வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

10ம் வகுப்பு இன்று நடக்கவிருந்த, செய்முறை தேர்வு ஒத்திவைக்கப்பட்டது

தேர்வுத் துறை இணையதளத்தில், 10ம் வகுப்பு, "நாமினல்ரோல்' வெளியிடப்படாததால்,
இன்று நடக்கவிருந்த, செய்முறை தேர்வு, திடீரென ஒத்தி வைக்கப்பட்டது.

தமிழகத்தில், 10ம் வகுப்புக்கு, சமச்சீர்கல்வி முறையில், அறிவியல் செய்முறை தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது.மார்ச், 3ம் தேதி, பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்க உள்ளதால், அதற்கு முன், 10ம்வகுப்பு செய்முறை தேர்வை முடித்து விடும் நோக்கில், பிப்., 21ம் தேதி முதல்,செய்முறை தேர்வை நடத்த, தேர்வுத் துறை உத்தரவிட்டது. செய்முறை தேர்வு நடத்துவதற்கான, கண்காணிப்பாளர் பணிக்கு, வேறு பள்ளிகளில் இருந்து, ஆசிரியர்கள் ஒதுக்கப்பட்டு, அவர்களுக்கு,"ட்யூட்டி ஆர்டர்' வழங்கப்பட்டன. ஆனால், தேர்வுத் துறை, "நாமினல்ரோல்' வெளியிடவில்லை; இதனால்,மாணவர்களுக்கு, பதிவு எண் மற்றும் "ஹால் டிக்கெட்' வழங்க முடியாத, சூழல் உருவாகியது. இதையடுத்து,10ம் வகுப்பு செய்முறை தேர்வு, ஒத்தி வைக்கப்படுவதாக, நேற்று மாலை, கல்வித் துறை அலுவலர்கள்,பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, வாய்மொழி உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக