திங்கள், 6 ஜூலை, 2015

'ஜாக்டா' அமைப்பு இன்று கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் மனு

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
19 ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் இன்று பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் மனு
கொடுக்க உள்ளனர்.
அரசு அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான 'ஜாக்டா' அமைப்பு
பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் இளமாறன் தலைமையில் சென்னையில்
நடந்தது.ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் பள்ளிக்கல்வி அதிகாரிகளை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி இன்று காலையில் பள்ளிக்கல்வி
இயக்குனர் கண்ணப்பனை நேரில் சந்தித்து ஜாக்டா நிர்வாகிகள் மனு அளிக்க உள்ளனர்.