வெள்ளி, 21 பிப்ரவரி, 2014
முதுகலை தமிழ் ஆசிரியர் பணியிடத்துக்கான கலந்தாய்வு ஈரோடு மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலகத்தில் காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது.
2012-13-ம் கல்வி ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதுகலை தமிழ்ப்பாட ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களின் பெயர் பட்டியல் TRB இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட முகவரியில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஆன்லைன்மூலம் நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு மாவட்டக்கல்வி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதில் பங்கேற்பவர்கள் தாங்கள் எழுதிய தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு, கல்விச்சான்றிதழ்கள் மற்றும் இதர சான்றிதழ்களுடன் பங்கேற்க வேண்டும் என மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன் தெரிவித்தார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக