.
தொலைதூர மற்றும் மலைப் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கும் தரமானகல்வியை வழங்கும் பொருட்டு மாநில அரசால் இணைய தளம் வாயிலாக"பள்ளிகளிலுள்ள வகுப்புகளை இணைத்து ஒருங்கிணைந்து பயிலும் திட்டம்"என்ற புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் திறன்மிக்க ஆசிரியர்கள், மாவட்ட வளமையத்திலிருந்தோ அல்லது தாங்கள் கற்பிக்கும் பள்ளிகளில்இருந்தோ தொலைதூர மற்றும் மலைப் பகுதிகளிலுள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்குப் பாடங்களைக் கற்பிக்க இயலும். இந்த திட்டத்தைத் துவக்கி வைக்கும் வகையில், முதற்கட்டமாக 288 அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 44,800 மாணவ மாணவிகள் பயன் பெற்றிட பள்ளிகளிலுள்ள வகுப்புகளை இணைத்து 24 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்து பயிலும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக