திங்கள், 27 ஜூன், 2016

ஸ்வயம் ஆன்லைன் இலவச இணையதளம் படிப்பு சேவை ஆகஸ்டு 15 சுதந்திர தினத்தன்று தொடங்க உள்ளது

மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில் ஸ்வயம் ஆன்லைன் இலவச இணையதளம் படிப்பு சேவை ஆகஸ்டு 15 சுதந்திர தினத்தன்று தொடங்க உள்ளது என்று பல்கலைக்கழக மானியக்குழு துணைத் தலைவர் ஹெச்.தேவராஜ் கூறினார்.

சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் 12 வது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் அவர்

மேலும் பேசியதுபொறியியல் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டாமல் இருப்பதும்,1 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன என்பதும் நல்ல செய்தி அல்ல.

பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்காமல் இருப்பதற்குக் காரணம் அவர்கள் வேலைவாய்ப்பு பெறும் தகுதியுடையவர்களாக உருவாக்கப்படுவதில்லை.

இந்நிலை மாற்றப்பட வேண்டும்.மாணவர்களின் தொழில்நுட்ப அறிவாற்றலை மேம்படுத்த பல்வேறு நாடுகளைச் சார்ந்த பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்வயம் ஆன்லைன் இலவச படிப்பு சேவை மூலம்  10 பிராந்திய மொழிகளில் வழங்கப்படவிருக்கும் 500 பாடத்திட்டங்களை உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பயன்படுத்தி தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.