டபடி,
இன்று காலை ஓட்டுப் பதிவு துவங்குகிறது. தேர்தல், அமைதியாகவும், சுதந்திரமாகவும்
நடப்பதை உறுதி செய்வதற்கு, போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அசாமில் மற்ற, ஒன்பது தொகுதிகளில் மூன்று தொகுதிகளுக்கு, வரும் 12ம் தேதியும்,ஆறு தொகுதிகளுக்கு, 24ம் தேதியும், தேர்தல் நடைபெற உள்ளது.
இதேபோல், திரிபுராவில் மற்றொரு தொகுதிக்கு, ஏப்ரல் 12ல் தேர்தல் நடக்கிறது. இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு, 9ம் தேதி ஏழு தொகுதிகளில் நடக்கிறது. இதில் அருணாச்சல், மேகாலயா, மணிப்பூர் ஆகியவை அடங்கும்.அதற்குப் பின் அடுத்தடுத்த கட்டங்களில், நடைபெறும் ஓட்டுப்பதிவுகளை அடுத்து, கடைசி கட்ட தேர்தல், மே,
12ம் தேதி நடக்கிறது ஓட்டு எண்ணிக்கை, மே, 16ல், நடக்கவுள்ளது.முதல் கட்டத்தில் ஓட்டளித்த மக்கள், இதன் முடிவுகளை அறிய, 45 நாட்களுக்கு மேல் காத்திருக்க வேண்டும்.


Sent from my iPad

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக