தருமபுரியில் வருகிற 22-ஆம் தேதி தளிர்கள், ஐந்திணை ஆகிய அமைப்புகளின் சார்பில் சிறுதானிய உணவுத் திருவிழா நடைபெற உள்ளது. இதுகுறித்து தளிர்கள், ஐந்திணை அமைப்புகள் புதன்கிழமை வெளியிட்டஅறிக்கை: நவீன கல்வி முறை, மேற்கத்திய கலாசாரம், இயற்கைப் பேரழிவுகள்,
புவி வெப்பமயமாதல் ஆகிய அனைத்துக்கும் முக்கிய காரணிகளாக விளங்குவது மாறிவரும்
நமது வாழ்க்கை முறையாகும். இயற்கை வாழ்வியல் முறையைக் கைவிட்டதாலும், ரசாயனத்துடன் இரண்டறகலந்துவிட்ட வேளாண் முறையைப் பின்பற்றுவதும் மனித உடலில் ஏராளமான
உபாதைகள் ஏற்பட முக்கியக் காரணமாக விளங்குகிறது. நாம் அன்றாட வாழ்வில் உணவுக்காகப் பயன்படுத்தி வரும் அரிசி,கோதுமையைக் காட்டிலும் பன்மடங்கு சத்துகள் நிறைந்த, பக்க
விளைவுகளையும் ஏற்படுத்தாத சிறு தானியங்களான கம்பு, கேழ்வரகு,திணை, வரகு, சாமை போன்றவற்றையே நம் முன்னோர்கள் விளைவித்து,உண்டு ஆரோக்கியமான வாழ்வை வாழ்ந்தனர். உணவே மருந்து என்ற நம் முன்னோர்களின் இந்த வாழ்வியல் முறையை விடுத்து மெல்ல மெல்ல அரிசி மீதும், கோதுமை மீதும் மோகம் கொண்டு அதையே மூன்று வேளையும்உள்கொண்டு வருவதே இன்று பரவலாக காணப்படும் பல உடல்உபாதைகளுக்கும், நமது நிலத்தடி நீர் வெகுவாகக் குறைந்து வருவதற்கும்,மண் தன் வளமிழந்து கொண்டிருப்பதற்கும் முக்கியக் காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இத்தகைய முறையை தவிர்த்து மீண்டும் நமது பாரம்பரிய உணவுப்பொருள்களைப் பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வின் ஒரு பகுதியாக வருகிற 22-ஆம் தேதி தருமபுரியில் மாற்று வாழ்வியலுக்கான ஒன்று கூடல்
நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தருமபுரி மதுராபாய் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ள இந்த
நிகழ்ச்சியில் இயற்கை வேளாண் ஆர்வலர்கள் பங்கற்று உரை நிகழ்த்துகின்றனர். விழாவின் நிறைவில் ரூ. 150 கட்டணம் அளித்து ஏற்கெனவே நுழைவுச் சீட்டு பெற்றவர்களுக்கு பாரம்பரிய உணவு வகைகளான கொள்ளுச் சாறு,தினை அல்வா, கேழ்வரகு லட்டு, வரகு பகுவடை, சாமை மல்லிச் சோறு,
பனிவரகு சாம்பார் சோறு, குதிரை வாலி புட்டு போன்ற உணவு வகைகள் பரிமாறப்படும் எனக குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக