கடந்த 2009-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள், விளிம்பு நிலை மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப் பட வேண்டும். இதற்கு ஆகும் செலவை (பள்ளிக்கு நிர்ணயிக்கப் பட்ட கல்விக் கட்டணம்) சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகத் துக்கு அரசு வழங்கிவிடும். சிறு பான்மையினர் பள்ளிகளுக்கு மட்டும் இந்த சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2011-ல் தொடங்கி கடந்த 5 ஆண்டு காலமாக இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது. எனினும் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டை பெரும் பாலான தனியார் பள்ளிகள் முழுமை யாக கடைபிடிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதுகுறித்து நெல்லை மனோன்மணியம் சுந்தர னார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வி.வசந்திதேவி கூறும்போது, "இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி இடஒதுக்கீடு வழங்குவதை பெரும் பாலான பள்ளிகள் பின்பற்றுவதே இல்லை. கல்வித்துறையும் தனியார் பள்ளிகளுக்கு சாதகமாகவே நடந்துகொள்கிறது.

பொறியியல் படிப்பில் பின்பற்றப் படும் ஒற்றைச்சாளர முறை மாண வர் சேர்க்கை முறையைக்கூட இந்த இடஒதுக்கீட்டு மாணவர் சேர்க் கையில் பின்பற்றலாம்" என்றார்.

தேவை இயக்கம் ஒருங்கிணைப் பாளர் ஏ.த.இளங்கோ கூறும் போது, "25 சதவீத இட ஒதுக்கீட் டில் எத்தனை இடங்கள் உள்ளன என்ற விவரங்களை அனைவருக் கும் தெரியும்படி அறிவிப்புப் பலகையில் வெளியிட வேண்டும். ஆனால், 99% பள்ளிகள் இதை கடைபிடிப்பதில்லை.

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படு கிறதா இல்லையா என்பதை ஆய்வு செய்ய சமூக ஆர்வலர்கள், கல்வித்துறை அதிகாரிகள் அடங் கிய கண்காணிப்புக் கமிட்டி அமைக்க வேண்டும். இந்த கமிட்டி தனியார் பள்ளிகளில் ஆய்வு மேற் கொண்டு ஒவ்வொரு வாரமும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்றார்.

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட் ரிக் பள்ளிகள் சங்கப் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.நந்தகுமார் கூறும்போது, "ஏழை மாணவர் களுக்கான 25 சதவீத இடஒதுக் கீட்டை பெரும்பாலான பள்ளிகள் நடைமுறைப்படுத்தி வருகின்றன. யார் யாருக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது, இடம் கொடுக்கப் படவில்லை என்றால் அதற்கான காரணம் என அனைத்து விவரங் களையும் கல்வித்துறை அதிகாரி கள் ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்கிறார்கள்.

இந்த கல்வி ஆண்டில் மட்டும் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சுமார் ஒன்றரை லட்சம் ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர்" என்றார்.

பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செய லாளர் பி.பி.பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறும்போது, "தனியார் பள்ளி களில் மொத்த இடங்கள், 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் வரும் இடங்கள் போன்ற விவரங்களை அறிவிக்க வேண்டும் என்று அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகள் கூறுகின்றன. தனி யார் பள்ளிகள் அருகே வசிக்கும் ஏழை மக்களிடம் கேட்டால் இந்த விவரங்கள் அவர்களுக்கு தெரி யாது. பள்ளிக்கு வெளியே அறி விப்பு வைத்தால்தானே அவர் களுக்கு விவரங்கள் தெரியும். கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி இடஒதுக்கீடு வழங்காத பள்ளி கள் மீது கிரிமினல் நட வடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

மூத்த கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன் கூறும்போது, "தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. மாணவர்களுக்கு தரமான கல்வியை தான் வழங்குவதற்குப் பதிலாக அந்த பொறுப்பை தனி யாரிடம் வழங்கி தன் பொறுப்பை அரசு தட்டிக்கழிக்கிறது.

தமிழகத்தில் 1978-க்கு பின்னரே தனியார் பள்ளிகள் வர ஆரம்பித்தன. தரமான கல் வியை அரசு வழங்கினால் தனி யார் பள்ளிகளில் ஏழை மாணவர் களுக்கு இடஒதுக்கீடு என்பதற்கு அவசியமே ஏற்படாது" என்றார்.

மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் (பொறுப்பு) வி.சி.ராமேஸ்வர முருகன் கூறும்போது, "ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதில் தமிழ்நாடுதான் முன்மாதிரி மாநில மாக விளங்குகிறது. இடஒதுக் கீட்டை பின்பற்றாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதை கண்காணிப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தலை மையில் கண்காணிப்பு குழுக்கள் செயல்படுகின்றன. இதில் மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி, உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்" என்றார்.